Run World Media: 01/03/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 3, 2019

[வீடியோ] தூத்துக்குடியில் டீ மாஸ்டர் மீது போலீஸ் டீ ஊற்றி அராஜகம் - Tuticurin Police Harassment Video

29-12-18 காலை சுமார் 4மணி அளவில்  தூத்துக்குடி ரூரல் DSP முத்தமிழ் மற்றும் அவருடைய பாதுகாவலர் பொன்பாண்டி மற்றும் ஒரு காவலர்...


தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரத்தில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி அய்யங்கார் பேக்கரியில் மூன்று லெமன் டீ கேட்டுள்ளார்கள் டீ மாஸ்டர் டீயை போட்டு கொடுத்துள்ளார் அந்த டீ நல்லா இல்லை என்று  சொல்லி DSPஅந்த டீ மாஸ்டரை  கன்னத்தில்  ஓங்கி அடித்துவிட்டு தனது இடது கையிலிருந்த டீயை மார்பு மீது ஊற்றும் காட்சி...


அது மட்டும் இல்லாமல் DSP பாதுகாவலர் பொன்பாண்டி அந்த டீ மாஸ்டரை வண்டியில் ஏற்றி புதுக்கோட்டை சுங்கச்சாவடி வரைக்கும்    நி என்ன சாதி என்று கேட்டு மாறி மாறி கன்னத்தில் அடித்தும் அவதூறாக பேசியுள்ளார் பின்னர் புதுக்கோட்டை சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டனர். இந்த அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டக்குன்னு பார்த்தால் பாத்திரக்கடை போல தோணும்.. ஆனால் மேட்டரே வேற

பளபளவென டிபன் பாக்ஸ்களை அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை டக்கென பார்த்தால் ஒரு பாத்திரக்கடை போலதான் தோன்றும். 

ஆனால் அது ஒரு ஹோட்டல்!! பிளாஸ்டிக் உபயோகிக்க கூடாது என்று அரசு சொல்லி கண்டிப்புடன் சொல்லிவிட்டது. அதனால் உணவு பொருட்களை பார்சல் செய்ய வாழை, தென்னை, தாமரை இலைகளையும், மூங்கில், மண்பாண்டம் உள்ளிட்ட பொருட்களையும் பயன்படுத்த மக்கள் தொடங்கி விட்டார்கள். 
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

அரசு அறிவிப்பு வெளியானவுடனேயே கடைக்காரர்கள் இதற்கு இவ்வளவு ஒத்துழைப்பு தருவார்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிலும் சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள்தான் பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


பொட்டலங்கள்

மற்ற கடைகளை காட்டிலும் ஹோட்டலில்தான் நிறைய பார்சல்கள் கட்ட வேண்டி வரும். ஒவ்வொரு உணவுக்கும் ஒரு பொட்டலம் என்று ரெடி ஆகும். அதனால் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில் ஹோட்டல்களுக்குதான் கூடுதல் சிக்கல் வரும்.


வாடகைக்கு டப்பா 

இதற்காக ஒரு ஐடியாவை கையில் எடுத்துள்ளது ஓசூரில் உள்ள ஒரு ஹோட்டல். கல்லாவில் நிறைய டிபன் பாக்ஸ்களை அடுக்கடுக்காக வைத்திருக்கிறது. பெரிய மற்றும் சிறிய கேரியர்கள் உள்ளன. யாராவது பார்சல் கேட்டு வருபவர்களிடம், பாத்திரங்கள் எதுவும் இல்லையென்றால், இதிலிருந்து ஒரு டிபன் பாக்ஸை வாடகைக்கு தருகிறது. அதற்கு டெபாசிட்டாக கொஞ்சம் பணத்தையும் முன்பணமாக வாங்கி கொள்கிறது.


