Run World Media: November 2019

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 27, 2019

படிப்பது 7ம் வகுப்பு.. வேலை செய்வது ஐடி நிறுவனத்தில்.. அதுவும் டேட்டா சயிண்டிஸ்டாக.. ! Hydrabad Young Data Scientist

இந்தியர்களின் அதீத மூளைக்கு எல்லையே கிடையாது. அதிலும் தகவல் தொழில் நுட்ப துறையை பொறுத்த வரை அதற்கு ஈடு இணையே கிடையாது என்றே கூறலாம். ஏனெனில் இந்தியா மட்டும் அல்ல, பல நாடுகளிலும் ஐடி துறையில் பணி புரியும் ஊழியர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை தான் அதிகம். 

அதை நீருப்பிக்கும் விதமாகவே ஹைதராபாத்தில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் டேட்டா சயிண்டிஸ்ட் பணிக்கு, 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவனை தேர்வு செய்துள்ளனராம்.


ஹைத்ராபாத்தில் உள்ள ஸ்ரீசைத்தன்யா டெக்னோ பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் சித்தார்த் ஸ்ரீவாஸ்தவ் பில்லி. இவன் மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் டேட்டா சயிண்டிஸ்டாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். இது குறித்து மாணவன் சித்தார்த் கூறுகையில், எனக்கு 12 வயது தான் ஆகிறது. நான் மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் டேட்டா சயிண்டிஸ்டாக பணி புரிகிறேன். 

மேலும் நான் ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் படிக்கிறேன். செயற்கை நுண்ணறிவியல் குறித்த ஆர்வம் தான் என்னை டேட்டா சயிண்டிஸ்டாக மாற உதவியது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சிறுவயதிலிருந்தே கோடிங் எழுதுவதில் இருந்த ஆர்வத்தை அவரது தந்தை புரிந்து கொண்டு உதவியதாகவும் கூறியுள்ளார். 

அதற்கு மிக்க நன்றி என்று தனது தந்தைக்கும் நன்றி தெரிவித்துள்ள சித்தார்த், சிறு வயதிலேயே வேலை பெற எனக்கு நிறைய உதவி செய்தவர். எனது அப்பா, எனக்கு கோடிங் குறித்து பல பாடங்களை கற்றுக் கொடுத்தவர். இன்று எனக்கு சாத்தியமான அனைத்துக்கும் எனது பெற்றோர் தான் காரணம் என்று தனது பெற்றோரை பெருமைப்படுத்தியுள்ளராம்.


மேலும் தனக்கு மிக உத்வேகமாய் ரோல்மாடாலாய் இருந்தவர் தன்மய் பஷி என்றும் சித்தார்த் கூறியுள்ளராம். ஏனெனில் சிறு வயதிலேயே அவருக்கு டெவலப்பராக கூகுளில் வேலை கிடைத்ததாக கூறியுள்ளார்.

Friday, November 22, 2019

ஆபாச வீடியோ டவுன்லோடு செய்ய வலியுறுத்தி அசிங்கமாக நடந்து கொண்ட பாதிரியார் | Paster Forcing the girls for abuse videos

செல்போனில் ஆபாச வீடியோவை காட்டியதுடன், அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்று மாணவிகளை வற்புறுத்திய பாதிரியார் & பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வருகிறது புனித மரியன்னை உயர்நிலை பள்ளி.4 00க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் தாளாளராக உள்ளவர் பாதிரியார் மரிய ஆன்டனி தாஸ். 55 வயதாகிறது.. 
 
காமம் தலைக்கேறிய நபராக இருந்திருக்கிறார் இவர். அந்த பள்ளியில் 9, 10-ம் வகுப்புக்கு பிள்ளைகளுக்கு இவர்தான் பாடம் நடத்துவது வழக்கம். அப்படிதான் நேற்று முன்தினம் பாடம் நடத்தி உள்ளார்.டவுன்லோடு 
அதில் 5 மாணவிகளிடம் தன் செல்போனை தந்து, ஒரு புது ஆப் இருக்கு.. அதை பாருங்க.. அது உங்களுக்கு பிடிச்சிருந்தா, வீட்டுக்கு எடுத்துட்டு போய், உங்க செல்போனிலும் டவுன்லோடு செய்து கொள்ளுங்க" என்று சொல்லி உள்ளார். இதனால் மாணவிகளும் ஆர்வத்துடன் அது என்ன என்று வாங்கி பார்த்தனர்.. அப்போது அதில் ஆபாச படம் இருந்தது.

முற்றுகை 
இதை பார்த்து அதிர்ந்து போன மாணவிகள், எதுவும் பேசாமல், அந்த செல்போனை பாதிரியாரிடமே திருப்பி தந்துவிட்டனர். பின்னர் இதை பற்றி மாணவிகள் அவரவர் வீட்டில் சென்று பெற்றோரிடம் சொல்லி உள்ளனர். இதைக் கேட்டு ஆத்திரமும், அதிர்ச்சியும், கோபமும் நிறைந்த பெற்றோர்கள், பள்ளி முன்பு திரண்டு விட்டனர்.புகார் 
"படிக்கிற குழந்தைகளுக்கு எப்படி அவர் ஆபாச வீடியோ காட்டலாம், அவர் மீது நடவடிக்கை எடுங்க" என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர். தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி சொன்னார்கள். பின்னர், இந்த சம்பவம் குறித்து கோவை மகளிர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.ஆபாச படம் 
இதன்பேரில் போலீசார், மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படத்தை காட்டி, பாலியல் உணர்வை தூண்டியதாக பாதிரியார் மரிய ஆன்டனி தாஸ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மாணவிகளுக்கு பாதிரியார் ஆபாச படம் காட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Monday, November 18, 2019

[வேலைவாய்ப்பு] தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உதவியாளர் வேலை! Children Protection Assistant Job Dharmapuri District

தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் (Child Protection Unit) இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரியில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நவம்பர் 12 ஆம் தேதி புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தற்காலிக பணியாகும். 1 வருடம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. இருப்பினும் அடுத்தடுத்து வரக்கூடிய வேலைவாய்ப்புகளில் இந்த பணி அனுபவம், விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடும். 

