Run World Media: 12/29/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 29, 2018

குளோரியாவுக்கு மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் இப்படி ஏமாந்திருக்க மாட்டார்

குளோரியா-க்கு மட்டும் எழுத, படிக்க தெரிந்திருந்தால் இன்னைக்கு இப்படி ஏமாந்திருக்க மாட்டார். 


சென்னை கண்ணகிநகரில் வசிப்பவர் தான் குளோரியா. 60 வயதாகிறது. கணவரை இறந்து பல வருஷமாச்சு. அதனால் தன் வயிற்று பிழைப்புக்காக காரப்பாக்கத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

தனக்கு வரும் சம்பாத்தியத்தில் சாப்பாட்டுக்கு போக மீதி பணத்தை ஒருவரிடம் சீட்டு கட்டியிருந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இந்த சீட்டுப்பணத்தை குளோரியா கஷ்டப்பட்டு சேர்த்து வந்தார். கடைசியில் ரூ.57 ஆயிரம் சீட்டுப்பணம் வந்திருந்தது. அதனை குளோரியா வங்கிக்கணக்கிலேயே சீட்டு பிடித்தவர் செலுத்தி விட்டார்.


எழுத படிக்க தெரியாது 

இந்நிலையில் குளோரியாவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அதனால் கடந்த 26-ம் தேதி ஏடிஎம் கார்டு எடுத்து கொண்டு, பிடிசி குடியிருப்பு அருகில் இருக்கும் தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க போனார். எழுத படிக்க தெரியாத குளோரியா, எப்பவுமே ஏடிஎம் வந்தால், அங்கிருக்கும் செக்யூரிட்களிடம் தன் கார்டை கொடுத்து, பின் நம்பரையும் சொல்லி பணம் எடுத்து தர சொல்வார்.


இளம்பெண்  

ஆனால் அன்றைக்கென்று பார்த்து, ஏடிஎம் வாசலில் கியூ நின்று கொண்டிருந்தது. செக்யூரிட்டியோ பிசியாக இருந்தார். அதனால் குளோரியா, தனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு இளம்பெண்ணிடம், ஏடிஎம் கார்டை கொடுத்து, பின் நம்பரையும் சொல்லி பணத்தை எடுத்து தர சொன்னார்.


ஷாக் ஆன குளோரியா  

ஆனால் அந்த பெண்ணோ, குளோரியாவின் கார்டையும், பின் நம்பரையும் வாங்கி மறைத்து கொண்டு, வேறு ஒரு ஏடிஎம் கார்டை மெஷினில் சொருகினார். பிறகு குளோரியாவிடம், நம்பர் தப்பா இருக்கே, சரியா சொல்லுங்க என்றார். இதை கேட்டு ஷாக் ஆன குளோரியா, "எப்பவுமே இந்த நம்பரைதான் சொல்லுவேன்ம்மா.. செக்யூரிட்டி எனக்கு எடுத்து தருவார்" என்றார்.


பணம் அபேஸ் 

உடனே அந்த பெண்ணும், "இங்க நீங்களே பாருங்க, உங்க எதிரேதான் கார்டு போடறேன், நீங்க சொன்ன நம்பரைதான் போடறேன், பணம் வரலையே, போய் பேங்கில் என்ன விவரம்-னு கேளுங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அங்கிருந்து கிளம்பிய அந்த பெண் வேறு ஏடிஎம்முக்கு சென்று குளோரியாவின் கார்டு, பின் நம்பரை வைத்து சீட்டு பணத்தை அப்படியே அபேஸ் பண்ணி கொண்டு ஓடிவிட்டார்.


உங்க கார்டு இல்லை

விவரம் தெரியாமல் கண் கலங்கிய குளோரியா, பேங்குக்கு சென்று விவரத்தை சொல்லி அழுதார். வங்கியில் கார்டை வாங்கி பார்த்தவர்கள், "இது உங்கள் ஏடிஎம் கார்டே இல்லையே? 57 ஆயிரம் ரூபாய் யாரோ எடுத்திருக்காங்களே" என்று சொன்னார்கள்.


