வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாலியல் வன்புணர்வு செய்ய வந்த இளைஞனை ஒரே வார்த்தையில் ஓடவிட்ட பெண்!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 01, 2019

பாலியல் வன்புணர்வு செய்ய வந்த இளைஞனை ஒரே வார்த்தையில் ஓடவிட்ட பெண்!!



கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ய வந்த இளைஞனை சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓடவைத்துள்ளார் இளம்பெண் ஒருவர்.

மகராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ராஜ்நகரைச் சேர்ந்த 29 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த மார்ச் 25ம் தேதி தனது 6 வயது மகளுடன் அங்குள்ள தர்கா அருகே நின்றிருந்த போது பைக்கில் சென்றவர்களிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான கிஷோர் விலாஸ் அஹ்வத் என்ற இளைஞன் இருவரையும் இறக்கி விடுவதாக கூறி தனது பைக்கில் ஏற்றியுள்ளார்.

ஆனால் அந்த இளைஞர் இருவரையும் ஒதுக்குப்புறமான பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளான்.அந்த இக்கட்டான தருணத்திலும் சமயோசிதமாக யோசித்த அப்பெண் தான் எய்ட்ஸ் (HIV) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த அந்த இளைஞர் தலைதெறிக்க அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளார்.

பின்னர் காவல்நிலையம் சென்ற அந்த பெண் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த இளைஞரின் அங்க அடையாளங்கள், டாட்டூ ஆகியவை குறித்து போலீசாரிடம் விளக்கியுள்ளார். அந்தப்பெண் கூறிய அடையாளங்களை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் அஹ்வத்தை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு முயற்சி மற்றும் POSCO ஆகிய பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் தனது தந்தையை கொலை செய்துவிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், ஜாமீனில் வெளிவந்த போது இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் சமயோசிதமாக செயல்பட்டு பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பியதுடன், துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளி குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த பெண்மணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குற்றவாளி குறித்த அடையாளங்களை அவர் தெரிவித்திருந்தது அவரை பிடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment