Run World Media: 12/28/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 28, 2018

பூடான் நாட்டிற்கு 4500 கோடி நிதி உதவி பிரதமர் நரேந்திர மோடி


பூடான் நாட்டிற்கு 4500 கோடி நிதி உதவி பிரதமர் நரேந்திர மோடி இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மக்களே..?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்....  ஷேர் மோர்... 

படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை

படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்ததைத் தட்டிக் கேட்ட தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு  கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் அவ்வப்போது தந்தையிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார் . இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை விக்னேஷ் காதலித்து வந்தது தந்தை சுந்தரராமனுக்கு தெரியவந்துள்ளது.
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை சுந்தரராமனின் தலையில் கல்லைப் போட்டு விக்னேஷ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த தண்டராம்பட்டு காவல்துறையினர் சுந்தரராமன் உடலை மீட்டதுடன் விக்னேஷை கைது செய்தனர்.

சமீபத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கல்லூரி மாணவி ஒருவர் குத்திக்கொன்ற கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.


மறுசுழற்சி செய்யமுடியாத, ஒரு முறையே பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டிக்‘ பைகள் உள்ளிட்ட பொருட்களை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பயன்படுத்த தடை விதித்து, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. 
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இந்த அரசாணையின்படி, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என உத்தரவிட்டது.
இந்நிலையில்,  அமைச்சர் கருப்பணன் செய்தியார்களிடம் கூறியதாவது:

பிளாஸ்டிக் பை தடைக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது, வியாபாரிகள் அச்சப்பட வேண்டாம். சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கில் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என தெரிவித்தார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை... திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2012-ம் ஆண்டு, வீட்டில் வேலை செய்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

அவரது கூட்டளியான ஜெயசங்கர் என்பவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா(15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். 

இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்தார். உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர் ஆகியோரை கைது செய்தனர். 2006-2011 வரை பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக ராஜ்குமார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 73 லட்சம் சேவை வரி, அபராதம் கட்டாத நடிகர் மகேஷ் பாபு… வங்கி கணக்குகள் முடக்கம்

சேவை வரி கட்டாத பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக இருந்து வருபவர் மகேஷ் பாபு. அவர் கடந்த 2007-08-ல் ஒரு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக செயல்பட்டு வந்தார். அதற்காக நடிகர் மகேஷ் பாபு, சேவை வரி ஏதும் கட்டாமல் இருந்து வந்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

சேவை வரியாக மகேஷ்பாபு ரூ. 18.5 லட்சத்தை செலுத்த வேண்டும். ஆனால் அதை அவர் கட்டாததால் வட்டி, அபராதம் என மொத்தம் ரூ. 73.5 லட்சத்தை நடிகர் மகேஷ் பாபு அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். ஆனால், அதில் எந்த தொகையையும் அவர் செலுத்தவில்லை. அதனை கண்டுபிடித்த வரிகளை வசூலிக்கும் ஜிஎஸ்டி துறை மகேஷ் பாபுவின் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகளை அதிரடியாக முடக்கம் செய்து உள்ளது.

இது குறித்து கூறிய ஜிஎஸ்டி துறை அதிகாரிகள், சேவை வரியை பெறுவதற்காக வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளோம். மகேஷ் பாபுவின் ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ. 42 லட்சத்தை பெற்றிருக்கிறோம். மீதமுள்ள தொகையானது ஐசிஐசிஐ வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும். அதனை தராவிட்டால் அந்த வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். அரசுக்கு மகேஷ் பாபு செலுத்த வேண்டிய தொகையை அவர் செலுத்தாத வரை அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நெஞ்சம் துடிக்கிறது.. குடிசையை சீரமைக்க முடியலை.. 10,000க்கு பெற்ற மகனை அடகு வைத்த பரிதாப குடும்பம்!

குடிசை வீட்டை சீரமைக்க முடியாமல் பெற்ற மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த அவலம் டெல்டாவில் நடந்துள்ளது. 

