வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 14, 2019

சொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்..



சொத்துக்காக பெற்ற தகப்பனையே அடியாட்கள் வைத்து தெருவில் தூக்கி வீசி மகள் செய்த காரியம் தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.



 
ஓசூர் மூவேந்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனராஜ். 80 வயதான இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். ராஜ்குமார், பாபு என்ற இரு மகன்களும், தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
பிள்ளைகள் அனைவருக்கும் தனராஜ் கல்யாணம் செய்து விட்டார். ஆனால் மனைவி இறந்துவிடவும், பிள்ளைகள் அவ்வப்போது இவரை கவனித்து வந்தனர். 
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


கேன்சர் நோயாளி

தன்ராஜ் தனக்கு சொந்தமான ஒரு வீட்டை மகள் தனலட்சுமிக்கு தான பத்திரமாக எழுதி கொடுத்துள்ளார். ஆனால் மகள் இப்போது அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருவதால், மகளுக்கு எழுதி கொடுத்த வீட்டில்தான் தனராஜ் வசித்து வருகிறார். 80 வயதான தனராஜ் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டுள்ளார்.


சொத்து தகராறு 

இந்நிலையில், மகளிடம் பேச்சுவாக்கில் தானமாக எழுதி கொடுத்த வீடு தனக்குதான் என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டதும் தனலட்சுமிக்கு ஆத்திரம் வந்து விட்டது. உடனடியாக அமெரிக்காவிலிருந்து கிளம்பி ஊருக்கு வந்து விட்டார். உடனடியாக வீட்டை தனக்கு தர வேண்டும் என்று சொல்லி, தகராறில் ஈடுபட்டார். கூடவே இந்த சொத்து பிரச்சனையில் மருமகனும் சேர்ந்து கொண்டார்.


தெருவில் எறிந்தனர்  

வீட்டை தருவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மகளும், மருமகனும், 10 அடியாட்களை ரெடி செய்து அழைத்து வந்தார்கள். வீட்டில் இருந்த பெற்ற தகப்பனின் கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்களை தெருவில் வீசி எறிந்தனர். அந்த பொருட்களோடு, பெற்ற தகப்பனையும் குண்டு கட்டாக தெருவில் தூக்கி எறிந்திருக்கிறார்கள். எறிந்த பொருட்களுடன் தனராஜின் மருந்து மாத்திரைகளும் தெருவில் சிதறி விழுந்தன.


மதிக்கவில்லை  

இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆடிப்போய் விட்டனர். தனராஜின் மனைவி இருந்தவரை குடும்பத்தை ஒற்றுமையாகவும், அமைதியாகவும் கொண்டு சென்றிருந்திருக்கிறார். ஆனால் அவர் மறைந்துவிடவும், தனராஜை வீட்டில் உள்ளவர்கள் மதிக்கவே இல்லை என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் சொன்னார்கள்.


80 வயது முதியவர்  

ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி என்றும் பார்க்காமல், 80 வயது முதியவர் என்றும் பார்க்காமல், பெற்ற தகப்பன் என்றும் பார்க்காமல்... கேன்சர் நோயாளி என்றும் பார்க்காமல்.. செல்லமாக வளர்த்த மகளே இப்படி தெருவில் தூக்கி அப்பாவை எறிந்த சம்பவத்தினை கேட்டு தமிழக மக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். தனராஜ் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால், இதுகுறித்து ஓசூர் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment