Run World Media: 12/11/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 11, 2018

என்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா?



நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம் நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள். நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அதை பார்த்த ரசிகர்கள் என்னது சதீஷுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர் முத்தையா போட்ட கமெண்ட் தான் இந்த பேச்சுக்கெல்லாம் காரணம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
திருமணம் 
சதீஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட இயக்குனர் முத்தையா அவருக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.


கீர்த்தி 
சதீஷும், கீர்த்தி சுரேஷும் காதலிப்பதாக முன்பு கிசுகிசு எழுந்தது. கீர்த்தியுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் வேறு வெளியானது.(அதுவும் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படம் தான்) அதை எல்லாம் மனதில் வைத்து தான் ஒரு நெட்டிசன் இப்படியொரு கேள்வியை கேட்டுள்ளார். ஏன் பாஸ், இதெல்லாம் உங்களுக்கே டூ மச்சா தெரியலையா?

விளம்பரம் 
வைபவுடன் நிற்கும் நடிகைக்கு தான் சதீஷ் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இது நிச்சயம் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் தான். இப்படி புகைப்படம் வெளியிட்டால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இதை பற்றி பேச வைக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். நீங்க நினைத்தது நடந்துவிட்டது பாஸுகளா.


ஒரே பெண்  
ஒரே பெண்ணை எத்தனை பேரு திருமணம் செய்வீர்கள்?. ஏற்கனவே வைபவின் புகைப்படத்தை பார்த்து வெங்கட் பிரபு வேறு ஷாக்காகிவிட்டார். ஒரே மாதிரியான புகைப்படத்தை வெளியிடாதீங்க. இது சதீஷின் நடிப்பு என்பது பார்த்தாலே தெரிகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தல்



கிட்டத்தட்ட 100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் கூறி உள்ளார்.


 அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் சேரிஸ் சுமித் கூறியதாவது:-

இந்தியாவுக்கு 100 அமெரிக்க குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை  அமெரிக்கா  கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்கா இதற்கான உண்மையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள் வீடு திரும்புவதற்கான  நம்பிக்கை இல்லை.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கடத்தப்பட்ட அமெரிக்க குழந்தைகள் திரும்பும் வரை, இந்திய குடிமக்களுக்கு கிடைக்கும் விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

டிரம்ப் நிர்வாகமானது தற்போதைய சட்டத்தை இன்னும் ஆக்ரோஷமாக பயன்படுத்த வேண்டும், அமெரிக்க குழந்தைகளை தங்கள் குடும்பங்களிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

கோல்டன்மேன் சட்டத்தின் குறிப்பிடத்தக்க தடைகளை அரசு செயலாளர் பயன்படுத்த வேண்டும்.

டிரம்ப் நிர்வாகம், ஹேக் உடன்படிக்கை, இருதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கோல்ட்மேன் சட்டத்தில் விவரிக்கப்பட்ட செயல்களுடன் கடத்தப்பட்ட குழந்தைகள் திரும்புவதற்கு ஒத்துழைப்பிற்கான கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பது சிறந்தது என்று நான் நம்புகிறேன் என்று கூறி உள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பாஜக தோல்வியை இப்படி கொண்டாடுகிறார்களே மக்கள்.. ஏன்?



5 மாநில தேர்தல் முடிவை வைத்து நெட்டிசன்கள் பாஜகவை விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். 5 மாநில தேர்தலின் முடிவுகள் முழுசும் வெளிவருவதற்குள், ட்விட்டரில் மக்கள் அலப்பறையில் இறங்கி விட்டார்கள். 
 
முன்பு "கோ பேக் மோடி"க்கு பதிவிட்டது போலவே, இப்போதும் மோடியின் போட்டோவை போட்டு கமெண்ட்டுகளை விதவிதமாக தெறிக்க விட்டு வருகிறார்கள். தமிழக மக்களுக்கு மோடியின்மேல் இவ்வளவு கோபம் இருக்க என்ன காரணம்? நாட்டு மக்களுக்கு அவர் தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றாமல் உள்ளது பொதுவான காரணம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மக்கள் சந்தோஷம் 
ஆனால் தமிழக நலன்களை மத்திய ஆட்சி தொடர்ந்து புறக்கணிக்க ஆரம்பித்தபோதே மோடிமேல் நம் மக்களுக்கு ஆத்திரமும், கோபமும், எதிர்ப்பும் அதிகமானது. அதன்விளைவுதான், 5 மாநிலங்களில் தேர்தல் முடிவு வெளியிட்டதற்கு தமிழகத்தில் அப்படிக் கொண்டாடி வருகிறார்கள் மக்கள். அப்படி ஒரு சந்தோஷத்தை மக்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.


