Run World Media: 12/03/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 3, 2018

சிகிச்சைக்குப் பணமில்லை... மன உளைச்சலால் 80 வயது தாயைக் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயின் மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால், 80 வயது தாயை கழுத்தை அறுத்து மகனே கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை தகிசர் பகுதியில் வசித்து வருபவர் யோகேஷ் (53). தந்தையும், சகோதரனும் இறந்து விட்டதால் 80 வயது தாய் லலிதாவை இவரே பராமரித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் யோகேஷின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விடவே, தாயைக் கவனித்துக் கொள்வதற்காக தனது வேலையை ராஜினாமா செய்தார் யோகேஷ். இதனால் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர் தாயும், மகனும்


இந்நிலையில் வயோதிகம் காரணமாக அடிக்கடி நோய்வாய்ப் பட்டுள்ளார் லலிதா. அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் திண்டாடியுள்ளார் யோகேஷ். இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான யோகேஷ், தாயைக் கொன்றுவிட திட்டமிட்டுள்ளார். 
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கடந்த சனிக்கிழமையன்று இரவு அதிகளவு தூக்க மாத்திரைகளைப் பாலில் கலந்து கொடுத்து தன் தாயைக் கொல்ல முயற்சித்துள்ளார் யோகேஷ். ஆனால், நள்ளிரவு எழுந்து பார்த்த போது, லலிதா நன்றாக தூங்கிக் கொண்டிருக்கவே, அதிர்ச்சி அடைந்த யோகேஷ், தலையணையை வைத்து அழுத்தி லலிதாவைக் கொல்ல திட்டமிட்டார். 
 
ஆனால், அம்முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால், லலிதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் யோகேஷ். லலிதாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தார் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், யோகேஷைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய்க்கு மருத்துவச் செலவு செய்ய இயலாத காரணத்தினாலேயே இந்தக் கொலையைச் செய்ததாக யோகேஷ் ஒப்புக் கொண்டார். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


கல்யாண நாளில்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை..கல்யாணத்தன்றே மாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ஏற்படுத்தி உள்ளது. சறுக்குப்பாறையை சேர்ந்தவர் தினேஷ். இவர் லிப்ட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் நேற்று முன்தினம் மாலை ரிசப்ஷன் நடந்து முடிந்தது. நேற்று திருமணம் என நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதனால் நேற்று காலை கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மண்டபத்துக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது, தூங்கி கொண்டிருந்த மாப்பிள்ளையை எழுப்ப அவரது அம்மா அறைக்கு சென்றார். கதவு நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவே இல்லை.


மணமகள் குடும்பத்தார் 
அதனால் பதட்டமடைந்து ரூமின் ஜன்னல் வழியாக பார்த்தால், மாப்பிள்ளை தூக்கில் தொங்கி கொண்டு இருக்கிறார். இதையடுத்து கதவை உடைத்து, மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். இந்த தகவல் மணமகள் வீட்டுக்கு உடனடியாக சொல்லப்பட்டது.

சாப்பாடு நின்றுவிட்டது
ஆனால் அதற்குள் மண்டபம் நிறைய இரு வீட்டு சொந்தக்காரர்கள், நண்பர்கள் என குவிய தொடங்கி விட்டார்கள். எல்லார் கையிலும் பரிசு பொருட்களுடன் மணமக்களுக்காக காத்திருந்தார்கள். பிறகு எல்லோரும் விஷயம் தெரிந்து சோகமாக திரும்பி சென்றார்கள். தயாராகி கொண்டிருந்த கல்யாண சாப்பாடு அப்படி அப்படியே நின்றுவிட்டது.


பிடிக்கவில்லையா? 
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணை நடைபெறுகிறது. மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கா? என விசாரித்து வருகிறார்கள்.

தாழ்வு மனப்பான்மை  
ஆனால் மாப்பிள்ளை 10-ம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறாராம். கல்யாண பெண், டிகிரி முடித்திருக்கிறாராம். இதனால்கூட மாப்பிள்ளைக்கு தாழ்வு மனப்பான்மை இருந்து இப்படி முடிவுக்கு வந்திருப்பாரோ என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


லுங்கியை மடித்துக் கட்டி கையில் சரக்கு: என்னம்மா அமலா இப்படி பண்றீங்களேம்மாஅமலா பால் லுங்கி கட்டி கையில் சரக்குடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்டோர் நடித்த ராட்சசன் படம் வெற்றி பெற்றுள்ளது. அந்த ஹிட் கொடுத்த தெம்பில் அடுத்தடுத்த படங்களில் அமலா பால் உற்சாகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதோ அந்த பறவை போல, ஆடை என்று இரண்டு முக்கிய படங்களில் நடித்துள்ளார்.


அமலா பால் 
அமலா பால் காவி லுங்கி கட்டி, கையில் சரக்குடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சரக்கு 
அமலா லுங்கி கட்டியிருப்பதை பார்த்து சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவருக்கு லுங்கி நன்றாக உள்ளது என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்கள் தான் லுங்கியை மடித்துக் கட்டணுமா, பெண்கள் கட்டக் கூடாதா என்ன?


விமர்சனம் 
மது அருந்த ஆண்கள் தேர்வு செய்யும் இடத்தில் புகைப்படம் எடுத்துள்ளார் அமலா பால். அவரின் புகைப்படத்தை பார்த்து சிலர் கேவலமாக கமெண்ட் போட்டுள்ளனர். இது போன்ற ஆசாமிகளை அமலா பால் எப்பொழுதுமே கண்டுகொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் அவருக்கு லுங்கி அம்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மார்க்கெட்  
அந்தோ அந்த பறவை போல மற்றும் ஆடை ஆகிய படங்கள் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படங்கள். இந்த இரண்டு படங்களும் வெளியானால் அமலா பாலின் மார்க்கெட் மேலும் பிக்கப்பாகிவிடும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே அமலா பாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


10 வயசு சிறுமி.. மிரட்டி மிரட்டியே பாலியல் தொல்லை.. சப் இன்ஸ்பெக்டர்யூனிபார்மில் கையில் துப்பாக்கியுடன் விறைப்பாக நிற்கும் இவர்தான் 10 பெண் குழந்தையை நாசம் செய்தவர். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு.