இளம்பெண்ணுக்கு வலை

பணம் எல்லாமே போச்சே என்று அழுத குளோரியா, இதுதொடர்பாக கண்ணகி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்படி போலீசாரும் விசாரணை நடத்தி, ஏடிஎம் அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பார்த்தபோதுதான், இளம்பெண் பணத்தை ஆட்டைய போட்டு சென்றது தெரியவந்தது. திருவள்ளூரை சேர்ந்த அந்த பெண்ணை போலீசார் இப்போது தேடி வருகிறார்கள்.

திருமண மலர்கள் தருவாயா.. டிசம்பர் பூவை திருப்பி காட்டி.. டிக்டாக்கில் கலக்கும் ஜிப்சி அழகி!

"பள்ளிக்கூடம் போகலாமா? அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா?" என்று டிக் டாக் ஆப்பில் ஒரே ஆட்டம், பாட்டம் என கலக்கி வருகிறார்கள்.

நரிக்குறவர்கள்!! கொஞ்ச நாளாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனை பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள். 
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

கலைதாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் இஷ்டத்துக்கு ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் என்பதால் இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகமாகி கொண்டே போய், இப்போது நரிக்குறவர்கள் வரை சென்றுவிட்டது.

தனித்தே வாழ்வார்கள்

பொதுவாக எப்பவுமே எதைபற்றியும் பெரிசா அலட்டி கொள்ளாதவர்கள் நரிக்குறவர்கள். மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு காரணமாகவும், இதர குடிமக்களோடு பழகுவதில் பெரிய சிக்கல் ஏற்படுவதாலும் நரிக்குறவர்கள், சமுதாயத்தில் யாருடனும் கலவாமல் தனித்தே வாழத்தொடங்கினர்.

டிக்-டாக் வீடியோ  

ஆனால் இப்போது டிக்டாக் ஆப்பில் கலந்து வருகின்றனர். என்னா ஒரு டான்ஸ், என்னா ஒரு லிப் மூவ்மெண்ட், காலேஜ் பெண்கள் கெட்டார்கள்!! நடைபாதை, நடுரோடு என்று எதையுமே இவர்கள் எப்பவுமே பார்க்க மாட்டார்கள். டிக்-டாக் வீடியோக்களிலும் அப்படித்தான்.

ஆடல், பாடல் 

நடுரோட்டில் நின்று கொண்டு சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடினாலும், இன்றைய நாளுக்கு அப்டேட்டாக இருக்கிறார்கள். சமீபத்தில் வந்த சினிமா பாட்டுக்குகூட அவர்கள் வாயசைத்து நடிக்கிறார்கள். இதுபோல பல வீடியோக்கள் அவர்கள் பாடி, ஆடி பதிவிட்டு வருகின்றனர்.

டிசம்பர் பூக்கள்  

அதிலும் ஒரு நரிக்குறவ பெண் "திருமண மலர்கள் தருவாயா, தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே" என்று பாடி தலையில் வைத்துள்ள டிசம்பர் பூவை திருப்பி காட்டுவதே கொள்ளை அழகுதான்.

கறுப்பு மணிகள்  

ஆனால் என்னதான் நியூ சாங்ஸ், டிக்-டாக் ஆப் என்று நவீனத்துக்குள் புகுந்தாலும், தங்கள் பாரம்பரிய டிரஸ்ஸிங்கில் எந்தவித மாற்றமும் இல்லை. பெரிய பொட்டு, மூக்கின் ரெண்டு பக்கமும் பெரிய பெரிய மூக்குத்தி, கறுப்பு மணிகள், அழுக்கு தாவணிகளுடன்தான் வீடியோக்களில் சுற்றி சுற்றி வருகிறார்கள்.

நடுரோட்டில் டான்ஸ் 

எந்தவித மேக்கப்பும் இல்லாமல், கறுத்த மேனிகளுடன், நடுரோட்டில் இவர்கள் எந்த கவலையும் இல்லாமல் ஆடுவதும், பாடுவதும் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

2வது உலக போரில் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் கண்டெடுப்பு

2வது உலக போரில் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கொல்கத்தா நகரில் கண்டெடுக்கப்பட்டது.
2வது உலக போர் கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை நடந்தது.  இதில் இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகள், பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகியவை ஒரு கூட்டணியாகவும் மற்றும் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை மற்றொரு கூட்டணியாகவும் இருந்து போரிட்டன.
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


இந்த போரில் இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவும் ஈடுபட்டது.  இதில் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஹூக்ளி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்த நேதாஜி சுபாஷ் கப்பல் செப்பனிடும் இடம் ஆனது,
அமெரிக்க கப்பற்படையால் பயன்படுத்தப்பட்டு வந்தது.


