Run World Media: September 2019

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்


எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, September 25, 2019

டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் குறைப்பு | Driving Licence Renewal Extension Date is reduced

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

  
தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கத் தவறினால் அதைப் புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

அது தற்போது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு ஆண்டு தவறினால் மீண்டும் முதலில் இருந்து டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்
  
இந்த புதிய நடைமறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனவே டிரைவிங் லைசென்ஸ் காலாவதி தேதியை கவனிக்காதவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க முன்பு 5 ஆண்டுகள் வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
  

Tuesday, September 24, 2019

`ஹெல்மெட்டுடன் வந்த 7 பேர்; அலறி ஓடிய மாணவன்!' - கல்லூரி அருகில் கொல்லப்பட்ட பயங்கரம் - Helmet Persons are murdering someone

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் அபிமணி என்ற திலீப். இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
 இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார் அபிமணி. மதிய உணவு சாப்பிடுவதற்காக 1 மணி அளவில் அவரது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். செய்துங்கநல்லூரிலிருந்து சிவந்திபட்டி ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது, ஹெல்மட் அணிந்து கொண்டு 3 பைக்கில் வந்த 7 பேர் அவரை வழி மறித்தனர். அக்கும்பலைப் பார்த்ததும் பைக்கை கீழே போட்டுவிட்டு காட்டுப்பகுதிக்குள் பயந்து ஓடினார் அபிமணி.
கையில் அரிவாள்களுடன் துரத்தி அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். கழுத்துப் பகுதியில் ஆழமாக வெட்டுபட்ட அபிமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கல்லுரி அருகில் கொலை நடந்ததால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தோம். கடந்த ஏப்ரல் மாதம், இதே ஊரைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் தீலிப்பின் தாத்தா ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் காளிதாசன் என்பவருக்கும் அப்பகுதியில் உள்ள சுடலைமாடசுவாமி கோயில் திருவிழாவின் வரவு செலவு கணக்கு காட்டுவதில் தகராறு வந்துள்ளது.
இதில் காமராஜை ஒரு கும்பல் வெட்டியது. இந்த வழக்கில் காளிதாசன் மகன் பொன்ராஜ், கொலை செய்யப்பட்ட அபிமணி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். காமராஜின் கொலைச் சம்பவத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இக்கொலைச் சம்பவத்தில் காமராஜின் சகோதரர் குமார் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். அபிமணியின் தாயார் பொன்ராணி அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.


இவருக்கு வளர்மதி என்ற தங்கையும், கண்ணன் என்ற தம்பியும் உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கொலைகளின் பட்டியலில் இது 20வது கொலையாகும். இதுகுறித்து எஸ்.பி.அருண் பாலகோபாலன் கூறுகையில், ``தூத்துக்குடி மாவடத்தில் தொடர்ந்து நடைபெறும் குற்றச் செயல்கள், கொலைகளை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 200 வாகனங்களில் போலீஸ் ரோந்து இரவு பகலாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


பழைய குற்றவாளிகளின் நடமாட்டம் ரகசியமாகக் கண்காணிக்கப்படுகிறது. இதில் உள் பகையால் ஏற்படும் கொலைகளையும் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்லூரி மாணவர் கொலை சம்பந்தப்பட்ட கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார். கல்லூரி அருகில் பட்டப்பகலில் நடந்த இக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

கருங்குழி பேரூராட்சியில் நுாலகம் வைத்து அசத்தல் | New Library in Karunguzhi Town Panchayat

கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில், சிறிய அளவிலான நுாலகத்தை அமைத்து, அதில் பல வகையான புத்தகங்கள் வைத்திருப்பது பயன் அளிப்பதாக உள்ளது என, ஊழியர்கள் கூறுகின்றனர்.மதுராந்தகம் ஒன்றியத்திறகு உட்பட்டது, கருங்குழி பேரூராட்சி.இப்பேரூராட்சி அலுவலகத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக அனைத்து பணியாளர்களுக்குமான சிறிய அளவிலான நுாலகம் ஒன்று, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நுாலகத்தில், திடக்கிழவு மேலாண்மை உள்ளிட்ட, அரசு திட்டங்கள் சார்ந்த பல புத்தகங்களும், அரசியல் அமைப்பு மற்றும் மூலிகை செடி வகைகள் புத்தகங்கள் உள்ளன.மேலும், மண் வகைகளின் தன்மைகள், பிளாஸ்டிக் விளைவுகள், பூமி வெப்பமாதல் உள்ளிட்ட, விளக்கங்கள் தரும், பல வகையான புத்தகங்களும் உள்ளன.