எனவே, தற்காலிக பணி என்று பாராமல், அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு 1 காலியிடம் உள்ளது. மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், DCA எனப்படும் கம்ப்யூட்டர் பயன்பாட்டு கல்வியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் இயக்குவதில் விண்ணப்பதாரர்கள் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. அதிகபட்சமாக விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. 

 
மேற்கண்ட பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப்படிவம் தயாரித்து, அதனை பூர்த்தி செய்து, நவம்பர் 27 ஆம் தேதிக்குள் சம்ர்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.


இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
Dharmapuri Child Welfare Recruitment 2019


Friday, November 15, 2019

[வேலைவாய்ப்பு] கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு TNPSC தேர்வுகள் அறிவிப்பு! - Veterinary Assistant surgeon Requirement 2019

TNPSC Recruitment 2019: TN Veterinary Assistant Surgeon: கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணிக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர் 13 ஆம் தேதி புதிய தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
அதன்படி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு நவம்பர் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் நடைபெறும். உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணிக்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
TN Veterinary Assistant Surgeon பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வு பாடத்திட்டம், விண்ணப்பக்கட்டணம் உள்ளிட்ட முழு விபரங்கள் விரைவில் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும். டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in அல்லது tnpsc.exams.net, tnpsc.exams.in ஆகும்.  
தற்சமயம் டி.என்.பி.எஸ்.சி.,யின் துணுக்கு செய்தி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையளத்தை பார்வையிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
இதற்கு முன்பு கடந்த 2013 ஆம் ஆண்டு இதே போல், கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்பட்டது. அதே கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு பாடத்திட்டம் தான் இப்போதும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கையை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும். 
http://www.tnpsc.gov.in/notifications/5_2013_not_eng_vas_2013.pdf

Thursday, November 14, 2019

இராமாபுரத்தில் குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் | Awareness Rally for Stoping Child Marrige in Ramapuram

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராமாபுரம் கிராமத்தில் நவம்பர்-14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு திறமை போட்டிகள் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே நடைபெற்றது.
மேலும், ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் (Rural Star Trust) மூலமாக பள்ளி மாணவர்கள் குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டனர். விழாவின் சிறப்பு விருந்தினரான யோராடோரா அறக்கட்டளையின் நிறுவனர்  திருமதி.ஷீஜா அவர்கள் ஊர்வலத்தினை கொடியசைத்து துவக்கினார். 


இந்த பிரச்சாரத்தில் குழந்தைத் திருமண தடுப்பு, குழந்தை பாதுகாப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு, குழந்தை வன்கொடுமை எதிர்ப்பு, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சம்மந்தப்பட்ட பதாகைகளை கையில் பிடித்து கோஷமிட்டபடி பள்ளி மாணவர்கள் ஊர்வலம் மேற்கொண்டனர். 

மேலும் இராமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேச்சுப்போட்டி மற்றும் இதர போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவின் சிறப்பு விருந்தினரான திருமதி.ஷீஜா அவர்கள் விழாவினை சிறப்பித்தார்.


இந்த விழாவில் Rural Star Trust நிறுவனத்தன் இயக்குநர் திரு.அ.டோமினிக் அவர்கள் வரவேற்புரையுடன் வேலாமூர்  ஊராட்சி செயலர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான திரு.இர.துரைவேலு அவர்களின் முன்னிலையில் ஊர்வலம் மற்றும் விழாக்கூட்டம் நடைபெற்றது.
 

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் திரு.அருள், ரைஸ்மில் உரிமையாளர் திரு.K.ஐயப்பன், LIC முகவர் திரு.சுகுமார், Run World Media செய்தியளார்.திரு.பழனிவேல் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
 

மேலும், பள்ளி மாணவர்கள், சக ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் ஆசிரியை திருமதி.ஷீரிஜிதா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

 

Friday, November 1, 2019

காஞ்சியில் செவிலிமேடு குடியிருப்பு பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லை | Rain Water Blocked in Housing Sections at Kancheepuram Sevilimedu

செவிலிமேடு, அவ்வையார் நகர் பகுதியில், மழைநீர் செல்ல வழியில்லாமல் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள அவ்வையார் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.அந்த பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கிறது. இதனால், கொசு அதிகரித்து வருகிறது.தண்ணீரில் நடந்துதான் வெளியில் செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் கூறியதாவது:இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கடைகள், வீடுகள் கட்டி விட்டனர், மேலும் அவர்கள் அந்த இடத்தை மண் கொட்டி மேடாக்கி விட்டனர். இதனால் மழை காலத்தில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது.


இந்த தண்ணீர் வற்றுவதற்கு பல மாதங்களாகும். அதுவரை குழந்தைகள், பெரியவர்கள் தண்ணீரில்தான் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.தண்ணீர் செல்வதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்