வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கீழ்கொடுங்காலூர் காவல் துறையினரின் பலே பலே ரோந்து... முழுசா படியுங்க...
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 16, 2019

கீழ்கொடுங்காலூர் காவல் துறையினரின் பலே பலே ரோந்து... முழுசா படியுங்க...



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் பகுதி என்பது காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது.  இந்த பகுதியானது மேல்மருவத்தூர் - வந்தவாசி செல்லும் சாலையில் உள்ளது. இந்தப் பகுதியில் செந்தமிழ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அருகில் வேகத்தடை (Speed Breaker) உள்ளது. 



இங்கு வேகத்தடையே இல்லை என்றாலும் வாகன ஓட்டிகள் நின்று தான் செல்ல வேண்டும் என்பதே நிதர்சன உண்மை. காரணம் என்னவெனில் கீழ்கொடுங்காலூர் காவல்துறையினரின் காவல் நிலையம் இந்த வேகத்தடை பகுதியில் தான். இங்கு தான் இவர்கள் நிலையாக தங்கி கடமை தவறாமல் ரோந்து பணியில் ஈடுபடுவது போன்று அப்பாவி வாகன ஓட்டிகளிடம் காந்தி தாத்தா புகைப்படம் கொண்ட காகிதங்களை வாங்கி பைக்குள் போடும் இடம்.



தினமும் காவலர்கள் பலே வேட்டையில் ஈடுபடுவதால் பாக்கெட்டில் பணம் கொண்டுசெல்ல மக்களிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. திருடர்களிடமிருந்து கூட நம் பணத்தை காப்பாத்திவிடலாம் போல ஆனால்.......!!!!!!


ஒருசில வாகன ஓட்டிகள் டபுள் செலவு செய்கின்றனர். ஏன் தெரியுமா...? காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் காவல்நிலையத்திற்குட்பட்ட செண்டிவாக்கத்தில் ரோந்து (வசூல்) பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரின் கையை மூடிவிட்டு, பின்னர் கீழ்கொடுங்காலூர் காவல் துறையினரின் கையையும் தழுவி கொடுக்க வேண்டும். 

இப்படி ஒரு அவல நிலை இருக்கும் காரணத்தினாலேயே வாகன ஓட்டிகள், பேருந்திலேயே சென்றுவிடலாமா என யோசிக்கும் அளவிற்கு மனமுடைந்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுமக்களின் உயிர்க்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான். ஆனால் அந்த தீர்ப்பானது இது போன்ற காவல் துறையினரின் பாக்கெட் நிறைவிற்கும், அதிகார அச்சுறுத்தலுக்கும் தான் வழிவகை செய்கிறது. 

எனவே, இது போன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர்களை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு நீதிமன்றம் கண்கானிக்க உத்தரவிட வேண்டும். மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் துறையினர்கள் அனைவரும் கட்டாயமாக கேமரா வைத்திருக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 10 ரூபாய் பணம் அபராதமாக செலுத்தினால் கூட அந்த நிமிடமே அது Centralized Server மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வாகன ஓட்டியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வர வேண்டும் என்பதே தொழில்நுட்ப யோசனையாளர்களின் உச்சக்கட்ட யோசனை. 

எனவே இந்த அவல நிலைக்கு தமிழக அரசு மற்றும் நீதிமன்றம் மூலமாக முற்றுப்புள்ளி வைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.


No comments:

Post a Comment