வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உ.பி.யில் 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரி கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 29, 2019

உ.பி.யில் 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரி கைது

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரியை போர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலை பலர் செய்து வருகின்றனர்.

பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருகாமையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்தனர்.

குடித்த சில நிமிடங்களில் அவர்களில் சிலர் கண்ணிருண்டு, ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ராம்நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இதுகுறித்து உடனே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசின் முதன்மை செயலாளர் மற்றும் பாரபங்கி மாவட்ட உயரதிகாரிகளுக்கு உ.பி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான சாராய வியாபாரி பப்பு ஜெய்ஸ்வால் என்பவரை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment