வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டிக்டாக்கில் பிரபலமாக உள்ள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! பெண்களே உஷார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, February 06, 2019

டிக்டாக்கில் பிரபலமாக உள்ள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! பெண்களே உஷார்

சோஷியல் மீடியாவில் நீங்கள் ஷேர் செய்யக்கூடிய புகைப்படம் அல்லது வீடியோ உங்களுக்கே தொல்லையாக மாறும் என்பதற்கு, பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும். 
 

சோஷியல் மீடியாவில் ஏதாவது ஒரு பகிர்வு அடிக்கடி வைரல் ஆகுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சோஷியல் மீடியா ஆப் வைரலாகி வருகிறது என்றால் அது டிக்டாக்தான் (Tik Tok). 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

சிறிய அளவிலான வீடியோக்களை ஷேர் செய்ய அறிமுகமான தளம்தான் இது. ஆனால் இன்று இளைஞர்களை, அதிலும் இளம் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை கிடையாது.


தமிழகம் டாப் 

டிக்டாக்கில் பாடலுக்கு நடனமாடி அதை பதிவேற்றம் செய்வதில் இளம் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். தென் மாநிலங்களில் தமிழகம் மற்றும் கர்நாடகா பெண்கள் டிக்டாக் வீடியோ அப்லோடிங்கில், கணிசமாக உள்ளனர். இந்த வீடியோக்களுக்கு வரும் லைக்ஸ், பாராட்டு கமெண்ட்டுகள் இவர்களுக்கு ஒருவித போதையை ஏற்படுத்தி தொடர்ச்சியாக டிக்டாக்கில் அடிமையாக வைத்திருக்க உதவுகிறது.


ஆபாசம்  

ஆனால் இதில் மற்றொரு விபரீதமும் உள்ளது. ஆபாச கருத்துக்களை கமெண்ட்டுகளாக போடும் நெட்டிசன்கள் ஒருபக்கம் என்றால், இந்த குடும்ப பெண்களின் வீடியோ, மற்றும் அவர்கள் உருவ படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதை ஆபாசமாக சித்தரித்து அதற்குரிய வெப்சைட்டுகளில் பதிவேற்றி ரசிப்போர் மற்றொரு பக்கம். இதனால் பல குடும்ப பெண்களின் வாழ்க்கை கெட்டழிகிறது.


பெங்களூரில் பிரபலம்  

இப்படியான ஒரு சம்பவம், பெங்களூர் நகரையடுத்து ஆனேக்கல் பகுதியிலுள்ள ஒரு 20 வயது கல்லூரி பெண்ணுக்கும் நடந்துள்ளது. கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்தான் அந்த பெண். இவருக்கு சுமார் 1.3 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு இவர் டிக்டாக் ஆப்பில் பிரபலம் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். இதுவரை அவர் பெற்ற லைக்ஸ் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டுமாம்.


ஆபாச சித்தரிப்பு  

இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் முதல், கவிதாவை ஆபாச பட நடிகை போல சித்தரித்து, மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் சுற்ற ஆரம்பித்துள்ளன. இது கவிதா கவனத்திற்கு வந்தபோது இடிந்தே போய்விட்டார். என்ன செய்வது என்று யோசித்து, இந்த தகவலையும் அவரே ஒரு வீடியோவில் கூறி, இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து அதையும் டிக்டாக்கில் பதிவேற்றினார். ஆனால், பிரச்சினை அதிகரித்ததே தவிர, ஓய்ந்தபாடில்லை.


விடமாட்டேன்  

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான, கவிதா, இதுகுறித்து, பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி கவிதா நிருபர்களிடம் கூறுகையில், எனது நடிப்பு திறமையை காட்டவே டிக்டாக்கை பயன்படுத்தினேன். இது ஃபன்னுக்காகத்தான். ஆனால், ஒரு சிலர் அதை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக நான் டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்த மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment