வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இராமாபுரம் சாலையில் காவு வாங்கும் வேகத்தடை (Speed Break) - விவரம் உள்ளே | Ramapuram Speed Break
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, March 30, 2019

இராமாபுரம் சாலையில் காவு வாங்கும் வேகத்தடை (Speed Break) - விவரம் உள்ளே | Ramapuram Speed Break




காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி இராமாபுரம். இந்த பகுதியானது மேல்மருவத்தூர் to வந்தவாசி சாலையில் உள்ளது. இப்பகுதியில் 5 வேகத்தடைகள் உள்ளன. அதிக வாகனங்கள் செல்லும் இந்த முக்கிய சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.


காரணம் என்னவெனில், வேகத்தடையின் மேல் வெள்ளைபூச்சு பூசப்படாமலும்,  பிரதிபளிப்பான்கள் (Reflection) இல்லை. நெடுஞ்சாலை துறையினர் மூலம் தண்ணியான சுண்ணாம்பு நீர் போல உள்ள திரவியத்தை ஸ்பாஞ்ச் மற்றும் பெயின்ட் பிரஷ்களை கொண்டு பூசிவிட்டு கணக்கு காண்பிப்பதற்கு மட்டும் புகைப்படம் எடுத்துச்செல்லப்படும். பின்னர் மறுநாள் காலை பார்த்தால் அந்த திரவியம்கூட மிஞ்சாது. இரவில் பெய்யும் பனியிலேயே கரைந்து ஓடிவிடும். மேற்கண்ட புகைப்படத்தில் பார்த்தாலே தெரியும் இந்த வேகத்தடையின் நிலை.



சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களின் நிழல் காரணமாக அந்த தற்காலிக வெள்ளைபூச்சுகள் சுத்தமாக தெரியாத காரணத்தினால் வாகனங்கள் அந்த வேகத்தடைகள் மீது (Speed Break) வேகமாக ஏறி இறங்கி இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தவறி விழும் நிலை உள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் உட்புறமாக இடித்துக் கொண்டு காயமடைகின்றனர்.  ஆம்புலன்ஸ் செல்லும் போதும் உள்ளிருக்கும் நோயாளிகளும் உடன் சென்றவர்களும் கீழும் மேலும் விழுந்துகொண்டு செல்கின்றனர்.



எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி இங்கு நிலையான வெள்ளை பூச்சு மற்றும் பிரதிபளிப்பான் (Refection) அமைக்கப்படுமா....? இந்த சாலையினை போட்ட கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா...? இதனை மேற்பார்வையிட்டு கையெழுத்திட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.

No comments:

Post a Comment