Run World Media: 12/18/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 18, 2018

நித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்?பாடி லேங்குவேஜூடன் ஆல் லாங்குவேஜ் கலந்து பேசி கொண்டிருந்த நித்தியானந்தாவைக் காணோமாம்!! 


இதுதான் இப்போதைக்கு ஹாட் நியூஸ்!! கர்நாடகத்தில் மெயின் "ஆபீஸ்" இருந்தாலும் உலகம் முழுவதும் பக்தர்களை குறிப்பாக பக்தைகளை கொண்டிருப்பவர் நித்தியானந்தா. வருஷத்துக்கு ஒருமுறை, ரெண்டு முறையாவது இவர் மீது ஏதாவது புகார்கள், சர்ச்சைகள், செய்திகள் மீடியாவை ஆக்கிரமிக்கும். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

குற்றப்பத்திரிகை தாக்கல்  
அப்படித்தான் 2010-ம் ஆண்டு பக்தை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதியப்பட்டது. இது சம்பந்தமாக ராம்நகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை பற்றி நித்தியானந்தாவிடமும் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட இருந்தது.


காலாவதி பாஸ்போட்
இந்த நேரத்தில் நித்யானந்தாவை காணவில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கு அவர் தப்பியிருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரியவில்லை. ஏனெனில், அவருடைய பாஸ்போர்ட் எப்போதோ காலாவதி ஆகிவிட்டது.
கள்ள பாஸ்போட்  
ஒருவேளை கள்ள பாஸ்போர்ட்டில் அவர் போயிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. இருந்தாலும், இந்த கேஸ் முடியும்வரை பாஸ்போர்டை புதுப்பிக்கக்கூடாது போலீசார் சொல்லி விட்டார்கள். அதன்படி நித்தியானந்தாவும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமலேயே இருக்கிறார்.


கன்னட சேனல்கள் 
இந்த நிலையில், பாலியல் சம்பந்தமான விசாரணைக்கு பயந்து அவர் வெளிநாட்டுக்குத்தான் தப்பியிருப்பார் என கூறப்படுகிறது. இந்த தகவல்களை நேற்று முதலில் வெளியிட்டதே கன்னட சேனல்கள்தான்.
கார்ப்பரேட் சாமியார் 
அதாவது, நேபாள நாட்டுக்கு சாலை மார்க்கமாக நித்தியானந்தா சென்று, அதன்பிறகு போலி பாஸ்போர்ட் மூலம் பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள கெய்மன் தீவுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த தீவில் கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தாவுக்கு என்ன வேலை என்று தெரியவில்லை. அங்கு போய் மறைந்து கொண்டால் இங்குள்ள பக்தைகளின் நிலை என்னாவது?


ஆபாச வீடியோ 
வெளிநாட்டுக்கு தப்பி சென்ற எத்தனையோ முக்கிய புள்ளிகளை நம் நாட்டு போலீசார் பிடித்து கொண்டு வந்துள்ளனர். விரைவில் நித்தியானந்தாவும் பிடிபடுவார் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் மீது நடிகை ஒருவருடன் இருந்த ஆபாச வீடியோ வெளியான வழக்கின்போது தலைமறைவான நித்தியானந்தா பின்னர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடிபட்டார் என்பது நினைவிருக்கலாம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


கந்து வட்டி.. கடன் தொல்லை.. விவசாயி தற்கொலைபோடி அருகே ராசிபுரத்தில் கந்துவட்டி கடன் தொல்லை காரணமாக ஏலக்காய் விவசாயி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த விவசாயி சதிஸ்குமார் (34), கந்து வட்டி பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தற்கொலை கொண்ட விவசாயி சதிஸ்குமாருக்கு முருகேஸ்வரி (30) என்ற மனைவியும் மிர்சன் (8) யஸ்வந்த் (2) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். சதிஸ்குமார் கேரளாவில் ஏலக்காய் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வந்தார்.
 
இவர் ராசிங்காபுரத்தை சேர்ந்த சிக்கிலியன் மற்றும் மதியழகன் ஆகியோரிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்று இருக்கிறார்.
இந்நிலையில் இருவரும் நேற்று இரவு சதிஸ் குமாரை அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதிஸ்குமார் நள்ளிரவில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைபற்றி வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பாவம் சாய் பல்லவி.. இருந்தாலும் மாரி 2 படக்குழு இப்டி பண்ணி இருக்கக்கூடாது !மாரி 2 படப்பிடிப்பின் போது எல்லோருமே தன்னை கலாய்த்ததாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் படம் மாரி 2. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். 


வரலட்சுமி, டோவினோ தாமஸ், அறந்தாங்கி நிஷா, ரோபோ சங்கர், கல்லூரி விநோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை சாய் பல்லவி, படப்பிடிப்பின் போது தன்னை எல்லோரும் கலாய்த்ததாகக் கூறினார்.


