Run World Media: 12/22/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 22, 2018

கழிவறையை கழுவும்போது மிஸ்ஸான வைரமோதிரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் சாக்கடையில் கிடைத்தது!கழிவறையை சுத்தம் செய்யும் போது காணாமல் போன வைர மோதிரம், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. 


அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியைச் சேர்ந்தவர் பவுலா ஸ்டாண்டன் (60). 20வது திருமண நாளுக்கு, அவரது கணவர் மைக்கேல் வைர மோதிரம் ஒன்றைப் பரிசாக தந்துள்ளார். அதனை எப்போதும் கையில் அணிந்திருந்துள்ளார் பவுலா. 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


கடந்த 2009ம் ஆண்டு ஒருநாள் கழிவறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது மோதிரம் கழிவறையில் தவறி விழுந்தது. அம்மோதிரத்தை எடுக்க பவுலா எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அவை அனைத்தும் வீணாகின.
 
இதனால் சோகத்தில் இருந்த பவுலாவிற்கு, அவரது கணவர் அதே மாதிரி வேறு ஒரு வைர மோதிரத்தைப் பரிசாக அளித்தார். இந்நிலையில் உள்ளூர் பொதுப்பணித்துறை துறையினர் சமீபத்தில் பவுலா வீட்டிற்கு அருகே ஒரு சாக்கடையில் துப்புரவு வேலையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கடையில் இருந்து பவுலாவின் வைரமோதிரத்தை அவர்கள் கண்டெடுத்தனர். ஏற்கனவே இதுகுறித்து அவர்களிடம் பலமுறை பவுலா குடும்பத்தினர் புகார் தெரிவித்திருந்ததால், அவர்களிடமே அந்த மோதிரம் ஒப்படைக்கப்பட்டது. தொலைந்த மோதிரம் 9 ஆண்டுகள் கழித்து தற்போது திரும்ப கிடைத்ததால் பவுலாவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே!வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவசர தேவைக்காக மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


2017 ஜனவரி முதல் புதிய ஊதியம் நிலுவையில் உள்ளது. அனைவருக்கும் ஊதிய ஒப்பந்தம் அமைக்க வேண்டும், தேசிய வங்கிகள் இணைப்பு, கிராம வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் நாடு முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இந்த போராட்டத்தில் 3.2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகும். இதைத் தொடர்ந்து மீண்டும் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
 
இதனால் டிசம்பர் 21, 22, 23, 25 வரை வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் விடுமுறை என்பதால் மக்கள் பாதிக்காத வண்ணம் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் கூடுதலாக பணம் நிரப்பும் பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அவசர தேவைக்காக ஏடிஎம் மையங்களில் கூட்டம் கூட்டமாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் 26-ஆம் தேதி முதல் ஸ்டிரைக் நடைபெறும் என்பதால் புத்தாண்டையொட்டி சுற்றுலா செல்ல முயல்பவர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

220 கோடியைக் கொண்டு போய் கொட்டி கட்டிய பாலம்.. ஜல்லி ஜல்லியா பேந்து போச்சே!மார்த்தாண்டத்தில் 220 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், தமிழகம், கேரளா இடையே விரைவாக செல்லவும் 220 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது.
தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
அந்த மேம்பாலத்தில் கடந்த 19 ம் தேதி முதல் ஏராளமான வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளன. மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் சரக்கு வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குழி விழுந்துள்ளது. 
 
ஏற்கனவே அதிர்வு இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில் குழி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஐஐடி பொறியாளர்களின் ஆய்வு அறிக்கையை வெளிப்படையாக அறிவித்து அச்சத்தை போக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பகுதியை விரைவில் சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


17 வயசு பையன்.. 2 பிள்ளைகளின் தாய் செய்யும் வேலையா இது..2 பிள்ளைகளை பெற்ற தாய் 17 வயசு பையனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் 2 பேரையுமே போலீசார் தேடி வருகிறார்கள். 


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவன் பாலு. இவர் செய்யாறு அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். 
தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
 
கலசபாக்கம் அடுத்த பொற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமாவதி. இவருக்கு 27 வயதாகிறது. கல்யாணம் ஆகி ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.

அம்மா வீடு 
ஆனால் புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு பிரிந்து வந்துவிட்டார். அப்போது பெற்றெடுத்த இரண்டு குழந்தைகளையும் கணவனிடமே கொடுத்துவிட்டு, அம்மா வீட்டுக்கு கிளம்பி விட்டார். அம்மா வீட்டு தெருவில்தான் அந்த பாலுவின் வீடும் இருக்கிறது.