இந்த நிலையில், இந்த பகுதியில் தூர்வாரும் பணி நடந்தது.  இதில், ஏறக்குறைய 500 கிலோ எடை கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.  போலீசார், கப்பற்படை மற்றும் ராணுவம் ஆகியோருக்கு இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.


அவர்கள் இதனை 2வது உலக போரில் பயன்படுத்திய வெடிகுண்டு என உறுதி செய்துள்ளனர்.  போர் விமானங்களுடன் இணைக்க கூடிய வகையிலான வடிவமைப்பினை கொண்ட இந்த வெடிகுண்டால் அச்சுறுத்தல் எதுவும் இல்லை.


ஏனெனில் இதனை வெடிக்க செய்வதற்கு என சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய வகையில் இதன் அமைப்பு உள்ளது.  சில குறிப்பிட்ட உயரத்தில் இருக்கும்பொழுது வான்வழியே இந்த வெடிகுண்டு வீசப்பட்டு வெடிக்க செய்யப்படுவது வழக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த வெடிகுண்டு அதிகாரிகள் உதவியுடன் செயலிக்க செய்யப்படும்.


2018-ல் விஜய் சேதுபதி தான் டாப்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தான் 2018-ல் அதிக படங்களில் நடித்த நடிகர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு பஞ்சம் நிலவுகிறது. 10-க்கும் குறைவான கதாநாயகர்களே முன்னணி கதாநாயகர்களாக விளங்குகின்றனர். தெலுங்கு திரையுலகுடன் ஒப்பிட்டால் இது குறைவு.
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 171 படங்கள் ரிலீசாகி உள்ளன. கதாநாயகர்களில் விஜய் சேதுபதி அதிகபட்சமாக 7 படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், 96, சீதக்காதி ஆகியவை கதாநாயகனாக நடித்தவை. டிராபிக் ராமசாமியும், இமைக்கா நொடிகளும் கவுரவ வேடத்தில் நடித்தவை.

அவருக்கு அடுத்து பிரபுதேவா, கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு, விதார்த் ஆகியோர் தலா 3 படங்களிலும், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், அரவிந்த்சாமி, அதர்வா, விஜய் ஆண்டனி, ஜெய், விமல், ஜி.வி.பிரகாஷ், தினேஷ் ஆகியோர் தலா 2 படங்களில் நடித்துள்ளனர். 

கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி, சிம்பு, கார்த்தி, ஜீவா, ஆர்யா ஆகியோர் தலா ஒரு படத்தில் நடித்துள்ளனர்.கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கொடைக்கானலின் மங்கலம் கொம்பில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காமனூர் ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறை இருந்தவர் கணேஷன். இவர், சிறந்த ஊராட்சிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

கணேஷன், மனைவி பஞ்சவர்ணம் மற்றும் மகள் விஷ்ணுபிரியா ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்துள்ளனர். மகள் விஷ்ணுபிரியா திண்டுக்கல் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இரவு முழுவதும் சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறியிருந்ததாகவும், காலையில் ரூம் ஹீட்டரை பயன்படுத்திய போது, சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்வாசம் படத்தை வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்... ஆனால் 'கண்டிஷன்ஸ் அப்ளை'...!

விஸ்வாசம் படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் உரிமையை பெரிய தொகை கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி ரிலீசாகிறது. 2018 ஆம் ஆண்டில் அஜித் படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால், இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இப்படத்தின் டிரைலர் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கும் அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் பெரிய தொகையை கொடுத்திருக்கிறது. இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரிய தொகையாம் அது. இதன் மூலம் விஸ்வாசம் படத்தை ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம். ஆனால் தியேட்டரில் ஓடி முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான் ஒரே கண்டிஷன்.

