Run World Media: 11/23/18

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 23, 2018

பைக்கில் அரிவாளால் வீசியபடி சென்ற ரவுடி.. 7 வயது சிறுவனுக்கு தலையில் வெட்டு....அரிவாளால் வீசியபடி சென்ற ரவுடி, 7 வயது சிறுவனுக்கு வெட்டு.

தெருவில் நடந்து சென்ற 7 வயது சிறுவனை பைக்கில் வந்த 2 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வலியால் அலறி துடித்த சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்தான். சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டெய்லராக உள்ளார். இவருக்கு திருணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

மகன் பெயர் சந்துரு. 7 வயதாகிறது. அங்குள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படிக்கிறான். மழைக்காக சென்னையில் பள்ளிகள் நேற்று லீவு  விடப்பட்டிருந்தது.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மேலும் சந்துருவுக்கு உடம்பு சரியில்லை என்பதால், அவனது தாய்மாமா, ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தெருவில் நடந்து வரும்போது. அந்த வழியாக மின்னல் வேகத்தில் இரண்டு பேர் பைக்கில் வந்தார்கள்.


பின் பக்க மண்டை 
அவர்கள் கையில் பெரிய அரிவாள் இருந்தது. அதனை வேகமாக சுழற்றியபடியே இருந்தனர். அரிவாளை சுழட்டும்போதெல்லாம் கத்தி கூச்சல் போட்டார்கள். இந்த சத்தத்தை கேட்டு சந்துரு திடீரென திரும்பினான். அப்போது சுழட்டி கொண்டே வந்த அரிவாள் சிறுவனின் பின் பக்க மண்டையிலும், தோள் பட்டையிலும் பலமாக விழுந்தது. இதில் சிறுவனுக்கு ரத்தம் கொட்டியது.


மயங்கி சரிந்தான் 
வலி தாங்க முடியாத சிறுவன் அலறி துடித்து மயங்கி அங்கேயே சரிந்து விழுந்தான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மாமா சந்துருவை உடனடியாக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
சிறுவனுக்கு தையல் அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.நெற்றி, தோள்பட்டை, காது என்று பல இடங்களில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. சிறுவனின் தலை முடியை அகற்றி மொட்டை போட்டு விட்டு நெற்றியில் தையல் போடவேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்களாம்.


இளைஞர்கள் போதை 
 பைக்கில் வந்த இருவருமே ஃபுல் போதையில் இருந்திருக்கிறார்கள். சிறுவன் மயங்கி விழுந்ததும் அப்போதே தப்பி பைக்கில் பறந்து விட்டனர். ஆனால் அவர்கள் யார் என இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Postsஎன்ன ஆச்சு மெரினா கடற்கரைக்கு.. நுரையை கக்கியது, நிறம் மாறியது.. பீச்சுக்கு வந்தவர்கள் பீதி!மெரினா கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று, மக்களை பீதிக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நடந்தேறியது. மாலை வேளையில் அந்த பக்கமாக வாக்கிங் சென்ற பலரும் குடும்பத்தோடு சென்றவர்களும் இதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர் .

அலையோடு அலையாக, பொங்கிப், பொங்கி நுரை தள்ளிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சோப்பு நுரை போல பொங்கி காணப்பட்டது மட்டுமின்றி மெரினா கடலின் தண்ணீர்கூட அடர்ந்த பழுப்பு நிறமாக மாறியது.


கலர் மாறிய கடல் 
இந்த மாற்றங்கள் மக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியது. குறிப்பாக கடலின் உள் பகுதியில் இவ்வாறு கடலின் வண்ணம் மாறியதை தெளிவாக பார்க்க முடிந்ததாக அதை நேரில் பார்த்த மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கூவம் கழிவுகள் 
இதுபற்றி தேசிய கடலோர ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமண மூர்த்தி, கூறுகையில், இது போல கடலில் மாற்றம் மற்றும் நுரை ஏற்படுவது என்பது பருவமழை காலத்தின் ஆரம்பத்தில் இயல்பாக ஏற்படக்கூடியதுதான். கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் இருந்து வரக்கூடிய கழிவுகள் கடலில் சேர்கிறது. அப்போது கடலில் வீசும் கடுமையான காற்று காரணமாக இவ்வாறு நுரை கரை ஒதுங்குகிறது, என்று அவர் விளக்கம் அளித்தார்.


பெங்களூர் சம்பவம் 
பெங்களூரின் பெல்லந்தூர் ஏரியில் அவ்வப்போது இதுபோல நுரை பொங்கி கரை ஒதுங்கும். இதனால் சாலையில் வாகனங்கள் கூட போக முடியாது. இதற்கு காரணம் நகரில் உள்ள கழிவுகள், சாக்கடை கால்வாய் மூலமாக ஏரிகளை சென்றடைவதுதான்.


மெரினா சூழல் 
இந்த காரணத்தால் அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து, மாசுக்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போது சென்னையிலும் இதுபோன்ற பிரச்சினை தலை தூக்கி உள்ளது. இது மெரினாவின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

[வீடியோ] சினிமாவில் மட்டும் இப்படி காட்சி வைக்காமல் நிஜத்தில் இதுபோன்ற, காம கொடுரர்களை என்கவுண்டல போட்டு தள்ளுனால்தான் குற்றம் குறையும்.
சினிமாவில் மட்டும் இப்படி காட்சி வைக்காமல் நிஜத்தில் இதுபோன்ற,
காம கொடுரர்களை என்கவுண்டல போட்டு தள்ளுனால்தான் குற்றம் குறையும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


போர் அடித்தால் உல்லாசம்.. காதலன் வீட்டிற்கே சென்ற 20 வயது இளம்பெண்ணுக்கு காதலன் காண்பித்த அதிர்ச்சி.!தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது.
சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாதல் விவாகரங்கள் விபரீதமான விளைவில் தான் சென்று முடிவதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.


சமீபத்தில் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான வாலிபர் ராஜசேகரன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இடையில் நெருங்கி பழகிய காதல் ஜோடி நேரம் தனிமையில் சந்திக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நிலையை உணர்ந்து கொண்ட பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி வாலிபரிடம் கூறியுள்ளார்.


அவரும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மேலும் மேலும் இளம்பெண்ணிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு இளம்பெண் வாலிபரின் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயபடுத்தி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அந்த பெண்ணை பார்ப்பதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார் அந்த வாலிபர்.


இதையடுத்து அந்த பெண் அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது தான் தெரியவந்தது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும், இரண்டு மகள்கலும் உள்ளனர் என்று.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேற்கொண்டு ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சற்றுமுன் - காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றுகாஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும்.


புதுச்சேரிக்கு இன்று பள்ளி விடுமுறை.  நாகை   வருவாய் கோட்டத்திற்கு மட்டும் இன்று விடுமுறை. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி  ஆகிய வட்டங்களுக்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்