Run World Media: 11/27/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 27, 2018

என்ன நடக்கிறது சென்னையில்.. மீண்டும் மூட்டைகளில் சிக்கிய கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்! HL damaged and Cash

படியில் பயணம்.. நொடியில் மரணம்.. திருப்பூரில் பயங்கரம் HL danger of Foot board traveling

[வேலை வாய்ப்பு] 10, +2, டிகிரி முடித்தவர்களுக்கு தில்லி பொது நூலகத்தில் வேலைதில்லியில் செயல்பட்டு வரும் பொது நூலகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2. பட்டம் மற்றும் தட்டச்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 07

பதவி: Upper Division Clerk - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி சான்றிதழ் அல்லது டிசிஏ முடித்திருக்க வேண்டும்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
பதவி: Lower Division Clerk (LDC) - 01
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு30 வார்த்தைகள் அல்லது இந்தியில் 25 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பதவி: Multi-Tasking Staff (General) - 05
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150. இதனை Secretary Delhi Library Board, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dpl.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள்நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy Director (Administration) Delhi Public Library Dr. Shyama Prasad Mukherjee Mukherjee Marg Old Delhi Railway Station Delhi – 110006.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடிபிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் இணைந்து ரொமான்டிக் காமெடி பலந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவின் செயல்பாடுகள் அதிக விமர்சனங்களைச் சந்தித்தன. அதன் மூலம் அவர் அதிக கவனம் பெற்றார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

பிக்பாசில் அவரோடு இணைந்து கலந்துகொண்ட மகத் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம்.சி இயக்குகிறார். இவர் ஹாலிவுட் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். ரொமாண்டிக் காமெடி கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விபரம் விரைவில் வெளியாக உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மகத் தற்போது சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
 
‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா, ஹரிஷ் கல்யாண் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே பாணியில் மகத், ஐஸ்வர்யா களம் இறங்கி உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

படியில் பயணம்.. நொடியில் மரணம்.. திருப்பூரில் பயங்கரம்..பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டேதான் வந்தார்.. திடீரென தவறி விழுந்து எல்லார் கண்முன்னாடியே பலியானார் சின்னசாமி! பஸ் படிக்கட்டில் தொங்க வேண்டாம் என்று தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா கண்டக்டர்கள், டிரைவர்களும் சொல்லி கொண்டேதான் இருக்கின்றனர். 

ஆனாலும் படிக்கட்டில் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக இந்த சேட்டையை செய்வது கல்லூரி பிள்ளைகள்தான். எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. ஹீரோயிசம் காட்டுகிறேன் என்று எப்பவுமே அடாவடித்தனம்தான்!! ஆனால் எதிர்பாராத விதமாக பஸ்களில் கூட்டம் அதிகரித்தால் வயது வித்தியாசம் பாராமல் படிக்கட்டில் தொங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
 
இப்படித்தான் இன்றைக்கு திருப்பூர் மாவட்டத்திலும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து ஒரு பஸ் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சரஸ்வதி பஸ் என்று அதற்கு பெயர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பஸ்சில் இருந்திருப்பார்கள். அவ்வளவு கூட்டம்!!
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
ஸ்பீட் பிரேக்

அதனால் படிக்கட்டில் தொங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சின்னசாமி என்ற 45 வயது மதிக்கத்தக்க நபரும் படிக்கட்டில் தொங்கி கொண்டே வந்தார். அப்போது சாலையில் இருந்த ஸ்பீட் பிரேக்கை டிரைவர் கண்டுகொள்ளவே இல்லை. எவ்வளவு வேகத்தில் வந்தாரோ, அதே வேகத்தில் பஸ்ஸை அந்த ஸ்பீட் பிரேக் மீது ஏற்றி இறக்கினார்.


தலையில் அடி 
இதனால் பஸ் ஆட்டம் கண்டது. தொங்கி கொண்டிருந்த சின்னசாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடி விழுந்து ரத்தம் கொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பதற வைக்கும் இந்தக் காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.ஓவர் ஸ்பீட் 
உடனடியாக காமநாயக்கன்பாளையம் போலீசார் இது சம்பந்தமாக விசாரணையை ஆரம்பித்துள்ளனர். முதலில் பஸ்சை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர், கண்டக்டரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பொதுவாகவே பிரைவேட் பஸ்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஓவர் ஸ்பீடில்தான் ஓட்டப்படுகிறது. மற்றொன்று பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.


போக்குவரத்து விதி 
இதனால் இருக்கும் பஸ்ஸை பிடித்து ஊர் போய் சேர வேண்டும் என்றே எல்லாரும் முண்டியடித்து ஏறுகிறார்கள். எனவே பேருந்தை அதிகப்படுத்தி, போக்குவரத்து விதிகளை மதிக்கும், கடைப்பிடிக்கும் டிரைவர்களை நியமித்து பொதுமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


என்ன நடக்கிறது சென்னையில்.. மீண்டும் மூட்டைகளில் சிக்கிய கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்!சென்னை மாதவரத்தில் மீண்டும் 25 மூட்டைகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாதவரம் ரவுண்டானாவில் இருந்து மஞ்சம்பாக்கம் செல்லும் வழியில் 20 மூட்டைகள் கத்தரிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.


மாதவரம் ரெட்டேரி அருகே ஆட்டு மந்தை உள்ளது. இங்கு நேற்று கேட்பாரற்று பழைய 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் கத்தரிக்கப்பட்ட நிலையில் மூட்டைகளில் கிடந்தன. 
 
அதாவது மறுசுழற்சிக்காக கிழிக்கப்பட்ட நோட்டுகள் என கூறப்படுகிறது. மர்ம நபர்கள் மாதவரம் புழல் கொரட்டுர் போன்ற ஏரி கரைகளில் 35 மூட்டை பழைய கிழிந்த நோட்டுகளை திட்டமிட்டு வீசியுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

 உடனே அங்கு விரைந்து சென்ற மாதவரம் காவல்துறையினர் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தனர். அதில் கத்தரிக்கப்பட்ட நிலையில் பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கத்தரிக்கப்பட்ட பண மூட்டைகளை கைப்பற்றிய மாதவரம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இந்தநிலையில், மாதவரத்தில் இன்று மீண்டும் 25 மூட்டைகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளது மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Postsபெண்ணின் கண்ணீரைத் துடைத்து.. தலையைத் தொட்டு ஆறுதல் கூறிய ஆளுநர்!திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலையைத் தொட்டு ஆறுதல் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

புயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஆளுநரிடம் தங்களது இழப்பைக் கூறி அழுது புலம்பினர். அப்போது ஒரு பெண் அழுதபடி ஆளுநரிடம் பேசினார். உடனே அவரது கண்ணீரை தனது இரு கரங்களால் துடைத்து விட்ட ஆளுநர் புரோஹித் அப்படியே தலையையும் தொட்டு ஆறுதல் கூறினார். தொடர்ந்து வேறு சில கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டு மக்களைச் சந்தித்தார் ஆளுநர் புரோஹித்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்