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தஞ்சையும் முக்கியமானது. புயல் போய் 40 நாட்கள் ஆகியும், இன்னமும்கூட அங்கு பலரது நிலைமை சீராகவில்லை. என்றுமே ஆறாத வடுவை புயல் ஏற்படுத்தினாலும், தொடர்ந்து மக்கள் படும் இன்னல் மேலும் மேலும் அவர்களை படுகுழியில் தள்ளி வருகிறது. இப்படித்தான் ஒரு குடும்பமும் இன்றைக்கு இந்த கோரத்தில் சிக்கியுள்ளது.  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

மாரிமுத்து 

பட்டுக்கோட்டை அருகே அண்ணா குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. இங்குள்ள வயல் நடுவில் குடிசை வீடு கட்டிக் கொண்டு விவசாயி கூலி தொழிலாளி மாரிமுத்து வாழ்ந்து வந்திருக்கிறார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பள்ளிக்கு செல்லவில்லை 

மூத்த மகன் சக்தி, இரண்டாவது மகன் பிரமையன், மூன்றாவது மகள் காமாட்சி, ஆவர். பிரமையனுக்கு 12 வயதாகிறது. மாரிமுத்து குடும்பத்துக்கு தமிழக அரசின் குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தினால், பிள்ளைகள் இதுவரை பள்ளிக்கு செல்லவில்லை எனகூறப்படுகிறது.

நிவாரணம் இல்லை  

இந்நிலையில்தான் கஜா புயல் தாக்கி மாரிமுத்துவின் குடிசை வீடு பறந்துள்ளது. மேலும் உரிய நிவாரணங்களும் மாரிமுத்து குடும்பத்துக்கு கிடைக்கவில்லை இதனால் வெயிலிலும் மழையிலும் நாட்களை இதுநாள் வரை நகர்த்தி வந்துள்ளார் மாரிமுத்து. எவ்வளவு காலத்துக்குதான் இப்படியே மழை, வெயிலில் குழந்தைகளை வைத்து கொண்டு வாட முடியும்? ஒரு கட்டத்தில் அவரால் வீட்டை சீரமைக்க முடியவில்லை.

ரூ.10 ஆயிரம் தேவை  

புதிய குடிசை கட்ட 10 ரூபாய் தேவைப்பட்டது. அடகு அவரிடம் எதுவுமே இல்லை. அதனால், தனது இரண்டாவது மகனான பிரமையனை தற்காலிகமாக அடகு வைத்து வீட்டை சீரமைக்க முடிவு செய்தார். அதன்படி 3 வாரங்களுக்கு முன்பு 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி, நாகை மாவட்டத்தில் பனங்குடி என்ற கிராமத்தை சேர்ந்த பண்ணை தோட்டத்து உரிமையாளர் சந்துரு என்பவரிடம் விற்று விட்டார்.

ஆடு மேய்த்தான்  

இந்த 3 வாரங்களாக, பண்ணை தோட்டத்தில் மட்டுமில்லாமல், ஆடு மேய்க்கும் வேலையிலும் சிறுவன் இதுநாள் வரை ஈடுபட்டு வந்திருக்கிறான். பண்ணையில் கொத்தடிமை போல சிறுவன் வேலை செய்யும் விஷயம் சிறுவர்கள் நல அதிகாரிகளின் காதுக்கு கடந்த 22-ம் தேதி வந்தது.

பெரமையா மீட்பு

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக பண்ணை தோட்டத்துக்கே சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது சிறுவன் பெரமையாவை மீட்டு விசாரணை நடத்தியபோதுதான் மாரிமுத்து மகனை விற்ற விஷயம் வெளியே வந்தது.

வழக்கு பதிவு 

இப்போது தஞ்சை சிறுவர்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளான். சிறுவனை விலைக்கு வாங்கிய சந்துரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தையிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

குறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது... அதைவிட அரிது என்று பிறப்பு குறித்தும் மானுடம் பற்றியும் அவ்வை மூதாட்டி அருளிய இந்த வாக்கு.. இன்றும் பேசப்படும் விஷயங்களில் ஒன்று. 