தலையில் துண்டு
ஒரு மீமில், மோடி தலையில் துண்டை போட்டு கப்பல் கவிழ்ந்த மாதிரி இருக்கிறார். மற்றொரு போட்டோவில் ஸ்கிரீன் பின்னால் ஒளிந்து கொண்டு பார்க்கிறார் மோடி. மற்றொன்றில், அமித்ஷாவும், மோடியும் எப்படி தேர்தலில் தோற்றோம் என்று பேசி கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் போட்டோக்களை பதிவிட்டதுடன், அதன்கீழ் கமெண்ட்களையும் போட்டு நெட்டிசன்கள் இணையத்தையே சூடாக்கி விட்டுள்ளனர்.

மீண்டும் தோற்க வாழ்த்துகள் 
மீதம் இருக்க எல்லா எலக்‌ஷன்லயும் வெற்றிகரமான தோல்வி அடைய வாழ்த்துகள் சொல்றேன்ங்க.


ராகுல் காந்தி  
பாஜகவை விமர்சிக்கும் அளவிற்கு அவர்கள் படுதோல்வி அடையவில்லை. அதே சமயம் @RahulGandhi அவர்கள் @INCIndia கட்சியின் தலைவரான பின்னர் அவர் ஈட்டிய மிகப்பெரிய வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு #Rahulgandhi மீது நம்பிக்கை வருமா ?என்பது தான் கேள்வி.

எங்க வண்டியைக் காணோம் 
தமிழக பாஜக தலைமை அலுவலகம் யாருமே இல்லாமல் ஈ அடித்துகொண்டிருக்கிறது. அந்த போட்டோவை போட்டு, "எங்கடா இங்க இருந்த வண்டிய காணோம்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


முதலில் மகத், அடுத்து சிம்புவா?: தப்பில்ல தப்பில்ல ஐஸ்வர்யா தத்தா



ஐஸ்வர்யா தத்தா சிம்புவிடம் சொல்லாத ஆசையை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அவர் ஆரியுடன் ஒரு படம், சக பிக் பாஸ் போட்டியாளரான மகத் ராகவேந்திராவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
சிம்பு  
எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்றால் அது சிம்பு தான். நடிக்க வரும் முன்பே எனக்கு அவரை தான் பிடிக்கும். அவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் இந்த ஆசையை நான் இதுவரை சிம்புவிடம் கூறியது இல்லை என்று ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.



நயன்தாரா 
நயன்தாரா, அதிதி பாலன் ஆகியோர் எனக்கு பிடித்த நடிகைகள். அவர்கள் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

பிக் பாஸ்
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியேறிவிட்டு மீண்டும் அங்கு சென்றபோது, இந்த வீட்டில் இருப்பவர்களில் சிம்புவுக்கு பிடித்தவர் ஐஸ்வர்யா தத்தா தான். அவரின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா தான் ஹீரோயின் என்று தெரிவித்தார் அவர். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கும் சிம்புவுடன் சேர்ந்து நடிக்க ஆசை வந்துவிட்டது.


மகத் 
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடந்த பார்ட்டியில் சிம்பு ஐஸ்வர்யா தத்தா தோள் மீது கையை போட்டபடி எடுத்த புகைப்படம் வெளியானது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா சிம்பு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பிரஸ் மீட்டா? நோ தர முடியாது.. செய்தியாளர்களை பார்த்து தெறித்து ஓடும் பாஜக தலைகள்!



5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பாஜக தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றது. 

 
பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் பெரிய தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது. இந்த தேர்தல் தோல்வி காரணமாக பாஜகவினர் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ரத்து செய்யப்பட்டுள்ளது  
இந்த மோசமான தோல்வி காரணமாக பாஜக ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பு பல ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர்கள் தேர்தல் முடிவிற்கு பின் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


சந்திக்காமல் சென்ற ராஜ்நாத்  
அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செய்தியாளர்களை சந்திக்காமல் சென்று உள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து அவர் வெளியே வரும் சமயத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் ராஜ்நாத் சிங் அவர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார்.

மோடி சந்திக்கவில்லை 
அதேபோல் பிரதமர் மோடியும் இன்று செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் அதில் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தேர்தல் குறித்து இதில் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.


தமிழிசை பேட்டி
இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஒரே நபர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும்தான். ஆனாலும் அவர் ''இது வெற்றிகரமான தோல்வி'' என்று பாஜகவினரையே குழப்பும் வகையில் எதையோ பேசி செய்தியாளர்களை சமாளித்து இருக்கிறார். இவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்