டெபாசிட் பணம் 

சாப்பாட்டுக்கு ஏற்ற வகையில் டிபன்பாக்ஸ்களின் சைஸ் மாறுகிறது. டிபன் பாக்சில் சாப்பாட்டை பார்சல் செய்து தருகிறார்கள். இதனை வாங்கி கொண்டு போன வாடிக்கையாளர்கள், பிறகு வந்து ஓட்டலில் டிபன் பாக்சை திரும்ப கொடுத்துவிட்டு, ஏற்கனவே தந்த டெபாசிட் பணத்தை வாங்கி கொண்டு போகிறார்கள்.


பெரும் வரவேற்பு  

டிபன் பாக்ஸ் திரும்ப வரவில்லையென்றாலும் ஓட்டல்காரருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அப்படியே சாப்பாடுடன் சேர்த்து டிபன் பாக்சையும் சேர்த்து விற்ற மாதிரி ஆகிவிடுகிறது. அதனால் இந்த புதிய முறை வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.


நோட்டீஸ் போர்டு 

இதுவாவது பரவாயில்லை... உரிய பணத்தை பெற்று கொண்டு செய்கிறார்கள். சென்னையில் ஒரு ஹோட்டலில் வேற சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த ஹோட்டல் எங்கிருக்கிறது என தெரியவில்லை. ஆனால் வெளியே ஒரு நோட்டீஸ் போர்டு வைத்திருக்கிறார்கள்.


சூப்பர்ல!! 

அதில், "பார்சல் சாப்பாடு வாங்குவதற்கு கேரியர் எடுத்து வந்தால் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்" என்று எழுதியுள்ளார்கள். சூப்பர்ல!! நம்ம ஆளுங்களுக்கு இந்த விஷயத்தில் இவ்வளவு விழிப்புணர்வு இருக்கும் என்று தெரிந்திருந்தால், என்னைக்கோ பிளாஸ்டிக்கை ஒழித்து கட்டி இருக்கலாம்!!

இறந்த பிச்சைக்காரரின் செயற்கைக் காலில் விதவிதமாய் ரூபாய் நோட்டுகள்.. ஷாக் ஆன போலீசார்!

ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரரின் செயற்கைக் காலில் இருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடக்க இயலாத மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். 
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் காலை திடீரென உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்நபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரின் உடல் கனமாக இருந்ததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரது செயற்கைக் காலை அகற்றினர். அதில் ஏராளமான ரூபாய் மற்றும் சில்லரைக் காசுகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். 

அதாவது, 42 நோட்டுகள் ரூ.500, 470 நோட்டுகள் ரூ.100, 20 நோட்டுகள் ரூ.200, 215 நோட்டுகள் ரூ.50, 430 நோட்டுகள் ரூ.20, 528 நோட்டுகள் ரூ.10 என மொத்தம் ரூ. 96 ஆயிரம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட லட்சாதிபதியாக இருந்த அந்த பிச்சைக்காரர் யார் என போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஷரீப் என்றும் தெரிய வந்துள்ளது. திருட்டு பயத்தில் அவர் தான் சேமித்த பணத்தை தனது செயற்கைக் காலில் மறைத்து வைத்திருந்துள்ளார்.

வெளியான அதிர்ச்சி தகவல்.. 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்

ரூ.2000 நோட்டுக்களை பிரிண்ட் செய்வதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்து மத்திய அரசு அறிவித்த பிறகு, 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. 
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

பண மதிப்பிழப்பால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவிய நேரத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டது. 2018ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த மொத்த பண மதிப்பு 18.03 லட்சம் கோடியாக இருந்தது. அதில் 6.73 லட்சம் கோடி ரூபாய், அதாவது 37 சதவீதம், 2000 ரூபாய் நோட்டுக்களாகும். 7.73 லட்சம் கோடி அதாவது 43 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்களாகும். மற்றவை அதைவிட குறைந்த மதிப்புள்ள நோட்டுக்கள்.