அலுவலகத்தில், மதிய உணவு இடைவெளி உள்ளிட்ட நேரங்களில், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், இப்புத்தகங்களை படிக்கின்றனர்.இந்த நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் மூலம், பல்வேறு தகவல்களை அறிந்து, விழிப்புணர்வுபெற வசதியாக உள்ளதாக அலுவலக பணியாளர்கள் பெருமையோடு கூறுகின்றனர்.

Wednesday, September 18, 2019

இரவு 9 மணிக்கு மேல் தாம்பரத்திற்குள் பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி | பொதுமேலாளர் தலையிட்டு பொறுப்பேற்பாரா...? | Padappai Bus Problem Latest News

அரசு பேருந்து என்றாலே அவல நிலைதான் என்ற கூக்குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருப்பது அனைவரும் அறிந்ததே.....!
தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீப காலமாக கலர்கலராக புதுப்புதுப் பேருந்துகளை கண்கவர் பொலிவுடன் போக்குவரத்துக் கழகத்துடன் இணைத்து வருகிறார். முதலமைச்சரின் இதுபோன்ற செயல்கள் மூலம் தமிழக மக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான பேருந்து வசதிகள் புதிய தொழில்நுட்பத்துடன் கிடைத்தது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
ஆனால் இதே போக்குவரத்துக் கழகத்தில்தான் பொதுமக்கள் அவதிக்குள்ளாக்கும் பல்வேறு செயல்களும் நடைபெற்று வருகிறது. பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் முறையான வழியிலோ அல்லது குறித்த நேரத்திலோ இயக்கப்படுவதில்லை.


குறிப்பாக தற்போது தாம்பரம்   முதல் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் வரை படப்பை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் இரவு 9 மணிக்கு மேல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக செல்வதில்லை. 
மாறாக, வள்ளுவர் குருகுலம் பள்ளி வழியாக திருப்பிவிடப்பட்டு சென்றுவிடுகின்றன.

எனவே, படப்பை மற்றும் அதைத் தாண்டி செல்லும் பொதுமக்கள் முதல் ஐ.டி ஊழியர்கள் வரை அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகுகின்றனர்.  பகல் முழுவதும் உழைத்துவிடு பணி முடிந்து இரவு வீடு திரும்பும் சாதாரண பொதுமக்கள் இரவு ஓய்வு எடுக்க குறித்த நேரத்திற்கு வீடு செல்ல இயலவில்லை.  
 
போக்குவரத்துக்கழக பணிமனையைச் சார்ந்த பொதுமேலாளர் அவர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை உரிய முறையில் கண்கானிக்கவில்லையா...? அல்லது தனியார் வாகனங்கள் வருவாய் ஈட்டுவதற்காக பொது மேலாளர் துணை போகிறாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மேலும் பொதுமக்கள் காஞ்சிபுரம் பணிமனை பொது மேலாளர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் உரிய நடவடிக்கை  மேற்கொள்ளவில்லை. 
 
எனவே, மேல் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இதுபோன்ற செயல்களின் மூலம் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. தமிழக அரசு இதுபோன்ற ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சம்மந்தப்பட்ட பணிமனை பொது மேலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா...? 
 

ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்யபிரியா உரையாடல் | சட்டங்கள் தெரிந்தால் குற்றங்கள் குறையும் | Kancheepuram Teachers Meeting with DIG Sathiyapriya | Run World Media

''மாணவர்கள், படிக்கும்போதே, சட்டங்களையும், நல்ல பழக்கங்களையும் கற்றுகொண்டால், வரும் காலத்தில் குற்றங்கள் குறையும்'' என, ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்யபிரியா பேசினார். 
 


காஞ்சிபுரத்தில், மாணவர் காவலர் படை, கடந்தாண்டு துவங்கப்பட்டது. இப்படை குறித்தும், இதில், ஆசிரியர்களின் பங்கு குறித்தும் அறிய, ஆலோசனை கூட்டத்திற்கு, ஏற்பாடு செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில், போலீஸ் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற, போலீஸ் பயிற்சி, டி.ஐ.ஜி., சத்யபிரியா பேசியதாவது:'மாணவர் காவலர் படை' முதலில், கேரளாவில் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் ஏற்படுத்த முடிவானது. தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 
 
பின், பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.இதற்காக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர், இந்த மாணவர் படையில் சேர்க்கப்படுவர். ஒரு பள்ளியில் இருந்து, 44 பேர் தேர்வாவர்.மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, பள்ளிக்கு இரு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 210 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு, செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளியில், இன்று நடக்கிறது.மாணவர்கள் படிக்கும்போதே, நல்ல பழக்கங்களையும், சட்டங்களையும் தெரிந்து கொண்டால், எதிர்காலத்தில் குற்றங்கள் குறையும். இதற்காகவே, இந்த மாணவர் படை.பணி ஓய்வுக்கு பின், நிம்மதியாக உறங்க வேண்டுமானால், போலீசார், பயமின்றி, நேர்மையுடன் பணிபுரிய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Monday, September 16, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் குவாரிக்கு எதிரான போராட்டம் தீவிரம் | பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளை அரசாங்கத்திடமே ஒப்படைக்க முடிவு | Anaikunnam Quarrying of Stone Problem ahead

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிரான போரட்டம் அடுத்தகட்டத்தினை எட்டியுள்ளது.
பல ஆண்டுகளாக கல்குவாரியினை எதிர்த்து போராட்டம் மற்றும் கிராமசபை கூட்ட புறக்கணிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த பொதுமக்கள் தற்போது தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்ற மத்திய, மாநில அரசுகளிடமிருந்து வழங்கப்பட்ட அனைத்து விதமான அடையாள அட்டைகளையும் வருகின்ற காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் அரசாங்கத்திடமே ஒப்படைக்க உள்ளதாக இன்று 16.09.2019 அன்று மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

ஏற்கனவே பலமுறை பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளிடமும், கனிமவள உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மேற்படி குவாரிக்கு எதிரான புகார் மனுவினை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த புகார் சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் சார்பாகவே வழக்கும் தொடரப்பட்டு விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவானது பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பிறகு கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் அவர்களிடம் நேரடியாக இன்று கொடுக்கப்பட்ட மனுவாகும்.

அரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்! விண்ணப்பித்துவிட்டீர்களா? Top 7 Government Jobs in Banks

நம்மில் பெரும்பாலானோர் அரசுத் துறையில் பணியாற்ற வேண்டும் என குறிக்கோளுடன் அதற்காக தயாராகி வருவர். அவ்வாறாக அரசுப் பணிகளுக்கு என தயாராகிவருவோர் முறையான வழிகாட்டுதல் இன்றி சில சமயங்களில் பணி குறித்தான தகவல் கிடைக்காமல் தவறவிடுவதும் உண்டு.


இந்தத் தொகுப்பில் கடந்த வாரம் வெளியாக வேலை குறித்த அறிவிப்பில் முக்கியப் பணிகள் தொகுக்கப்பட்டுள்ளன. விரைவில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.


