வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரேஷன் கார்டு இருக்கா... பொங்கல் பரிசா நாளைக்கு உங்களுக்கு ரூ.1000 தரப்போறாங்க
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 04, 2019

ரேஷன் கார்டு இருக்கா... பொங்கல் பரிசா நாளைக்கு உங்களுக்கு ரூ.1000 தரப்போறாங்க

பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 

கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரேசன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படாததால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். 

ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பின் வழியாக, 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருட்களுடன் பொங்கல் பை  

பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கும். இந்த பொருட்களுடன் பை ஒன்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.


ரூ.1000 ரொக்கம் 

பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் அனைத்து நியாய விலை கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும். ஒவ்வொரு அட்டைத்தாரர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி  

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். முதல்வர் தொடங்கி வைத்தவுடன், அந்தந்த மாவட்ட அமைச்சா்கள் ஞாயிற்றுக் கிழமை முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் கிடைக்கும் வகையில் வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர்.


300 குடும்ப அட்டைதாரர்கள்  

நெரிசல் இல்லாமல் வழங்கும் வகையில் ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் தினமும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் பெற்றுக் கொள்வது என்பது குறித்து நியாயவிலைக் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்படும். இந்த திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment