Run World Media: எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது - தங்கை முறை பெண்ணை கொன்ற கொடூரன்

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 15, 2019

எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது - தங்கை முறை பெண்ணை கொன்ற கொடூரன்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார் ஒரு இளைஞர். எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனநிலையே இதுபோன்ற ஒருதலைக்காதல் சம்பவங்கள் கொலையில் முடிய காரணமாக அமைகின்றன. 


கொலையாளியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததில் பலத்த காயங்களுடன் அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். ஒருதலைக்காதலுக்கு பலியான பெண்ணின் பெயர் மலர்விழி மீரா என்பதாகும். திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் என்பவரின் மகளாவார். 

இவர் திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். அய்யப்பன் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர். தற்போது கட்சியில் தேர்தல் பணிக்கு மாநில பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

 பாலமுரளி கார்த்தி என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசித்து வரும் அவர் தாயைப் பார்ப்பதற்காக திருச்சிக்கு வருவராம். அப்போது மீராவின் மேல் காதல் ஏற்பட்டுள்ளது. முரளியின் தங்கை முறைதான் மீரா.


கத்திக்குத்து 
மலர்விழி மீரா நேற்று மாலை கல்லூரி முடிந்து பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் மலர்விழி மீராவிடம் மறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மலர்விழி மீராவை சரமாரியாக குத்தினார்.

கத்திக்குத்தில் மரணம்
 கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மீரா. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சாய்ந்தார். இதனை கண்டு அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்து ஓடி சென்று மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பொதுமக்கள் அடி
கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அந்த வாலிபரும் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அரசு மருத்துவமனையிலும் அந்த வாலிபரை விடாமல் பொதுமக்கள் துரத்தி சென்று தாக்கினர். இதில் அவர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார.

ஒருதலைக்காதல்
விசாரணையில் கத்தியால் குத்திய வாலிபர், அதே பகுதியை சேர்ந்த பாலமுரளி என்பதும், கொலையான மலர்விழி மீராவுக்கு அண்ணன் முறை உறவினர் என்பதும், முரளிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. திருமணத்திற்கு முன்பிருந்தே மலர் விழிமீராவை ஒருதலையாக காதலித்து வந்தாரம் முரளி, சகோதரி முறையான தன்னை காதலிப்பது தவறு என்று அவர் கண்டித்துள்ளார். திருமணமான பின்னரும் முரளியின் தொந்தரவு அதிகரித்தது. ஆனால் மலர்விழி மீராவோ மறுப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

காமவெறியில் கொலை 
 சென்னையில் வேலை பார்த்து வரும் முரளிக்கு மலர்விழி மீரா மீதான மோகம் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. ஆனாலும் மீரா அதை சட்டை செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த முரளி, எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று மீராவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். இந்த கொலை சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஒருதலைக்காதல் கொலைகள்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா மற்றும், உதவி கமிஷனர்கள் ராமச்சந்திரன் , மணிகண்டன் மற்றும் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையான மாணவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணை
காம வெறி தலைக்கு ஏறினால் தங்கை முறை பெண் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடுமா என்ன. கலி முத்தினால் பச்சிளம் பிஞ்சுகள் கூட காமவெறியன்களிடம் இருந்து தப்ப முடிவதில்லை. மகளை கூட பலாத்காரம் செய்யும் அப்பாக்கள் இருக்கின்றனர். எங்களுக்கு எங்குதான் பாதுகாப்பு கிடைக்குமே என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கதறி வருகின்றனர். திருச்சியில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்