நபார்டு வங்கி 
மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
பணி : உதவியாளர் 
மொத்தம் காலிப் பணியிடம் : 91 
விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 14 செப்டம்பர் 2019 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3 அக்டோபர் 2019 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
 
கூட்டுறவுச் சங்க உதவியாளர் வேலை 
கோவை மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
மொத்தம், 85 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
மேலாண்மை : தமிழக அரசு 
மொத்த காலிப் பணியிடம் : 85 
ஊதியம் : ரூ. 14,000 முதல் ரூ. 47,500 வரையில் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியம் 
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிறுவன செயலாளர், மேலாளர், தொழில்நுட்ப நிர்வாகி, என்ஸ்-ரே உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
நிர்வாகம் : தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் 
பணி : நிறுவன செயலாளர், மேலாளர், தொழில்நுட்ப நிர்வாகி, என்ஸ்-ரே
மொத்த காலிப் பணியிடம் : 40 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
 
இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை 
மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
மொத்தம் 48 பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் 
பணி : மூத்த அதிகாரி 
மொத்த காலிப் பணியிடம் : 48 
ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.09.2019


எஸ்பிஐ வங்கி அதிகாரி பணியிடங்கள் 
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இப்பணியிடங்களுக்கு தனித்தனியான தகுதிகளும், அனுபவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 
மொத்த காலிப் பணியிடம் : 477 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.09.2019 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.


நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) 
மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) 
மொத்த காலிப் பணியிடம் : 10 
பணி : தொழில்நுட்ப உதவியாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி, மருத்துவ அதிகாரி 
ஊதியம் : ரூ. 35,400 முதல் ரூ.2,08,700 வரையில் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஐபிபிஎஸ் கிளார்க் (IBPS Clerk Recruitment) 
 இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சின்டிகேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்றால் ஐபிபிஎஸ் சார்பில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறவேண்டியது கட்டாயம். இந்த அமைப்பின் சார்பில் ஐபிபிஎஸ் கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்ப தேதிகளும், தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
மொத்த காலிப் பணியிடம் : 12,075 
பணி : கிளார்க் 
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 17 செப்டம்பர் 2019 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09 செப்டம்பர் 2019 (மாலை 5)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

Saturday, September 14, 2019

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதின் எதிரொளி | திருமண அழைப்பிதழில் பாருங்க... Kancheepuram District Splitted by 2 district namely Chengalpattu and Kancheepuram District

செங்கல்பட்டு மாவட்டம் (பழைய காஞ்சிபுரம் மாவட்டம்), மதுராந்தகம் வட்டம், கல்லியகுனம் கிராமத்தைச் சார்ந்த இளைஞர் திரு.மணிகண்டன் என்பவரது திருமணம் வரும் 16.09.2019 அன்று நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கான அழைப்பிதழ் அச்சிடும் தருணத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், "காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு"என இரு மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
 
மேற்படி அறிவிப்பை வரவேற்ற மணமகன் திரு.மணிகன்டன் மற்றும் "Kalliyakunam Education Developer" நண்பர்கள் ஆகியோர் இரு மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்ததனை ஏற்று முதன்முறையாக திருமண அழைப்பிதழில் செங்கல்பட்டு மாவட்டம் என அச்சிட்டது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்றுள்ளது. "புதிய வாழ்க்கை புதிய மாவட்டம்" என வாழ்க்கையை தொடங்கவிருக்கும் "திரு.மணிகண்டன் மற்றும் வாணிஶ்ரீ" ஆகியோருக்கு RunWorld Media சார்பில் இனிய வாழ்த்துக்கள்.....!!!


 

இனி 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு| Common Public Exam for 5th and 8th Standard students from this Educational Year

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (RTE Act 2009), சட்டத்திருத்தங்களின் அடிப்படையில் வரும் கல்வியாண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு (Common Board Exam) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இனி அனைத்து பள்ளி மாணவர்களும் துவக்கப்பள்ளி முதலே படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனவும், மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் கல்வி சார்ந்த அறிவு சிறுவயது முதலே வளர்க்க ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, September 10, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியை எதிர்த்து அடுத்தகட்ட நடவடிக்கை | The Next Step to oppose the Quarrying of Stone at Anaikunnam Village

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட்டுவருகிறது. இந்த கல்குவாரிக்கு எதிராக ஆனைக்குன்னம் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் சில ஆண்டுகளாக பல்வேறுகட்ட போராட்டங்கள் மற்றும் கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு போன்றவை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், கல்குவாரி மூலம் இயக்கப்படும் கனரக வாகனங்களின் காரணமாக பல்வேறு விபத்துகள் நடைபெறுவதாலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்பதால் கனரக வாகனங்களை நிறுத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நேற்று 09.09.2019, வட்டார போக்குவரத்து அலுவலர் (R.T.O), கோட்டாட்சியர் (R.D.O), வட்டாட்சியர் (Tahsildar), காவல்துறை ஆய்வாளர் (Inspector of Police), வட்டார வளர்ச்சி அலுவலர்(B.D.O) என பல்வேறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

Monday, September 9, 2019

எல்.எண்டத்தூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி | Private Bus Accident at L.Endathur | Bus Accident Near Madurantakam | Run World Media

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், லா.எண்டத்தூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமும், 17 பேர் படுகாயமும் அடைந்தனர். 

திண்டிவனத்திலிருந்து உத்திரமேரூர், மதுராந்தகம் வழியாக காஞ்சிபுரம் நோக்கி  சென்ற இந்த தனியார் பேருந்தானது  இன்று மாலை 03.10 மணியளவில்  ஓட்டுநரின் கட்டுப்பாடு இழந்ததால் விபத்தில் சிக்கியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் லேசான காயமடைந்தவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையிலும், படுகாயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் படுகாயமடைந்த விஜி என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்த மேல்மருவத்துர் காவல் உதவி ஆய்வாளர் திரு.அன்பு அவர்கள் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 


 

Friday, September 6, 2019

Typewriting Exam Time Table February 2020 | Short Hand Exam Time Table February 2020 | TNDTE Typewriting Exam Time table Feb 2020 | Run World Media

GOVERNMENT TECHNICAL EXAMINATIONS IN COMMERCE SUBJECTS – FEBRUARY 2020 TIME TABLE
NOTE: 1.  This  Time-Table  will  be  strictly  followed  even  though,  a holiday  is  subsequently  declared   on  any  day of the Examination  that  Examination,  under  any  circumstances  will  not  be  stopped  without written orders from this office. 
 
 Sunday, September 1, 2019

வயிறு வலி.. ஆஸ்பத்திரிக்கு போன சிறுமிக்கு பிரசவம்.. கர்ப்பத்திற்கு காரணம் 17 வயது சிறுவன்! | 17 Year Tamil School Girl Pregnent by 17 Year Boy | Run World Media

வயிறு வலிக்காக ஆஸ்பத்திரிக்கு போன 17 வயது மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த கர்ப்பத்திற்கு காரணம் 17 வயது சிறுவன் என்பது இன்னொரு அதிர்ச்சி! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி ஒருத்தி வயிற்று வலி சிகிச்சைக்காக வந்திருந்தாள். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது, அது வயிறு வலி இல்லை, பிரசவ வலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து நடந்த சிகிச்சையை அடுத்து, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் விஷயம் வெளிப்பட்டது. சிறுமி 11ம் வகுப்பு படிக்கும் போது, கூட படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் காதலித்து உள்ளனர். ஆனால் அந்த மாணவன், 12-ம் வகுப்பு படிக்கும்போதே பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பிரைவேட் காட்டன் மில்லுக்கு வேலைக்கு போய்விட்டான். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் கர்ப்பம் அடைந்து இருக்கிறாள் மாணவி. ஆனால் இதை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.


வழக்கம்போல் ஸ்கூலுக்கும் போய் வந்திருக்கிறாள். திடீரென வயிற்று வலி ஏற்படவும்தான் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த விவரங்களை உறுதி செய்த போலீசார், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 17 வயது சிறுவனை கைது செய்து பல்லடம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர். 
இதையடுத்து, சிறுமியால், குழந்தையை பாதுகாக்க முடியாது என்ற காரணத்தினால், பெண் குழந்தையை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிறுமிக்கு உரிய வயது வந்த பின்னர் இந்த குழந்தை அவளிடமே ஒப்படைக்கப்படும். 17 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்