வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அணிந்த ஆடையை அணியக்கூடாது மனைவிக்கு 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி கொடுத்த கணவர்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 25, 2019

அணிந்த ஆடையை அணியக்கூடாது மனைவிக்கு 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி கொடுத்த கணவர்

மனைவி ஒரு முறை அணிந்த ஆடையை மீண்டும் அணியக் கூடாது என்பதற்காக கணவர் ஒருவர் மனைவிக்கு 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி கொடுத்து உள்ளார்.






ஜெர்மனியைச் சேர்ந்த மார்கொ ப்ரோக்மேனி இவரது கணவர் பால் ப்ரோக்மேன் ( 83). தன் காதல் மனைவி மார்கொ ஒரு முறை அணிந்த ஆடையை மீண்டும் அணியக் கூடாது என்பதற்காக தினம் ஒரு ஆடை வாங்கிக் கொடுத்திருக்கிறார் பால் .
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இப்படி 57 வருடங்களாக தன் மனைவிக்காக 55,000 ஆடைகளை வாங்கிக் குவித்திருக்கிறார் பால்.
உலகின் அதிகமான ஆடைக் கலெக்‌ஷன்களைக் கொண்டவர்கள்  என்கிற பெருமையும் இவர்களுக்கு உண்டு.
பால் மற்றும் மார்கொ தன் வீட்டில் ஒவ்வொரு இரவும் பால்ரூம் நடனம் ஆடுவது வழக்கமாம். அப்போது "மார்கொ ஏஞ்சலைப் போல் கவுன் அணிந்து வந்து தன் கை பிடித்து ஆடும்போது முதல் நாள் காதலைப் போல் உணர்வேன் என்கிறார் பால். அதனால் ஒவ்வொறு முறையும் மார்கொ புது கவுன் அணிந்து வர வேண்டும். அணிந்த கவுனை மீண்டும் அணியக் கூடாது என நினைத்தேன்" என்கிறார்.

பால் எப்போது வெளியே சென்றாலும் ஆடைகளை வாங்கி வருவாராம். பின் ஆடைகள் விற்பனை செய்யும் கடைகளில் நேரடித் தொடர்புவைத்துக் கொண்டு புது கலெக்‌ஷன்கள் வந்தால் முதல் நபராக இவரை அழைப்பார்களாம். மார்கொவிற்காக 2, 3 ஆடைகளை வாங்கி வருவாராம்.
ஆரம்பத்தில் மார்கொவிற்கு ஒன்றும் புரியவில்லையாம். பின் தன் மீதான அன்பால் இவ்வாறு செய்கிறார் என ஏற்றுக் கொண்டாராம். ஒரு நாள் அவர் வாங்கிக் குவித்த ஆடைகளைப் பார்த்தால் மலை போல் நிரம்பியிருந்ததாம். ஒரு கட்டத்தில் மார்கொவின் அலமாரியில் ஆடைகள் வைக்க இடம் இல்லாமல் போயிருக்கிறது. பின் இது போதும் நிறுத்திக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார் மார்கொ.

”எதர்க்கும் ஒரு முடிவு வேண்டும். எனக்கும் வயதாகி விட்டது. இனி என்னால் விலையுயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. எனவே இனி ஆடைகளை வாங்க வேண்டாம்” என தன் கனவரிடம் கூறியிருக்கிறார் மார்கொ. அதை ஏற்றுக் கொண்ட பால் 2014-ம் ஆண்டிலிருந்து ஆடைகள் வாங்குவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
தற்போது அந்த ஆடைகளை தன் மகளின் அறிவுரைப்படி விற்க முடிவு செய்திருக்கின்றனர். இதுவரை 7000 ஆடைகளை விற்றிருகின்றனர். அதில் 200 ஆடைகளை மட்டும் விற்பனைக்கு அல்லாமல் எடுத்து வைத்திருக்கிறார் பால். காரணம், இனி வரும் நாட்களுக்கு மார்கொ அணிய வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்திருக்கிறாராம். 

No comments:

Post a Comment