தன்னை கொடுமைப்படுத்திய மகனை கொலை செய்து 70 துண்டுகளாக வெட்டிய தாய்

ரஷ்யாவில் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய மகனை 70 துண்டுகளாக நறுக்கி பார்சல் செய்த தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


ரஷ்யாவை சேர்ந்த லுயிட்மிலா என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் ஒரு பெரிய பையுடன் டாக்சியில் ஏற முயன்றார். இதற்கிடையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்த பக்கத்து வீட்டு பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லுயிட்மிலா-விடம் இருந்த பையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதனுள் மனித கை மற்றும் கால் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், என்னுடைய மகனை விட்டு அவனுடைய மனைவி பிரிந்ததிலிருந்தே ஒரு கொடுமையான மிருகத்தைப் போன்று மாறிவிட்டான். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, என்னை அவனுடைய பிரிந்த மனைவி என நினைத்து அடித்து கொடுமைப்படுத்தினான்.

ஒரு கட்டத்தில் பாத்ரூமில் வைத்து என்னை துஷ்பிரயோகம் செய்தான். இதுகுறித்து நான் போலீசாரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
என்னுடைய மகனின் கொடுமை தாங்காமல், சமைக்கும் பாத்திரத்தை வைத்து அவனுடைய தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன். பின்னர் அவனுடைய ஆணுறுப்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குப்பை தொட்டியில் வீசி எறிந்தேன். அதனை தொடர்ந்து உடலுறுப்புகளை 70-க்கும் மேற்பட்ட துண்டுகளாக நறுக்கி, பிளாஸ்டிக் பையில் அடைத்தேன் என லுயிட்மிலா கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் 23 மாதங்கள் நகரத்தை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேசமயம் அனுமதி இல்லாமல் முகவரியை மாற்ற முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ்சில் நிலநடுக்கம்.. இந்தோனேஷியாவிற்கு சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸ் தீவில், 6.9 ரிக்டர் அளவுகோலில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மின்டானோ என்ற பகுதியை மையமாக கொண்டு, பூகம்பம் தாக்கியுள்ளது. இதனால், இந்தோனேஷியா, 
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

பாலோ உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை பிறப்பித்துள்ளது, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்.
இதுவரை, பூகம்பத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. 

இந்த பூகம்பம் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியுள்ளது. இதன் தாக்கம் 300 கி.மீ சுற்றளவு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுனாமி காரணமாக 0.3 மீட்டர் வரையில், அலை எழக்கூடிய வாய்ப்பு உள்ளது. பூகம்பம் தாக்கியதும், அது 7.2 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக கூறப்பட்டது. பின்னர், அது 6.9 ரிக்டர் என அறிவிக்கப்பட்டது. இது சிறு அளவிலான சுனாமி எச்சரிக்கைதான் என்பதால், மக்கள் பீதியடையத் தேவையில்லை.

ஆட்டோவில் ஊர் சுற்றி... நடு ரோட்டில் 'உம்மா'.... பிக் பாஸ் யாஷிகா, ஐஸ்வர்யா

பிக் பாஸ் பிரபலங்களான நடிகை யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் சென்னையில் ஆட்டோவில் ஊர் சுற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. 

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை அடுத்து மிகவும் பிரபலமாகினர். தற்போது இருவரும் மகத்துடன் ஜோடி சேர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் சில படங்களிலும் நடிக்கின்றனர்.


பிக் பாஸ் அலப்பறைகள் 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளாக மாறினர். நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே இவர்கள் இருவர் செய்த அலப்பறைகள் தாங்க முடியாத வகையில் இருக்கும்.


கடி ஜோக் 

முத்தம் கொடுத்துக்கொள்வது, கேரமா முன் வந்து கடி ஜோக் சொல்வது, இருவரும் சேர்ந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை கலாய்ப்பது என இவர்கள் செய்தவையாவும் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டன.


நெருங்கிய தோழிகள்  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும், யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தோழிகளாகவே இருக்கின்றனர். ஓட்டல், ஷாப்பிங், என எங்கு சென்றாலும் ஜோடி போட்டு சுற்றுகின்றனர். இதனை தங்களுடைய சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.


ஆட்டோவில் சுற்றும்

அப்படி இவர்கள் பதிவிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஒரு ஆட்டோவில் ஏறி, சென்னை நகரத்தை இருவரும் வலம் வந்துள்ளனர். அப்போது ஒரு செல்பி வீடியோ எடுத்து அதை பதிவிட்டுள்ளனர்.


