வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒருவர் கூட பாஸ் ஆகல... அதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 17, 2019

ஒருவர் கூட பாஸ் ஆகல... அதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

நடப்பாண்டிற்கான பிஇ, பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு மே 2 ஆம் தேதி துவங்கி வரும் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இந்நிலையில், மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.




பொறியியல் கல்லூரிகள் 

நாடு முழுவதும் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அந்தந்த மாநில பல்கலைக் கழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும். அதன்படி, 2019-20 -ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் உரிய விளக்கம் அளிக்கத் தவறிய 92 பொறியியல் கல்லூரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பூர்த்தி செய்யாத கல்லூரிகள் 

பொறியியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டே அனுமதி வழங்கப்படும். அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத தமிழகத்தில் செயல்பட்டு வரும் 250 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை சார்பில் அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது.


கண்டுகொள்ளாத கல்லூரிகள் 

நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்த மேலும் 158 பொறியியல் கல்லூரிகளின் 421 இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 92 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய கால அவகாசத்துக்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமலும், உரிய விளக்கமும் அளிக்காமலிருந்துள்ளது.


மாணவர் சேர்க்கை குறைப்பு:

அவ்வாறு உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 53 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளத




முழுத் தடை மேலும்

 குறிப்பிட்ட 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பி.இ, பி.டெக் கலந்தாய்வு
 இதனிடையே, 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பிஇ, பி.டெக் பொறியியல் படிப்புக்கு மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 2 ஆம் தேதி துவங்கி வரும் மே 31-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


முதல் மூன்று இடங்கள் 

 2018 ஆம் ஆண்டு கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் சேலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி, கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, நாமக்கல் விவேகானந்தா இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள◌ை


ஒருவர் கூட தேர்ச்சி இல்லை 

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித பட்டியலில் தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். இதில் குறிப்பிட்ட 6 கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய 682 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது அண்ணா பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 74 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்க விகிதத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தரமான கல்லூரிகள்?

 கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 150 கல்லூரிகள் 50 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், நவம்பர் மாத தேர்வு முடிவுகளில் தரமான கல்லூரிகள் என சான்றளிக்கப்பட்ட 59 கல்லூரிகள் மட்டுமே 50 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளன. மிகவும் தரமான கல்லூரிகள் என வகைப்படுத்தப்பட்ட கல்லூரிகளில் 85.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி 
பெற்றுள்ளனர்.


50 சதவிகிதத்திற்கும் கீழ் 

482 பொறியியல் கல்லூரிகளில் 422 கல்லூரி மாணவர்கள் 50 சதவிகிதத்திற்கும் கீழே தேர்ச்சி பெற்றுள்ளன. 177 கல்லூரி மாணவர்களில் 50 முதல் 25 சதவீதத்திற்கும் இடைப்பட்ட தேர்ச்சியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


சரிவைச் சந்திக்கும் பொறியியல் துறை?

சமீப காலமாகவே தமிழகத்தில் பொறியியல் துறையின் மீது மோகம் குறைந்து கலைத் துறையின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே உள்கட்டமைப்பு வசதிகள் அற்ற பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்து அண்ணா பல்கலைக் கழகம் அதிரடியாக அறிவித்தது. மேற்கண்ட இந்த முடிவுகளானது தமிழகத்தில் பொறியியல் கல்வியைச் சீரமைக்க வேண்டியதன் கட்டாய அவசியத்தையே விளக்குகிறது.

No comments:

Post a Comment