மாதவரம் பால் பண்ணை போலீஸ் ஸ்டேஷனில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். வில்லிவாக்கம் ஜகநாதபுரம் பகுதியில்தான் குடியிருக்கிறார். இவர், நேற்று முன்தினம் தன் வீட்டு பக்கத்தில் தெருவில் 10 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.


அலறிய குழந்தை 
உடனே அருகில் சென்று அந்த குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த குழந்தையோ கத்தி அலறி உள்ளது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்தார்கள். ஆனால் அதற்குள் வாசு எஸ்கேப் ஆகி ஓட தொடங்கினார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


சரமாரியாக அடித்தனர்  
அதற்குள் என்ன நடந்தது என்று பொதுமக்கள் குழந்தையிடம் கேட்ட, அவளும் நடந்ததை கூற, ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த மக்கள் இன்ஸ்பெக்டரை பின்னாலேயே துரத்தி கொண்டு ஓடினார்கள். பிறகு விரட்டி பிடித்து சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.


உயரதிகாரிகள் நடவடிக்கை 
இன்ஸ்பெக்டர்மீது புகார் சொல்லி அவரை பிடித்து கொண்டு ஸ்டேஷன் வரவும் போலீசார் புகார் எதுவுமே மக்களிடம் வாங்கவில்லை. வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. உடனே இது சம்பந்தமாக உயர்அதிகாரிகளின் கவனத்துக்கு விஷயம் போனது.

4 மாதமாக தொல்லை 
பின்னர் உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. அப்போது காவல் நிலைய குழந்தைகள் நல அலுவலர் மூலம் விசாரணை நடத்தியதில் இன்னொரு பகீர் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த இன்ஸ்பெக்டர் சிறுமியை இப்படித்தான் 4 மாசமாக மிரட்டி மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என தெரியவந்தது.


போக்சோ பாய்ந்தது 
இதையடுத்து இன்ஸ்பெக்டரிமே நேரடி விசாரணை நடந்தது. கடைசியில் எல்லா தப்பையும் இன்ஸ்பெக்டர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டரை கைது செய்தனர்.

பணி ஓய்வு  
இந்த இன்ஸ்பெக்டருக்கு 57 வயசாகிறது. அடுத்த வருஷம் ரிடையர் ஆக போறார். இந்த லட்சணத்தில் இப்படி ஒரு கேவலத்தை செய்த சம்பவம் எல்லோருக்குமே பெரும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

விஜய் மல்லையாவின் உல்லாச படகு விற்பனை…! HL Vijay Mallaiya Boat

விஜய் மல்லையாவின் உல்லாச படகு விற்பனை…!பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன்வாங்கி விட்டு, லண்டனுக்கு ஓடியவர், பிரபல தொழிலபதிபர் விஜய் மல்லையா. இவரை இந்தியா கொண்டுவருவதற்கான வழக்கை லண்டன் உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.


இதனிடையே மல்லையாவின் பல்வேறு சொத்துக்களை முடக்கி வைத்தும், சிலவற்றை விற்றும் கடனை சரிக்கட்டும் நடவடிக்கைகளில் இந்திய வங்கிகளும், அமலாக்கத்துறையும் ஈடுபட்டு வருகின்றன.
அதனொரு பகுதியாக, மால்டா தீவில் கைப்பற்றப்பட்ட, விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாச படகு ஒன்று, மால்டா நீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தொகையில் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்பட அனைத்து இந்திய வங்கிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் கூறியுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை HL Train 18

இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனைஇந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன் மாதிரியாக கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்தின்போது, பயணம் செய்து இன்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் அதிவேக ரயில்கள் உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவே ரக ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.


‘ட்ரெயின் 18’ என பெயரிப்பட்டுள்ள இந்த ரயிலுக்கு தனியாக இன்ஜின் இல்லை. இழுவை வேகத்திறன் கொண்ட பெட்டிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அதிவேக ரயிலான சதாப்தி ரயிலை விடவும், இந்த ரயிலின் பயண நேரம், 15 சதவிகிதம் குறைவாக இருக்கும். சுமார் 100 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
‘வைபை’ வசதி, ஜிபிஎஸ் தகவல், ‘டச் பிரீ’ பயோ டாய்லெட், எல்இடி லைட்டுகள், பயணத்தின்போது ஏசியின் அளவை கூட்டி, குறைத்துக்கொள்ளும் வசதி என பல நாடுகளில் உள்ளது போன்ற வசதிகள் இந்த ரயிலில் செய்யப்பட்டுள்ளன.


இந்த ரயிலின் முதல் ஓட்டம் கோட்டா - சவாய் மாதோபூர் இடையே இன்று இயக்கப்பட்டது. அப்போது 180 கிலோ மீட்டர் தொலைவு வேகத்தில் அதிவேகமாக இந்த ரயில் பயணம் செய்தது. எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆட்டம் இன்றி அதிவேகமாக ரயில் பயணம் செய்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். முதல் பயணம் வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து விரைவில் அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவார்கள் எனத் தெரிகிறது. விரைவில் இந்த ரயில் சோதனை ஓட்டம் முடிந்து முக்கிய நகரங்களுக்கு இடையே சதாப்தி ரயில் போன்று இயக்கப்பட உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்