வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அன்று எம்.ஜி.ஆருக்கு கார் ஓட்டுனர்! இன்று பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட நபர்... சடலத்தை கூட வாங்காத கல்நெஞ்சம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, March 17, 2019

அன்று எம்.ஜி.ஆருக்கு கார் ஓட்டுனர்! இன்று பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட நபர்... சடலத்தை கூட வாங்காத கல்நெஞ்சம்



தமிழகத்தில் சாலையில் வீசப்பட்ட முதியவர் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை வாங்க பிள்ளைகள் மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் உள்ள பூங்காவில் கடந்த 20 நாட்களாக பாஸ்கரன் (80) என்ற முதியவர் சுட்டெரிக்கும் வெயிலில் அனாதையாக படுத்திருந்த நிலையில் நேற்று மயங்கி விழுந்தார். பாஸ்கரன் குறித்து விசாரித்த போது அவர் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு குப்பம்மாள் என்ற மனைவி, 4 மகன்கள் உட்பட 5 பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.


இதோடு பாஸ்கரன் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் முன்னர் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரியவந்தது. சாலையில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் குறித்து அவர் பிள்ளைகளுக்கு தகவல் தரப்பட்டும் அவர்கள் யாரும் தந்தையை மீட்க வரவில்லை.


இதையடுத்து உடல்நிலை மோசமான பாஸ்கரனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பொலிசார் அவர் பிள்ளைகளுக்கு தகவல் தந்த நிலையில் நாங்கள் வரமாட்டோம். எங்களை விட்டுவிடுங்கள் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறிவிட்டனர்.


தந்தை இறந்த செய்தி கேட்டும் சிறிதும் கவலைப்படாத கல்நெஞ்சம் படைத்த இவர்களிடம் போனில் பொலிசார் உங்களுக்கும் இதேப்போல் நிலை ஏற்படும் எனக்கூறியுள்ளனர்.
இதையடுத்து, பொலிசாரே தங்களது செலவில் முதியவரின் சடலத்தை அடக்கம் செய்தனர். இதனிடையில் தந்தை சடலத்தை கூட வாங்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment