Run World Media: 12/05/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 5, 2018

Your First Whatsapp DP முதல் தடவை Whatsapp பயன்படுத்தியபோது DP கீழே...

கே நண்பரை மணக்கத் திட்டம்.. மனைவியைக் கொன்றார் இந்தியர்..இங்கிலாந்தில் மனைவியைக் கொன்றதாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் மிடில்ஸ்பர்கில் வசித்து வந்தவர் ஜெசிகா படேல். கடந்த மே மாதம் அவர் தமது இல்லத்தில் இருக்கும் போது மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 
உடல் முழுக்க காயங்கள் இருந்ததால் விசாரணையை அந்நாட்டு போலீசார் துரிதப்படுத்தினர். விசாரணையின் போது, போலீசாரின் சந்தேக வளையம் கணவர் மிதேஷ் படேல் மீது விழுந்தது. ஆனால், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுக்க விசாரணையை வேறு கோணத்தில் போலீசார் கொண்டு சென்றனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சிக்கிய ஆதாரங்கள் 
துரிதமான விசாரணையில், வகையாக மாட்டிக் கொண்டார் மிதேஷ். நீதிமன்றத்தில் அவர் எப்படி கொலை செய்தார் என்பது விவரிக்கப்பட... க்ரைம் கதைகளை மிஞ்சும் அளவுக்கு இருந்தது மிதேஷின் ப்ளான்.


காட்டிக் கொடுத்த சாட்டிங் 
தமக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு ஆண் நண்பருடன் இயற்கைக்கு மாறான உறவு இருந்ததை அவர் விவரித்துள்ளார். ஆண் நண்பரான அந்த மருத்துவருக்கு மிதேஷ் அனுப்பிய சாட்டிங்குகள் அவருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக இருந்தன.

கொல்ல வேண்டும் 
மனைவிக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது கதையை முடிப்பேன் என்று அவர் நண்பருக்கு அனுப்பிய செய்தி முக்கிய ஆதாரமாக போலீசார் சமர்ப்பித்துள்ளனர். அது தவிர, இணையத்தில் மனைவியை கொல்வது எப்படி, மனைவியை தாம் கொல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது என்று தேடியதும் மிதேஷ்க்கு பாதகமாக முடிந்தது.


வலுவான ஆதாரங்கள் 
ஆனால், நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மறுப்பது போல அவரும் மறுத்துள்ளார். இல்லம் திரும்பிய போது, மர்ம நபர்கள் கொள்ளை அடித்துவிட்டு தமது மனைவியின் கைகளை கட்டிச் சென்றதாக மிதேஷ் தெரிவிக்க, அதை முறியடிக்கும் விதமாக அரசு தரப்பில் வலுவான ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டன.

இன்சூரன்ஸுக்கும் குறி  
ஆண் நண்பருடன் வாழவும், மனைவியின் காப்பிடு பணத்தை பெறவும் மிதேஷ் செயல்பட்டுள்ளார். அதற்காக. இன்சுலின் மருந்தை ஊசியால் செலுத்தி, பின்னர் ஜெசிகாவின் முகத்தை பாலிதின் பையால் போர்த்தி கொன்றுள்ளார். விசாரணையில் அனைத்து ப்ளான்களும் வெட்ட வெளிச்சமாகி விட, வகையாக மாட்டிக் கொண்டார். குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் தண்டனையை தர தயாராகி வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்து இறங்கிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகும்பகோணத்தில் நள்ளிரவு ரயிலில் தனியாக வந்திறங்கிய இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்கு மூலம் பெறப்பட்டது. 

வட மாநிலம் ஒன்றை சேர்ந்த, சுமார் 23 வயது மதிக்கப்பட்ட இளம் பெண், கடந்த 2ம் தேதி இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் கும்பகோணம் வந்துள்ளார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் இறங்கிய அந்த பெண் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ஆட்டோ 
ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டு சென்றதாகவும், அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருவர் பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்து பார்த்து, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று அந்த பெண் முடிவுக்கு வந்துள்ளார்.


பாலியல் தொல்லை 
எனவே அச்சத்தால் அந்த பெண் ஆட்டோவிலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இளம்பெண்னுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.