ஐடியாவே தப்பு

1000 ரூபாய் நோட்டுக்களை நிறுத்திவிட்டு 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வது, பண பதுக்கலுக்கும், கருப்பு பண வர்த்தகத்துக்கும் மேலும் உதவி செய்யும் என்று பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன. இதை உறுதி செய்வதை போல கடந்த ஏப்ரல் மாதம், நாடு முழுக்க முக்கிய நகரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.


2000 நோட்டு பதுக்க எளிதானது  

மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருந்ததையடுத்து பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிலும், 2000 ரூபாய் நோட்டுக்களை எளிதாக பதுக்கியிருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக, வருமான வரித்துறை இக்காலகட்டத்தில் நடத்திய ரெய்டுகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள்தான் கட்டுக்கட்டாக சிக்கின.


2000 ரூபாய் நோட்டு நிறுத்தம்  

இந்த நிலையில்தான், 2000 ரூபாய் நோட்டுக்கள் பிரிண்ட் செய்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக, மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக, 'தி பிரின்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகும் என்று கூற முடியாது என்றபோதிலும், மெதுவாக இவை புழக்கத்தில் இருந்து தானாகவே வெளியேறிவிடும் வாய்ப்புள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.


படிப்படியாக குறைக்கப்பட்டது 

ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதில், 2017-18ம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக சேர்க்கப்படும் எண்ணிக்கை குறைந்துவிட்டது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இக்காலகட்டத்தில் மொத்த பண மதிப்பில் 7.8% மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அதேநேரம், 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது அதிகரித்துள்ளதாம். 2017ம் ஆண்டு மார்ச் மாதம், 22.5% என்ற அளவில் இருந்த 500 ரூபாய் நோட்டுக்கள் பங்களிப்பு, கடந்த வருடம் மார்ச் மாதம் 42.9 சதவீதமாக உயர்ந்தது.

எல்லாம் சரி, மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்களே பிரேம்ஜி

பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

படங்களில் நடிப்பதுடன் தந்தை கங்கை அமரன் வழியில் இசையமைக்கவும் செய்கிறார் பிரேம்ஜி. ட்விட்டரில் அவர் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். யாராவது கலாய்த்தாலும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் நபர். இந்நிலையில் அவரே அவரை கலாய்த்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


பிரேம்ஜி 

பார்லி ஜி பிஸ்கெட் பாக்கெட் கவரில் இருக்கும் பாப்பாவுக்கு பதிலாக தன் புகைப்படத்தை வைத்து ஒரு மீமை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி.


கொண்டை  

முகத்தை மாற்றிய பிரேம்ஜி பாப்பாவின் கையை மாற்ற மறந்துவிட்டார். கெட்டப்பை மாற்றினாலும் மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்களே பிரேம்ஜி என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.


பாவம்.., ஏழு கழுத வயசானாலும் மனசுல இன்னும் குழந்தையாவே வாழ்ந்துட்டு இருக்காரு 


கிண்டல்  

பிரேம்ஜியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள். 


பெண் 

பிரேம்ஜிக்கு பயபக்தியான பெண் வேண்டுமாம். அப்படிப்பட்ட ஒரு பெண் இன்னும் கிடைக்காததால் சிங்கிளாக உள்ளாராம். இந்நிலையில் அவருக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மறக்கக்கூடாதவை

பெண்களே வீட்டிலிருந்து புறப்படும் முன் சிலவற்றை மறக்காமல் செய்யப் பழக வேண்டும். வெளியில் செல்லும் போது பெண்கள் மறக்காமல் செய்ய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.

எங்காவது புறப்படுவது போதெல்லாம் கடிகாரம் வேகமாக சுற்றுவது போல இருக்கும். என்னது ஒன்பது மணியாடுச்சா" என சத்தமாகவே சொல்லிக் கொண்டு, அவசர அவசரமாக டிபனைச் சாப்பிட்டு விட்டு, வீட்டை விட்டு கிளம்பி பஸ் ஸ்டாப்புக்கு கிட்டத் தட்ட ஓடிவோம்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

நெருக்கியடித்து பஸ்ஸில் ஏறி, டிக்கெட் எடுக்கும் போது தான் 'வீட்டை ஒழுங்காக பூட்டினோமா' என்கிற சந்தேகம் வரும். பிறகு, சந்தேகங்கள் ஒவ்வொன்றாக அதிகரித்து விடும். அது மெல்ல பதட்டத்தை அதிகரிக்கச் செய்து, அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்து விடுவோம்.


