வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: துரைமுருகன் மகன் மீது வழக்கு: எந்நேரமும் கைதாக வாய்ப்பு?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 11, 2019

துரைமுருகன் மகன் மீது வழக்கு: எந்நேரமும் கைதாக வாய்ப்பு?




காட்பாடியில் சிக்கிய, 11.50 கோடி ரூபாய், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்ததாக தகவல் வெளியான நிலையில், வேலுார், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளராக, துரைமுருகனின் மகன், கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடியில் உள்ள இவரது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து, நீதிமன்ற அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்து, அறிக்கை அனுப்ப, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். 



இதையடுத்து, வேலுார் லோக்சபா தொகுதி, தேர்தல் செலவின அலுவலர் சிலுப்பன், காட்பாடி போலீசில், 8ம் தேதி புகார் செய்தார்.  அதில் கூறியிருப்பதாவது: மார்ச், 29ல், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த் வீட்டில் நடத்திய சோதனையில், 19 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் சிக்கியது. இது, கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கலின் போது கூறிய கையிருப்பு தொகையை விட, 10 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் கூடுதலாக இருந்தது. 



அடுத்து, ஏப்., 1ல் வருமான வரித்துறையினர், காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில், தாமோதரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையில், 11 கோடியே, 48 லட்சத்து, 51 ஆயிரத்து, 800 ரூபாய் சிக்கியது. இதை, பூஞ்சோலை சீனிவாசன் என்பவர், வாக்காளர்களுக்கு வழங்க, வைத்திருந்ததாக தெரிவித்தார். எனவே, வேட்பு மனு தாக்கலின் போது, வழங்கிய உறுதிமொழி பத்திரத்தில், தவறான தகவல் கொடுத்தது மற்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருந்தது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது. 



இதையடுத்து, காட்பாடி, டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர், புகாரின் மீது, எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது என, காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் ஆலோசனை நடத்தினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, கதிர்ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது, பிரமாண பத்திரத்தில், தவறான தகவல் அளித்தல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. 



இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட விபரம் குறித்த அறிக்கை, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார்.வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், கதிர்ஆனந்த் உட்பட, மூவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.



சந்திக்க தயார்: குடியாத்தம் அடுத்த மோர்த்தானா அணை பகுதியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கதிர் ஆனந்த், நிருபர்களிடம் கூறுகையில், 'வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வழக்கு குறித்து முழுமையாக அறிந்த பின்பே, அது பற்றி கூற முடியும். என் மீது எத்தனை வழக்கு போட்டாலும், அவற்றை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன்.' என்றார்.


No comments:

Post a Comment