போலீசில் புகார் 
அவர்களின் பிடியிலிருந்து தப்பிய இளம்பெண் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .இன்று காலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். தினேஷ், வசந்த், புருஷோத், அன்பரசன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி ரகசிய வாக்குமூலம் பெற்றார். அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


கும்பகோணம் வங்கி  
இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராவதில்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் அலுவலராக பயிற்சி பெற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

பாம்பு மேட்டரை சூப்பராக டீல் செய்த ஆஹா முதல்வர்.. அடடா நாராயணசாமி!ஒரு சாதாரண பாம்பு மேட்டரை வனத்துறையினர் சரியாக டீல் செய்யாததால் முதல்வரே தலையிடும் நிலைமை ஏற்பட்டது. அரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளியை சேர்ந்த தம்பதி ராஜா - விஜயா. 19 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். 

நேற்று இரவு ராஜா வீட்டில் இல்லை. விஜயா தன் பிள்ளைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, நடுராத்திரி 1 மணி இருக்கும். தடால்புடால் என பாத்திரங்கள் உருண்ட சத்தம் கேட்டதும் விஜயா அலறி அடித்து எழுந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கருப்பு கலர்
லைட்டை போட்டு பார்த்தால் அங்கே 5 அடி நீளத்துக்கு ஒரு பாம்பு ஒதுங்கி இருந்தது. கருப்பு கலராக இருந்த பாம்பை பார்த்ததும், விஜயா உட்பட பிள்ளைகளும் பயந்தனர். அது கருநாகப்பாம்பு. கடித்தால் அவ்வளவுதான்... கடுமையான விஷம் நிறைந்தது!!


அவசர போலீஸ்
நடுராத்திரிக்கு யாரையுமே கூப்பிட முடியவில்லை. அதனால் அவசர போலீஸ் 100-க்கு போன் செய்தார். அவர்களும் வனத்துறை ஆபீஸ் போன் நம்பர் தந்து அங்கே உடனே பேச சொன்னார்கள். அந்த நம்பருக்கு போனை போட்டால் யாருமே எடுக்கவில்லை.

டைரியை புரட்டினார் 
கண் முன்னால் 5 அடி நீள பாம்பு நெளிய பீதியுடன் நம்பரை விஜயா போட்டு கொண்டே இருந்தார். கடைசிவரை எடுக்கவே இல்லை. அந்த நேரத்தில் மகன் வசந்துக்கு ஒரு ஐடியா வந்தது. வீட்டில் இருந்த அரசு தொலைபேசி எண்கள் கொண்ட டைரியை புரட்டினார். அதில் முதல் நம்பரே முதலமைச்சர் நாராயணசாமி போன் நம்பர் இருந்தது.


பயமா இருக்கு சார்  
உடனே முதல்வருக்கு போன் செய்தார் வசந்த். தூங்கி கொண்டிருந்த நாராயணசாமிதான் போனை எடுத்து பேசினார். "எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டது, போலீஸை கூப்பிட்டோம், வனத்துறையை கூப்பிட்டோம், யாருமே உதவிக்கு வரல. எங்களுக்கு பயமா இருக்கு" என்றார்.

2 பேர் விரைவு  
உடனே நாராயணசாமி "சரி... யாரும் பயப்படாதீங்க... பாம்பை பிடிக்க உடனே ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லி அதிகாரிகளுக்கு போன் செய்தார். உடனடியாக ஆட்கள் 2 பேர் விஜயா வீட்டிற்கு வந்தனர். அங்கு பதுங்கி இருந்த பாம்பை பிடித்து கொண்டு போனார்கள். அதன்பிறகுதான் விஜயா குடும்பத்துக்கு நிம்மதியானது.


விசாரித்தார் 
 ஆனால் இதில் ஹைலைட் என்னவென்றால், இன்னைக்கு காலையில் முதலமைச்சர் நாராயணசாமி, நைட் வந்த நம்பருக்கு போன் செய்து விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் நிறைய பாம்பு உள்ளது, அதனை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, உதவி புரிந்து உயிரை காப்பாற்றியதற்காக நன்றியும் சொன்னார்கள்.