எவ்வித குறைபாடும் இல்லாமல் பிறந்தவர்களுக்கே கூட சாதனை என்பது அவ்வளவு சாமானியமாக கிடைக்காத பொழுது.. தன் உடல் குறைபாட்டை வென்ற ஒருவர் இன்றைய உலகளவில் பேசப்படும் நபராக மாறியுள்ளார். 
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!
இங்கல்ல... கங்காருகளின் நாடான ஆஸ்திரேலியாவின் சிட்னியில்... ரசல் ஓ கிரேடி... வயது 48, மேற்கு சிட்னியில் உள்ள நார்த் மெட் பகுதியின் இன்றைய ஹீரோ இவர்தான். டவுன் சின்ட்ரோம் எனப்படும் மரபணுவில் ஏற்படும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். 1986ம் ஆண்டு சிட்னியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் அவர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 18.


32 ஆண்டுகளாக 
ஒரே நிறுவனம் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக அதே வேலையில் பணியாற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்றுள்ளார் ரசல். சிறுவயதில் தமக்கு ஏற்பட்ட குறைபாட்டால் பல்வேறு அவமானங்களை சந்தித்தவர். பள்ளி செல்லும் காலத்தில் சுற்றியிருப்பவர்களின் கேலி, கிண்டல்களால் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்தவர்.


குறையை ஒதுக்கி ஊழியரானார்  
ஒரு கட்டத்தில் தமது குறைபாட்டை அனைவர் முன்னிலையிலும் ஒத்துக் கொண்ட ரசல் பின்னாளில் அதனை புறந்தள்ளினார். ஒரு கட்டத்தில் சுய உழைப்பால் முன்னேற்றத்தை சந்தித்து, சாதிக்க வேண்டும் என்ற அவாவிலும், உந்துதலிலும் அங்குள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஊழியராக மாறினார்.


இரட்டிப்பு மகிழ்ச்சி  
காலங்கள் உருண்டோடின. இன்றோ அவருக்கு வயது 50.. 32 வருடம் அதே நிறுவனத்தில் பணியாற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்றார் ரசல். அவரை விட, அவரது தந்தை ஜெவ் ஓ கிரேடிக்கு இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தமது மகன் சந்தித்த அவமானகரமான நிகழ்வுகளை முன்வைத்து பேசிய அவர், மகனின் இந்த உயர்வான நிலைமை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்.


அருமையான தருணம்  
தாம் வசித்து வரும் பகுதியில் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும் நபராகவும் அவர் உள்ளார் என்றும் தெரிவிக்கிறார். தமது பகுதியில் தம்மையும், தமது மகனையும் காணும் மக்கள் கைகுலுக்கி பாராட்டுவதையும் கூறி சிலாக்கிறார் ஜெவ். ரசல் பணிபுரியும் உணவக நிர்வாகமும், சக ஊழியர்களும் ரசலை கொண்டாடுகின்றனர். அவருடன் பணிபுரிவது என்பது ஓர் அற்புதமான அருமையான தருணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


பழகுவதில் இனிமை 
பழக இனிமையான... அதே நேரத்தில் அன்பை பொழியும் நபர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். உணவகத்தை சுத்தமாக வைத்திருப்பது, மேசை, நாற்காலிகளை ஒழுங்காக அடுக்கி வைப்பது என தமது பணியில் சிறந்து விளங்கியதாக அவர்கள் கூறியுள்ளனர். உண்மையான அர்ப்பணிப்பு, விடா முயற்சி, மன உறுதி.. ஆகிய இந்த மூன்றும் உலகின் எந்த குறையையும் துடைத்து விடும் என்பதற்கு லேட்டஸ்ட் வரவுதான்... ரசல்.

எந்த பந்து போட்டாலும் அக்கா சிக்ஸர் விளாசுதே.. கலகலக்கும் தமிழிசை - Thamizhisai Latest News


"திமுகவும்...நமதே! திகாரும்...நமதே!" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். 