ஆசை நிறைவேறியது:  

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " அடுத்த பிரபுதேவா யாரு நிகழ்ச்சி மூலம் தான் என் திரைவாழ்க்கை ஆரம்பித்தது. அப்போது பிரபுதேவா சார் டான்ஸ் கொரியோவில் ஆட வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த ஆசை மாரி 2ல் தான் நிறைவேறியது. அதற்காக நான் பாலாஜி மோகனுக்கு நன்றி சொல்லிக்கொள்வேன்.


கலாய்த்தனர்: 

படப்பிடிப்பின் போது எல்லோருமே என்னை கலாய்ப்பார்கள். இப்போது யுவன் சங்கர் ராஜாவும் என்னை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். தனுஷ் எனது நடிப்பை மெருகேற்ற எனக்கு உதவியாக இருந்தார்.


செம ஜாலி: 

ஷூட்டிங்கின் போது சென்னை சாலைகளில் ஆட்டோ ஓட்டியது செம ஜாலியாக இருந்தது. எல்லோரும் என்னை அருமையாக பார்த்துக்கொண்டனர். என் மீது அன்பு செலுத்தும் தமிழ் மக்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்" என அவர் கூறினார்.


ஆனந்தி: 

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சாய் பல்லவி, மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தி என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சபரிமலையில் இன்று 18-ம் படி வழியாக சென்று ஐயப்பனை வழிபட்ட 4 திருநங்கைகள்சபரிமலையில் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்கு சென்ற திருநங்கைகள் 4 பேரும் 18-ம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பக்தர்கள் போராட்டம் காரணமாக இதுவரை இளம்பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சபரிமலைக்கு எரிமேலி வழியாக அனன்யா, திருப்தி, ரஞ்சுமோள், அவந்திகா ஆகிய 4 திருநங்கைகள் கருப்புச் சேலை அணிந்து தலையில் இருமுடி கட்டுடன் சாமி தரிசனத்துக்காக சென்று கொண்டிருந்தனர். இவர்களை இளம்பெண்கள் என்று நினைத்து ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திருநங்கைகளை திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து திருநங்கைகள் 4 பேரும் கேரள போலீஸ் ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாமை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அதில் தங்களை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். அதேபோல சபரிமலை நிலவரத்தை ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட்டு நியமித்த குழுவைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரனிடமும் இந்த திருநங்கைகள் மனு கொடுத்தனர்.

திருநங்கைகள் சபரிமலையில் செல்ல கோர்ட்டு தடை எதுவும் இல்லாததால் அவர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த திருநங்கைகள் 4 பேரும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய போலீசார் அனுமதி வழங்கினர்.

இன்று காலை 8 மணிக்கு திருநங்கைகள் 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்கு சென்றனர். கருப்பு சேலை அணிந்து, தலையில் இருமுடி கட்டுடன் சென்ற அவர்கள் 18-ம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். நெய் அபிஷேகமும் செய்தனர்.

பின்னர் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் பகல் 11.30 மணி அளவில் அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

இதுபற்றி திருநங்கைகள் கூறுகையில், திருநங்கைகளாக பிறந்த எங்களுக்கு இன்று சபரிமலையில் தரிசனம் செய்ததன் மூலம் விமோசனம் கிடைத்துள்ளது. சேலை எங்களுக்கு சவுகரியமான ஆடை. அதனால் அதனை அணிந்து கோவிலுக்கு வந்தோம். எங்களுக்கு இன்று சிறப்பான தரிசனம் கிடைத்தது. அதற்கு உதவி செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

உடம்பை பற்றி பேசிய நெட்டிசன்: ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய டாப்ஸிதன் உடல் பாகங்கள் பிடித்திருக்கிறது என்று கூறிய நெட்டிசனுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் டாப்ஸி. பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார் டாப்ஸி.


வெயிட்டான கதாபாத்திரங்களாக அவரை தேடி வருகிறது. இதனால் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ட்விட்டரில் தன்னை அசிங்கப்படுத்துபவர்களுக்கு கூட பொறுமையாக பதில் அளிக்கும் அவரின் குணம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

டாப்ஸி 
டாப்ஸி உங்களின் உடல் உறுப்புகள் எனக்கு பிடிக்கும் என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்தார். அதற்கு டாப்ஸியோ, வாவ் எனக்கும் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தது எது? எனக்கு மூளையில் உள்ள செரிபரம் என்று பதில் அளித்துள்ளார்.


ரசிகர்கள்
ட்விட்டர் கணக்கில் தனது ப்ரொபைல் புகைப்படத்தை வைக்கக் கூட துணிச்சல் இல்லாத நபர் தனது கடின உழைப்பால் முன்னேறிய டாப்ஸியை கலாய்த்துள்ளார். டாப்ஸியின் பதிலுக்காக அவரை பாராட்டுகிறேன் என்று ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

பதில் 
மூளை இல்லாதவரிடம் போய் மூளையை பற்றி பேசுகிறீர்களே டாப்ஸி என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


துணிச்சல் 
அந்த நெட்டிசன் உடல் பாகங்கள் என்று எதை சொல்கிறார் என்று தெரிந்தும் டாப்ஸி அவரை திட்டாமல் அசிங்கப்படுத்திய விதம் அனைவருக்கும் பிடித்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsFeatured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்