எம்எல்ஏ நேரில் ஆய்வு
இதற்கு பிறகும் நாராயணசாமி இந்த பாம்பு மேட்டரை விடவில்லை. விஜயா சொன்ன அந்த இடத்துக்கு தொகுதி எம்எல்ஏவை அனுப்பி பாம்பு நடமாட்டம் குறித்து சொல்லி அனுப்பி வைத்தார். எம்எல்ஏவும் புதர்கள் நிறைந்த அந்த பகுதிகளை பார்வையிட்டு, மண்டிகளை அகற்றி, பாம்புகள் நடமாட்டம் இல்லாதவாறு செய்வதாக குடியிருப்புவாசிகளுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தம்பிதுரைக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிலோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை, நெஞ்சுவலி காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 
முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவஞ்சலி சென்னையில் இன்று நடைபெற்றது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதையொட்டி, தம்பிதுரை சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகலில், தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.


இதுகுறித்து நெருங்கியவர்களிடம் கூறியதும், தம்பிதுரையை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசிசியூ பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பிதுரையை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர், துணை முதல்வர் இரவு அப்போலோ செல்கின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ஆண்களே! உங்கள் மனைவி உங்களை வெறுக்கும் போது தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!!!திருமணம் என்றாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிதாக பூக்கவுள்ள பந்தத்தின் அஸ்திவாரமாகும். வாழ்க்கை என்னும் வண்டியை ஒன்றாக பூட்டிய இரண்டு மாடுகளாக கணவனும் மனைவியும் இழுத்து செல்வார்கள். அதில் ஒன்று மக்கர் செய்தாலும் சரி வண்டி நின்று விடும். ஆகவே, கணவன் மனைவியின் தாம்பத்ய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓட வேண்டுமானால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். 


 
உங்கள் திருமண வாழ்க்கையில் உங்கள் மனைவி உங்களை வெறுத்தால், உங்கள் வாழ்க்கையே துன்பம் நிறைந்ததாக மாறிவிடும். தன் மனைவி தன்னிடம் ஒழுங்காக நடந்து கொள்ளாத சூழ்நிலைகளை ஒவ்வொரு கணவனும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சந்திக்கவே செய்வார்கள். உங்கள் மனைவி உங்களை வெறுப்பது உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களிடம் அவர் காதல் உணர்வோடு இல்லையா? அது போதாதா, அவர் உங்கள் மீது சந்தோஷத்துடன் இல்லை என்பதை தெரிந்து கொள்ள? ஆனாலும் நீங்கள் அதை அப்படியே விட்டு விட முடியாது. 
 
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் அவரை அளவுக்கு அதிகமாக நேசித்து வந்தால், அவரின் வெறுப்பை போக்க கண்டிப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய முன் வருவீர்கள். அன்பார்ந்த ஒரு கணவனாக, உங்கள் மனைவியின் இதயத்தை நீங்கள் வெல்ல வேண்டுமானால், அதற்கு பல வழிகள் உள்ளது. அப்படி உங்கள் மனைவி உங்களை வெறுக்கும் போது நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. அந்த வெறுப்பை அப்படியே விட்டு விடாமால், அதனை போக்க நீங்கள் சில முயற்சிகளையும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அவரிடம் மனம் விட்டு பேசுங்கள் 
உங்கள் மனைவி உங்களை வெறுக்கும் போது என்ன செய்ய வேண்டும்? முதலில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து விதமான வெறுப்புகளுக்கு பின்னும் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதனைக் கண்டுபிடிக்க தவறினால், அவரிடம் நேரடியாகவாவது கேட்டு விடுங்கள். அவரருகில் அமர்ந்து, அவரின் வெறுப்பிற்கான காரணத்தை அன்புடன் கேளுங்கள். நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கும் கணவன் என்றால், அவரின் கருத்துக்களை முன்வைக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் உறவுகளில் நீங்கள் இழைக்கும் தவறுகள் உங்களுக்கு தெரிய வரும்.


உறவை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றுங்கள் 
உங்கள் மனைவி உங்களை வெறுத்தால் என்னவாகும்? திருமணம் என்னும் அழகிய பந்தம் சீர்குலைய தொடங்கும். அதனால் உங்கள் மனைவியின் இதயத்தை வெல்ல வாழ்க்கையில் சுவாரசியத்தை கொண்டு வாருங்கள். ஒரு பெண்ணை காதலித்தால் அவள் காதலை வெல்ல என்னவெல்லாம் செய்வீர்கள்? உங்கள் வாழ்க்கையே அந்த காதலை பொறுத்து தான் உள்ளதென்றால் என்ன செய்வீர்கள்? அதை அனைத்தையும் உங்கள் மனைவிக்கு செய்து உங்கள் திருமண வாழ்க்கையை சுவைமிக்கதாக மாற்றுங்கள். சுவாரசியம் இல்லாமல் வாழ்க்கையின் மீது சீக்கிரமே அலுப்பு தட்டி விடும்.