இது அடிக்கடி நடந்தால் அலுவகலமோ வெளியிலோ செல்லும் போதெல்லாம் டென்ஷன் தான். அதனால் வீட்டிலிருந்து புறப்படும் முன் சிலவற்றை மறக்காமல் செய்யப் பழகலாமே பெண்களே!

* சிலிண்டரிலிருந்து கேஸ் அடுப்புக்குச் செல்லும் ரெகுலேட்டரை ஆஃப் பண்ண வேண்டும். வழக்கமாக எல்லோரும் சொல்வது தான். ஆனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், சேதமும் அதிகமாகும் அல்லவா. அதனால் சமையல் வேலைகள் முடிந்ததும் மறக்காமல் ரெகுலேட்டரை ஆஃப் செய்து விடுங்கள். ஒரு வேளை அப்படியே செய்தாலும் வீட்டிலிருந்து புறப்படும் முன் அவசியம் அதை செக் பண்ணத் தவறாதீர்கள்.


* பாத்ரூம், கழிவறை, சமையலறை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தண்ணீர் டேப்களை நீர் சொட்டாமல் மூடப்பட்டிருக்கிறதா எனப் பாருங்கள். ஏனெனில் ஒவ்வொரு சொட்டாக சொட்டினால் நீங்கள் திரும்ப வருவதற்குள் வாளிக் கணக்கில் நீர் விரயமாயிருக்கும். நீரைச் சேமிப்பது நமது கடமையும் அல்லவா.
* சமையல் செய்யும் போது சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பாத்திரங்களை அவசரத்தில் மூடாமல் மறந்திருப்பீர்கள். அதனால் சமையல் முடிந்த பிறகோ, வீட்டிலிருந்து புறப்படும் முன்போ மறக்காமல் செக் பண்ணாவிட்டால், எறும்பு, பூச்சிகள் புகுந்து பொருட்கள் கெட்டுவிடும்.

* பலரின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல ஆகி விட்டது பிரிட்ஜ். ஆனால், அது கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது என்பதற்காக சில பொருட்களை, பல நாட்களாக அதிலே வைத்திருப்பீர்கள். அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கும். அதை குப்பையில் எறிய வேண்டும் என நினைத்து மறந்திருப்பீர்கள். ஆனால் வெளியே சென்று வர பல மணிநேரமாகும் எனில் அதை பிரிட்ஜைத் திறந்து ஒருமுறை செக் பண்ணி விடுவதே நல்லது.

* பீரோவைத் திறந்திருப்போம் ஏதோ நினைவில் சாவியை பீரோவிலேயே வைத்திருப்பீர்கள். பிறகு மற்ற வேலைகளில் மூழ்கியிருப்பீர்கள். அது இயல்பு தான். ஆனால், வெளியே புறப்படும் போது, அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால் மறக்காமல் அதைப் பத்திரப்படுத்துங்கள்.

* புறப்படும் முன் வீட்டுக்குள் ஏதேனும் மறந்து விட்டோமா என்று சுற்றிப் பார்ப்பதுடன் வெளியே வந்து விடுவீர்கள். ஆனால் வீட்டின் வேறு பகுதியில் துணியைக் காயப் போட்டிருந்தால், அதுவும் வெளியிருந்து யாரேனும் எடுக்கும் வசதியில் இருந்தால் அவசியம் அதை எடுத்து விடுங்கள். அது, உங்களுக்கோ வீட்டினருக்கோ மிக விருப்பமான உடைகளாக கூடவே இருக்கக் கூடும்.

