Run World Media: காது கேட்காதவர்களுக்காக பேசிப் பேசியே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, May 25, 2019

காது கேட்காதவர்களுக்காக பேசிப் பேசியே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்

நீங்கள் படைபாற்றலுடன் இருந்தால் பணம் சம்பாதிப்பது மிகவும் சுலபம். இதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது உங்கள் வலிமையை நீங்கள் உணர்ந்து கொள்வது, மற்றும் உங்கள் குறிக்கோளை நோக்கி நேர்மறையான பாதையில் செல்வது. இதையே ஒரு பெண் செய்திருக்கிறார்.

அந்தப் பெண் தனக்கு அமெரிக்கன் சைகை மொழி சரளமாக பேச வருவதை உணர்ந்துக் கொண்டு அதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி தற்போது ஒவ்வொரு மாதமும் £7000 சம்பாதிக்கிறார். ஆன்லைனில் காது கேளாதவர்களுடன் சைகை மொழியில் பேசுவது இவர் வேலை. இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

பாடமாக படித்தார்
 இந்த மொழியை பள்ளியில் ஒரு பாடமாக இவர் படித்தார். ப்ளோரிடாவில் வசித்து வருபவர் கிறிஸ்டல் ரிவர்ஸ் . இவர் மாதம் £7000 சம்பாதிக்கிறார். இவர் அமெரிக்க சைகை மொழியை சரளமாகப் பேசக் கூடியவர். இந்த மொழியை அவர் பள்ளியில் பாடமாகப் பயின்றவர் தனது எட்டு வயது முதல் காது கேளாதவர்களிடம் சரியான முறையில் தொடர்பு கொள்வதற்காக இந்த மொழியை அவர் கற்று வந்துள்ளார்.

வெப் கேமரா மூலம் 
 வெப் கேமரா மூலம் ஆன்லைனில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். டிஸ்னியில் அவர் பணியில் இருக்கும்போது இந்த ஆற்றலை அவர் பயன்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வெப் கேமராவில் அவரின் சைகை மொழியைப் பதிவு செய்யத் தொடங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு தனது வீடியோவை ஒளிபரப்பத் தொடங்கினார். இதனைக் கண்ட ஒரு காது கேளாதவர் இவருடைய மொழிப் புலைமை பற்றி கேட்டறிந்தார்.

தொடர்பு கொள்ளும் முயற்சி
அவர் தனது பார்வையாளர்களுடன் ஊடாடும் முயற்சியில் இறங்கினார். தன்னைப் பின்பற்றுகிறவர்கள் மற்றும் தனது விசிறிகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளள வேண்டும் என்று விரும்பினார்.

 உட்கார்ந்தபடி டைப்பிங் மற்றும் சாட்டிங் செய்வதை விட நேரடி தொடர்பில் பேசுவது இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கும் என்று நம்பினார். கிறிஸ்டல் பெரும்பாலும் தனது சொந்த செயல்பாடுகளை கேமராவில் பதிவிட்டு வெளியிட்டார். 
சில நேரங்களில் தனது வாழ்க்கை பற்றி பேசுவது, தனக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்வது, விளையாடுவது, நடனமாடுவது, போன்றவற்றை ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்தார்.

தொடர்ந்த பணி 
 வெப் கேமரா பயன்படுத்துவதை நிறுத்த விரும்பவில்லை. அவர் தனது எதிர்கால திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, வெப் கேமரா மூலம் தனது விசிறிகளைச் சந்திப்பதை நிறுத்தப் போவதில்லை என்று கூறினார். 
இதனால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் இதனை விட முக்கியமாக இந்த வேலை அவரை மிகவும் மகிழ்விப்பதாகவும் கூறினார். 

இருப்பினும் இந்த செயல்பாடுகளால் அவர் சில விமர்சனங்களை எதிர்கொண்ட போதும் இந்த வேலை அவருக்கு மன மகிழ்ச்சியைத் தருவதால் ஓருபோதும் இதனை விடப்போவதில்லை என்று கூறினார். இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்