வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திடீர் திருப்பம்.. திருவாரூரில் திமுக சார்பில் உதயநிதி போட்டியா? ரசிகர்கள் விருப்பமனு தாக்கல்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 03, 2019

திடீர் திருப்பம்.. திருவாரூரில் திமுக சார்பில் உதயநிதி போட்டியா? ரசிகர்கள் விருப்பமனு தாக்கல்!

திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

தற்போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூரில் போட்டியிட திமுக சார்பாக நிறைய பேர் விருப்ப மனுக்கள் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.


மனு தாக்கல்  

கடந்த திங்கள் கிழமையில் இருந்து விருப்ப மனு தாக்கலை திமுக பெற்று வருகிறது. இந்த மனுக்கள் மீது இந்த ஆலோசனை நடத்தப்படும். அதன்பின் நாளை நேர்முக தேர்வு நடத்தப்படும். நாளையே வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும்.


காலையில் தாக்கல் 

இன்று காலையிலேயே இதற்காக சிலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 20க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பாக 40 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அவர் பெயரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர்.


உதயநிதி  

இந்த நிலையில் திடீர் திருப்பமாக திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் சிலர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர். இவரது விருப்ப மனுவும் பரிசீலனையில் உள்ளது.


புகைப்படம்

இந்த விருப்ப மனு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் 1977ல் இருந்து திமுகவில் இருப்பதாகவும், களப்பணிகள் செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment