வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்... பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் தவறு l
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 28, 2019

500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்... பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் தவறு l

பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த ஆண்டு 72 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணிகளில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 

சுமார் 60 லட்சம் விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் மதிப்பெண்களை கூட்டும் போது, பிழை செய்திருப்பதை தேர்வுகள் இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.


100-க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறு இழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு பாடத்தில் 81 மார்க் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். 

இந்த தவறுகள் எல்லாம் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதுபோல பல மாணவர்களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

 மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. பொதுத்தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் நகல் கேட்டு 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், அதில், மறுகூட்டலுக்கு 4 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்ததாகவும் தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

 இதில், 30 சதவிகித விடைத்தாள்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பெண்களை கூட்டும் போது, 10 மதிப்பெண்கள் அளவிற்கு பிழை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.


இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறுகையில், மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வந்துள்ளது.

 கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன?

சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்...?


http://www.runworldmedia.com/2019/05/2.html

http://www.runworldmedia.com/2019/05/blog-post_40.html

பஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!


நேற்று மாணவி.. இன்று மாணவன்.. அதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. என்ன நடக்குது?

www.runworldmedia.com/2019/05/blog-post_63.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_20.html

வெட்டியா இருக்காம வேலைக்கு போ என்று சொன்ன அம்மா... அடித்துக்கொன்ற மகன்- பொள்ளாச்சி கொடூரம்!!!

இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!


http://www.runworldmedia.com/2019/05/blog-post_77.html

http://www.runworldmedia.com/2019/05/20.html

ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு இல்லை.! 8-வது ஆண்டாக தொடரும் சோகம்.. வேதனையில் டெல்டா விவசாயிகள்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


http://www.runworldmedia.com/2019/05/12-8.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_62.html

கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

http://www.runworldmedia.com/2019/05/adsbygoogle-window.html

 
http://www.runworldmedia.com/2019/05/12-24.html


No comments:

Post a Comment