அவருக்கு பரிசளியுங்கள் 
ஆச்சரியமளிக்கும் வகையில் உங்கள் அன்பு மனைவிக்கு ஒரு பரிசளியுங்கள். அது உங்கள் திருமண வாழ்க்கையை கண்டிப்பாக மாற்றும். உங்கள் மனைவிக்கு எதன் மீதாவது நீண்ட நாள் ஆசை இருந்திருக்கும். அது விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட அந்த பரிசை அவருக்கு வாங்கிக் கொடுங்கள். திருமணமான சில வருடங்களில் மனைவியின் ஆசைகளை ஆண்கள் கவனிப்பதில்லை. உங்கள் வேலையில் நீங்கள் பிசியாக இருந்தாலும் சரி, அவரின் ஆசைகளை நிராகரிக்காதீர்கள். உங்கள் மனைவிக்காக உங்கள் பணம் மொத்தத்தையும் செலவு செய்தாலும் தப்பில்லை. கடைசி வரை உங்க கூட வரப்போவது அவங்க தானே!


நீங்கள் அவர்களுக்கு தேவைப்படும் வேளைகளில் அவருடன் இருங்கள் 
மனைவியின் சந்தோஷத்திற்காக ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்; ஆனால் அதெல்லாம் திருமணமான ஆரம்ப காலத்தில். வருடங்கள் செல்ல செல்ல, இந்த குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும். உங்கள் மனைவியின் மீது உண்மையாகவே அன்பு இருந்தால், உங்களின் தேவை அவருக்கும் தேவைப்படும் போது அவருக்கு ஒரு தூணாக நீங்கள் அவர் அருகில் ஆதரவாக இருக்க வேண்டும். இதுவும் பலவற்றை மாற்றும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் காதலை பிரதிபலிக்குமாறு உறுதி செய்யுங்கள் 
நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை பிரதிபலிக்குமாறு இருக்க வேண்டும். கண்டிப்பாக உங்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு மறைந்து மீண்டும் உங்கள் மீது அன்பு செலுத்த தொடங்கி விடுவார். உங்கள் மனைவி உங்களை வெறுத்தால் என்ன செய்ய வேண்டும் என இப்போது புரிந்து கொண்டீர்களா?

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


உங்களுக்கு என்ன நோய்கள் வரும்? நீங்கள் பிறந்த மாதத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்நம் எல்லோருக்கு மற்ற நாட்களை விட நமது பிறந்த நாள் மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கும். பிறந்த நாள் என்றாலே யாருக்கு தான் மகிழ்ச்சியாக இருக்காது. ஒவ்வொரு நிமிடத்தையும் இனிமையாக நாம் எண்ணி கொண்டாடுவோம். இந்த பிறந்த நாள் மாதங்களை வைத்து ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை கூட கணிக்க முடியுமாம்.

 
அதே போன்று அவருக்கு எப்படிப்பட்ட நோய்கள் வரும் என்பதையும் எளிதாக சொல்ல முடியுமாம். வாங்க, உங்க பிறந்த மாதம் உங்களை பற்றியும் உங்கள் ஆரோக்கியத்தை பற்றியும் என்ன சொல்கிறதுனு பார்ப்போம்.
நாம் பிறந்த மாதம் தான் நமக்கு அதிகமாக பிடித்த மாதமாகும். மேலும், நமக்கு பிடித்தமானவர்கள் பிறந்த மாதம் நாம் பிறந்த மாதத்தை விட ரொம்ப பிடிக்கும். இந்த பதிவில் ஒவ்வொரு மாதத்திற்கான சிறப்பம்சமும், அந்த குறிப்பிட்ட மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு ஏற்படுகின்ற உடல் பாதிப்புகளும் குறிப்பிடப்பட உள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ஜனவரி

மாதத்தின் முதல் மாதம் ஜனவரி தான். இந்த மாதத்தில் பிறந்தவர் ஆண்களுக்கு ஒரு சில முக்கியமான நோய்கள் வர கூடும். குறிப்பாக மலச்சிக்கல், அல்சர், குடல் சார்ந்த நோய்கள் இவர்களுக்கு ஏற்பட கூடும். மேலும், தைராய்டு போன்ற பிரச்சினைகளும் இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு ஏற்பட கூடும்.
 