தேர்தல் நெருங்க... நெருங்க... ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஒருவரையொருவர் வாரி வறுத்தெடுத்து வருகிறார்கள். 
அதிலும் மு.க.ஸ்டாலினும், தமிழிசையும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேகத்தில் உள்ளனர். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

எவ்வளவுதான் தங்கள் கட்சிக்குள் பிரச்சனைகள், சலசலப்புகள், பஞ்சாயத்துகள், இருந்தாலும், ரெண்டு பேரும் ட்வீட் போட்டு தாக்கி கொள்வதை மட்டும் ஒருநாளும் மறப்பது இல்லை.


உதயசூரியன்  
அதனால் தாமரை என்ற வார்த்தையை ஸ்டாலினும், உதயசூரியன் என்ற வார்த்தையை தமிழிசையும் ஒருத்தருக்கொருத்தர் தங்களையும் அறியாமல் அதிகமாகவே தங்கள் ட்வீட்களில் பயன்படுத்தி வருகிறார்கள். நாடும் நமதே நாற்பதும் நமதே. என்று கனவுகாணும் ஸ்டாலின்அவர்களே,!ஊழல் சர்க்கார் நமதே!ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த தி மு க ஊழல்ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! தி மு க வும்...நமதே!திகாரும்...நமதே ! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள்சாதனையையும் மக்கள்மறக்கவில்லை.


விடாமல் சிக்ஸர்
ஸ்டாலின் எவ்வளவுதான் பாஜகவை வாரினாலும், தமிழிசையும் அதற்கு முட்டு கொடுத்து கொண்டே பதிலடிகளை விடாமல் கொடுத்து விடுகிறார். இன்றும்கூடி தமிழிசை சவுந்தராஜன் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.


திகாரும் நமதே
அதில் அவர், "நாடும் நமதே நாற்பதும் நமதே. என்று கனவுகாணும் ஸ்டாலின் அவர்களே,! ஊழல் சர்க்கார் நமதே! ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த திமுக ஊழல்ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! திமுக...நமதே! திகாரும்...நமதே! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.


திமுக தலைவர் பதிலடி?  
என்றைக்கோ நடந்த சர்க்காரியா விவகாரத்தை இப்போது ஸ்டாலினுடன் முடிச்சி போட்டு பதிவிட்டிருக்கிறார் தமிழிசை சவுந்தராஜன். இதற்கு திமுக தலைவர் என்ன பதிலடி தர போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!

மொட்டை மாடியில் கத்திக் குத்து.. ரத்த வெள்ளத்தில் மிதந்த 10ம் வகுப்பு மாணவன்.. - Thirumullaivayol Murder News

வீட்டின் மொட்டை மாடியில் பத்தாம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கத்தி குத்து காயங்களுடன் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் வேணு. கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் பாபு. 15 வயதாகிறது. அயப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இவர் நேற்று ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றிருக்கிறார் அப்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து மர்ம நபர்கள் 2 பேர் இந்த மாடிக்கு எகிறி குதித்து வந்தனர்.


16 இடங்களில் குத்து 
அங்கு நின்று கொண்டிருந்த பாபுவை திடீரென சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அங்கு குடியிருக்கும் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர்.


ரத்த வெள்ளம்
அப்போது அங்கு பாபு ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாபுவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் பாபுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


சிசிடிவி கேமரா  
மர்மநபர்கள் யார் என தெரியவில்லை. ஆனால் அவர்கள் வந்து போனது, அந்த் தெருவின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அவர்களின் முகமும் நன்றாக பளிச்சென காமிராவில் தெரிகிறது. இந்த காட்சியினை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்


காதல் பிரச்சனையா?
10-ம் வகுப்பு மாணவன் மீது இவ்வளவு கொலை வெறியா என அதிர்ச்சியாக உள்ளது. கொலைக்கு காரணம் முன்விரோதமா அல்லது ஏதேனும் காதல் பிரச்சினையா என்றெல்லாம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்