Run World Media: 12/16/18

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 16, 2018

சென்னை வந்தால் புதுப்பதவி உறுதி: அடுத்த பிரதமர் ராகுல்தான்; துரைமுருகன் பேச்சுசென்னைக்கு வந்தாலே புதிய பதவிகள் தேடி வரும். அடுத்த பிரதமராக அமரப் போகிறார் ராகுல்காந்தி என்று துரைமுருகன் பேசினார்.

கருணாநிதி சிலை திறப்பு விழாப் பொதுக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது, இதில் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:
திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் அப்போதிருந்தே ஒரு தொடர்பு உண்டு. கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தது எங்களுக்குப் பெருமை. ஆளும் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் சோனியா காந்தி.
எதிரிகளை வகுக்கும் திட்டங்களை வீழ்த்தி தன்னிகரில்லா தலைவராக இருந்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.
சென்னைக்கு வந்தால் புதிய பதவிகள் தேடிவரும். ராகுல் காந்தி அப்படியொரு பதவியைப் பெறுவார். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.

 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் சென்னை வந்தனர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை சரியாக மாலை 5.18 மணிக்கு திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, அண்ணா சிலையும் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். துரைமுருகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.


பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா, திக தலைவர் வீரமணி, மதிமுக தலைவர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா, காங்கிரசை சேர்ந்த ப சிதம்பரம், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், குஷ்பு, தமாகாவை சேர்ந்த ஜிகே வாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விவேக் உள்பட பலரும் பங்கேற்றனர்.
சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு தலைவர்கள் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். தற்போது தலைவர்கள் நிகழ்ச்சியில் பேசத் தொடங்கியுள்ளனர். கருணாநிதி சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு ஸ்டாலின் மோதிரம் அணிவித்து மரியாதை செய்தார்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


புரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது!தி புரோக்கர் படத்தில் விமல் தரகராக நடிக்கிறார். விமல் நடிப்பில் அண்மையில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கும் படம் ஆண்களுக்கு பிடித்துள்ளது, பெண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விமல். தி புரோக்கர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை டார்ச்லைட் பட புகழ் மஜித் இயக்கி வருகிறார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

விமல் 
என் படத்தில் விமல் புரோக்கராக நடிக்கிறார். குண்டூசியில் இருந்து பெரிய வியாபாரம் வரை அனைத்துக்குமே புரோக்கர்கள் தேவைப்படுகிறார்கள். புரோக்கர்கள் டீல் பேசி முடிக்க எந்த அளவுக்கு செல்வார்கள் என்பதை இந்த படத்தில் காமெடியாக காட்டுகிறோம் என்கிறார் மஜித்.


தரகர்
நிலம் முதல் திருமணம் வரை அனைத்தையும் முடித்துக் கொடுக்கும் புரோக்கராக நடிக்கிறார் விமல். அண்ணாதுரை படத்தில் நடித்த டயானா சம்பிகா விமல் ஜோடியாக நடிக்கிறார். தற்போதைக்கு சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்களுக்கு இங்கு தான் படப்பிடிப்பு. அதன் பிறகு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று மஜித் தெரிவித்துள்ளார்.

பழக்கம் 
நான் வாடகைக்கு வீடு தேடியபோது புரோக்கர் வழியாகத் தான் தேடினேன். அதனால் புரோக்கர்களுடன் பேசிய அனுபவம் உள்ளது. இனிமையாக பேசி அவர்கள் காரியம் சாதிக்கும் விதம் எனக்கு பிடித்துள்ளது என்று விமல் தெரிவித்துள்ளார். தி புரோக்கர் என்று ஆங்கில தலைப்பு வைத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பாமல் இருந்தால் சரி.


யோகி பாபு  
தி புரோக்கர் படத்தில் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். யோகி பாபு ரொம்ப காஸ்ட்லியான காமெடின். அவர் இந்த படத்தில் நடிக்கிறார் என்றால் காமெடி தூக்கலாக இருக்கும் என்று நம்பலாம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


அதிவேகம்.. வலுப்பெற்ற பேய்ட்டி.. சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக சென்னையில் நாளை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. 


ஆந்திராவில் பேய்ட்டி புயல் கரையை கடக்க உள்ளது. நாளை பிற்பகல் கரையை கடக்கும். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டனம் - காக்கிநாடா இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதனால் ஆந்திராவில் குண்டூர், கோதாவரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு எவ்வளவு அருகில் புயல் கரையை கடக்கிறதோ அந்த அளவிற்கு புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படும்.


மிக அருகில் 
இந்த புயல் இப்போது ஆந்திராவை விட சென்னைக்குத்தான் அருகில் இருக்கிறது. சென்னைக்கு இந்த புயலால் பெரிய பாதிப்பு கிடையாது. ஆனால் சென்னைக்கு மிக அருகில் வந்துவிட்டு பின் இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை  
 இதனால் சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இன்றும் நாளையும் இந்த புயலால் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னையை போலவே வடதமிழ்கத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


எங்கு உள்ளது  
இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இது சென்னையில் இருந்து 130 கிமீ தூரம் வரை நெருக்கமாக வரும் என்று கூறியுள்ளனர். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் இருந்து விலகி ஆந்திரா நோக்கி செல்லும்.

காற்று வீசும்  
இந்த புயல் சென்னையை நெருங்கும் போது சென்னையில் பெரிய அளவில் காற்று வீச வாய்ப்புள்ளது. ஆனால் கஜா புயல் அளவிற்கு காற்று வீசாது. இந்த புயலால் சென்னை பெரிய அளவில் பாதிக்காது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. சென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்!குற்றச் சம்பவங்களை குறைக்கும் நடவடிக்கையாக சென்னையில் காவல்துறையினர் சார்பில் 1.80 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

 
உலகம் முழுக்க சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு வழங்குவது அதிகம் ஆகியுள்ளது. சென்னையிலும் சிசிடிவி பயன்பாடு தற்போது அதிகாரிகரித்துள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
பொது பாதுகாப்பு தொடர்பாக பிரபல நடிகர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம் என காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேறகொண்டு வருகின்றனர்.
அதே நேரம், வீடுகள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதில் கண்காணிப்பு கேமிராக்கள், முக்கிய துருப்பாக உள்ளன. இந்தநிலையில், அடையாறு பகுதியில் 10,242 ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனை தொடக்கி வைத்த பின்னர் போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டியளித்தார். அதில், சென்னை பாதுகாப்புமிக்க மாநகரமாக விளக்குகிறது என்றார். மேலும், சென்னயில் மாநகரில் 1.80 லட்சம் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும், விரைவில் அரசு நிதி கொண்டு மேலும் 1 லட்சம் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்றார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்