ஆட்டோ ஓட்டுனர் 

அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவரையும் சேர்த்து கவர் செய்துள்ளனர். இதனால் அந்த ஆட்டோ டிரைவர் செம குஷியாகிவிட்டார். இதனால் அவர் யாஷிகாவிடமும், ஐஸ்வர்யாவிடமும் ஆட்டோ வாடகை வாங்கினாரா என்பது தெரியவில்லை.


நடு ரோட்டில் உம்மா  

ஆட்டோவில் இருந்து இறங்கிய பின்னர், இருவரும் நடுரோட்டில் நின்றுகொண்டு உம்மா கொடுத்துக்கொண்டனர். இதனை லைவ்வாக வேறு ஷேர் செய்திருக்கின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் குதூகலமடைந்து கமெண்ட் தட்டிவிட்டனர்.

டெல்லியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு... பாதுகாப்பு இல்லத்தில் அத்துமீறல்

டெல்லி பாதுகாப்பு இல்லங்களில் சிறுமிகளுக்கு ஊழியர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக புகார் எழுந்துள்ளன. 

மிளகாய் பொடிகளை வாயில் திணித்தும், ஆசனவாயில் அடைத்தும் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளும், கிராமங்களில் இருந்து படிக்க வந்த சிறுமிகளும் டெல்லியின் டிவர்கா பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் தங்கி படித்து வருகின்றனர். அங்கு, 6 வயது முதல் 15 வயதிலான சிறுமிகள் என 22 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரே ஒரு சமையல்காரர் உள்ளார்.

ஊழியர்கள் தொந்தரவு

சிறுமிகளுக்கு ஊழியர்கள் பாலியல் தொந்தரவு செய்து வருவதாகவும், கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பதாகவும், உடைகளை துவைக்க வைப்பதோடு, பாத்திரங்களை கழுவ செய்வதாகவும் அம்மாநில மகளிர் கமிஷன் புகார் அளித்துள்ளது.

கடும் தண்டனை 

இந்தநிலையில், வியாழக் கிழமையன்று டெல்லி மகளிர் கமிஷன் உறுப்பினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சொல்லும் பணியை செய்யாத டீன் ஏஜ் பெண்களுக்கு வாயில் மிளகாய் பொடியை வைத்து தண்டனை வழங்கப்படுவதாகவும், ஆசனவாயில் மிளகாய் பொடியை வைத்து அடைப்பதாகவும் குமுறலுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், கோடை மற்றும் குளிர்கால விடுமுறைக்கு கூட வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர்.

போலீசாருக்கு கோரிக்கை 

டிவர்கா பெண்கள் பாதுகாப்பு இல்லத்தை காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லி மகளிர் கமிஷனின் தலைவர் சுவாமி மாலிவால் கேட்டுக்கொண்டார். சிறுமிகளின் வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனை நடத்த வேண்டும்

முன்னதாக, டெல்லி தலைமைச் செயலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மகளிர் கமிஷன் உறுப்பினர்கள், டிவர்கா பாதுகாப்பு இல்லத்தை போன்று, டெல்லியின் மற்ற பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர், சிறுமிகளிடம் என்ன நடக்கிறது என்பதை கேட்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பாதுகாப்பு இல்லங்களை மேம்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்றும் தெரிவித்தனர்.

அங்க சுத்தி! இங்க சுத்தி!.. கடைசியில் தனியார் மருத்துவமனை கழிவறையிலும் கேமரா..

சென்னையில் தனியார் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் சிறுநீரக கல்லை நீக்கும் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு நேற்று மாலை பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.  
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

அப்போது கழிவறையில் ரகசிய கேமரா ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்த பெண்ணுக்கு எழுந்தது. இதையடுத்து ரகசிய கேமரா கண்டறியும் ஆப் மூலம் அந்த அறையை சோதனை செய்துள்ளார்.


போலீஸார்

அதில் அந்த அறையில் ரகசிய கேமரா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய அந்த பெண் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு போலீஸார் சென்றனர்.


தீவிர விசாரணை  

அங்கிருந்த ரகசிய கேமராவை கைப்பற்றினர். அதில் பல்வேறு பெண்களின் அந்தரங்க காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.


போலீஸ் விசாரணை 

இந்த விசாரணையில் கேமராவை பொருத்திய மருத்துவமனை ஊழியர் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தொடர்பிருக்குமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


கழிவறையில் கேமரா 

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு மருத்துவமனை கழிவறையில் கேமரா வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்