நம்பர் பரிமாற்றம்  
அதனால் அடிக்கடி தெருவில் பார்த்துகொண்டனர், சிரித்து கொண்டனர், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தனர், ஒருத்தருக்கொருத்தர் செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டு எந்நேரமும் போனிலேயே இருந்தனர்.

வீடு திரும்பவில்லை 
இந்நிலையில், கடந்த 11ம் தேதி காலேஜூக்கு சென்ற பாலு, திரும்பவும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பதட்டமான பெற்றோர், காலேஜூக்கு போன் செய்து, மகன் இன்னும் வீடு திரும்பவில்லை என்றனர்.


அக்கா வந்தாங்க.. 
அதற்கு கல்லூரி நிர்வாகிகள், "காலைலயே அவங்க அக்கா ஹேமாவதி வந்து கூட்டிட்டு போய்ட்டாங்களே, உங்க வீட்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க, தம்பி வந்தாதான் பிரச்சனையை சரி பண்ண முடியும் என்று சொன்னாங்க. அதனால ஒரு லட்டர் எழுதி வாங்கி கொண்டு மாணவனை அனுப்பி வைத்தோம்" என்றனர். ஹேமாவதி பாலுவை தம்பி என்று சொல்லி அழைத்து சென்றதை அறிந்த பெற்றோர் ஷாக் ஆனார்கள்.

தேடி வருகிறார்கள்
உடனடியாக அனக்காவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தார்கள். ஹேமாவதி என்பவர் யார் என்றே தெரியாது, தங்கள் மகனை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதால், எப்படியாவது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கதறினார்கள். இது சம்பந்தமான புகாரை பெற்று கொண்ட போலீசாரும் மாயமான 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


புத்தாண்டில் ஜாலி ரைடுக்கு பிளான் பண்றீங்களா.. ஸாரி பாஸ்.. இதைப் படிங்க முதல்ல!புத்தாண்டில் ஜாலி ரைடுக்கு தடை விதிக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 


மதுரையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், ஜாலி ரைடுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :  தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

நான் கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று அண்ணாநகரில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர் தன் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். அந்த விபத்தில் கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, செய்த வேலையும் பாதிக்கப்பட்டது. மேலும் எனது குடும்பத்தின் நிலையும் தலைகீழாக மாறி விட்டது. இவ்வாறு அந்த மனுவில் ராமமூர்த்தி கூறியிருந்தார். அந்த வழக்கானது நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது, மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், புத்தாண்டில் மதுரையில் ஜாலி ரைடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு அன்று ஜாலி ரைடு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டிருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதேபோல் புத்தாண்டில் ஜாலி ரைடுக்கு தடை விதிக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


மெரினாவில் குதிரை சவாரி.. சிறுமியை கடத்திய சிறுவன்..மெரினாவில் தோழியுடன் குதிரை சவாரி செய்ய சென்ற சிறுமியை கடத்தி சென்ற சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை முகப்பேர் மேற்கு கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெயிண்டரான இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பக்கத்தில் வசிக்கும் தோழியுடன் 13 வயது சிறுமி மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.

சவாரி  
அப்போது வீட்டுக்கு வந்த அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். ஆடையும் கிழிந்த நிலையில் இருந்ததை பார்த்து சிறுமியின் தாயார் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி கூறுகையில் மெரினாவில் இருக்கும் போது குதிரை ஓட்டும் அண்ணன் ஒருவர் குதிரையில் உட்காரவைத்து சவாரி செய்தார்.


அழுத சிறுமி 
அதன்பின்னர் என்னை வீட்டுக்கு அழைத்து சென்று 2 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்து மீண்டும் மெரினா கடற்கரையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று கூறி அழுதுள்ளார்.

பலாத்காரம்  
இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அப்போது மெரினாவில் குதிரை சவாரி நடத்துவோரில் சிலர் சிறுமிகள் இருவர் பெற்றோர் துணையில்லாமல் தனியாக வந்துள்ளதை தங்களுக்கு சாதகமாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.


விசாரணை  
சம்பவம் நடந்த இடம் மயிலாப்பூர் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கை திருமங்கலம் போலீஸார் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். இதையடுத்து விசாரணையில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் மைனர் என்பது தெரியவந்தது. அந்த சிறுவனிடம் போலீஸார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்