பிப்ரவரி

“காதல் மாதம்” என்று அழைக்கப்படும் இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் வர கூடும். மேலும், மாரடைப்பு, அடிக்கடி நெஞ்சு வலி போன்றவையும் ஏற்படும். ஒரு சில ஆண்களுக்கு கீல்வாதம், தைராய்டு போன்ற பிரச்சினைகளும் உண்டாக கூடும்.

மார்ச்

மூன்றாம் மதமான இந்த மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள், எப்போதும் நல்ல மகிழ்ச்சியான மனதுடனே இருப்பார்கள். பெரும்பாலும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நல்லெண்ணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களுக்கு ஆஸ்துமா, கண் பார்வை குறைபாடு, இதய கோளாறுகள் ஏற்பட கூடும்.
 
ஏப்ரல்

“பிறரை முட்டாள்களாக ஆக்கும்” இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு எலும்பு சார்ந்த பிரச்சினை ஏற்பட கூடும். இவர்களுக்கு ஆஸ்துமா, ஹார்மோன்கள் குறைபாடும் உருவாகலாம். ஒரு சில ஆண்களுக்கு கட்டிகள் போன்றவையும் ஏற்பட கூடும்.

மே

இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் மன அழுத்தம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சர்க்கரை நோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட கூடும். மேலும், இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் மன அழுத்தத்தை குறைக்க சத்தான உணவுகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழித்தால் இதை போக்கி விடலாம்.
 
ஜூன்

கோடை கால மாதமான இந்த ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் இந்த உலகை நேர்மறையான(positive) கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். இவர்களின் மனம் அடிக்கடி தாவி கொண்டே இருக்கும். அதாவது, நிலையான பார்வை இவர்களுக்கு இருக்காதாம். மேலும், இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு சுவாச கோளாறுகள், இதய நோய்கள், கண் புரை நோய்கள் வரும்.

ஜூலை

ஏழாவது மாதமான இந்த ஜுலை மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு வேறு சில உடல் கோளாறுகள் ஏற்படுகிறது. ஆஸ்துமா, கீல்வாதம், கட்டிகள் போன்றவை வரலாம். மேலும், இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட காலமாக கழுத்து வலி இருக்க கூடும்.
 
ஆகஸ்ட்

இந்தியர்களின் புரட்சிகரமான மாதமாக கருதப்படும் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு, ஒரு சில குறிப்பிட்ட நோய்கள் வர கூடும். இவர்களுக்கு எலும்பு பிரச்சினை, தைராய்டு குறைபாடு, ஆஸ்துமா போன்றவை வரும்.

செப்டம்பர்

இது கொஞ்சம் சற்றே வித்தியாசமான மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வரும். இவர்களுக்கு வர கூடிய நோய்கள் நீண்ட நாட்கள் இவர்களுக்கு இருந்து கொண்டு, பிறகு தான் குணமாகும். மன அழுத்தம், தைராயிட், எலும்பு தேய்மானம் ஆகியவை வரலாம்.
 
அக்டோபர்

அடிக்கடி தலை வலி, ரத்த சோகை, போன்றவை இந்த மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு ஏற்பட கூடும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிக கொழுப்புகள் கொண்ட உணவை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும். மேலும், இவர்களுக்கு பெரும்பாலும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு நீண்ட நாட்களாக தோல் பிரச்சினை இருக்க கூடும். குறிப்பாக அரிப்பு, சொறி, சரும பிரச்சினை ஏற்படாமல். அத்துடன் மாரடைப்பு போன்றவையும் இவர்களுக்கு வர கூடும்.
 
டிசம்பர்

கடைசி மாதமான இந்த டிசம்பர் மாதத்தின் ஆண்களுக்கு, கண் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். இவர்கள் அதிக மன அழுத்தம் கொண்டவராக இருப்பார்கள். எனவே, இதய பலவீனம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த 12 மாதத்தில் உங்கள் மாதம் எதுவென்று அறிந்து, நோய்களை வருமுன் காத்து கொள்ளுங்கள் நண்பர்களே.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்