* அயர்ன் பண்ணும் போதோ, மிக்ஸியில், கிரைண்டரில் அரைக்கும் போதோ, மின்சாரம் போயிருக்கும் ஏதோ நினைவில் ஸ்விட்சை ஆஃப் பண்ண மறந்திருப்பீர்கள். வீட்டிலிருந்து புறப்படும் வரை மின்சாரம் வந்திருக்காது. அதனால் அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவீர்கள். அதனால் புறப்படும் முன் ஸ்விட்ச் போர்டு அனைத்தையும் செக் பண்ண மறக்காதீர்கள். இது போன்ற மின் சாதனப் பொருட்களில் நீர் பட்டு அல்லது நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல்
திரும்பவும் பயன்படுத்தும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

* கடைசியாக, வாசல் கதவைப் பூட்டும் போது, பதட்டத்தில் சரியாக பூட்டாமல் விடுவோர் அதிகம். அதனால், அந்த பத்து நொடிகளை மிகவும் நிதானமாக இருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கும். அதோடு சாவியை உங்களின் ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தவும் மறக்காதீர்கள். 

பாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு.. இந்த டிக்டாக் தொல்லை தாங்க முடியலையே

பாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு... வந்த சாமியாரை நிம்மதியா சாப்பிடகூட விடல... டான்ஸ் ஆடியே கதி கலங்க வைத்துவிட்டார் ஒரு இளைஞர்!! 

இப்போதெல்லாம் டிக்-டாக் என்ற ஆப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இதில், இளசுகள் முதல் பெரிசுகள் வரை தங்கள் கலைதாகத்தை அப்படியே பிழிந்து எடுத்து வருகிறார்கள். சில சமயங்களில் சுவாரஸ்ய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அப்படி ஒரு வீடியோ ஒன்றுதான் இது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


விபூதி சாமியார்

அது ஒரு மெஸ் போல தெரிகிறது. கூட்டம் அவ்வளவாக இல்லை. ஒரு பெஞ்சுக்கு ஒருத்தர் என உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். உடம்பெல்லாம் விபூதியை பூசி, தாடி வைத்த சாமியார் ஒருவரும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார். வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டிருக்கிறது.


சாம்பார் ஊற்றுகிறார்  

அந்த மெஸ் ஓனரா, அல்லது வேறு நபரா என தெரியவில்லை, திடீரென ஒரு டிப்-டாப் இளைஞர் சாமியாருக்கு பக்கெட்டிலிருந்த சாம்பாரை ஒரு கரண்டி எடுத்து இலையில் ஊற்றுகிறார். சாம்பாரை ஊற்றியதும், சாமியாரும் சாப்பிட ஆரம்பிக்கிறார்.


விழித்த சாமியார்  

ஆனால் திடீரென அந்த இளைஞர், "கனவிதுதான், நினைவிதுதான்" என்ற பழங்கால பாடலின் ரீ-மிக்ஸ் பாடலுக்கு டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறார். சாம்பாரையும் ஊற்றிவிட்டு தனக்கு முன்னால் நின்று கொண்டு டான்ஸ் ஆடுவதை பார்த்ததும், சாமியார் விழிக்கிறார். சுற்றுமுற்றும் பார்க்கிறார், எதுவுமே புரியாமல், பயந்தபடியே சாப்பிடுவதை விட்டு எழுந்து விடுகிறார்.


சாப்பிடலாமா? வேண்டாமா?  

இளைஞர் டான்ஸ் ஆடி முடிக்கும்வரை, என்ன ஆச்சு, ஏன் இப்படி குத்தாட்டம் போடறார்? சாப்பிடுவதா, வேண்டாமா, அப்படியே ஓடுவதா? என குழம்பியபடியே நிற்கிறார். இந்த வீடியோவை நிறைய பேர் ஷேர் செய்து வருகிறார்கள்.

திடீர் திருப்பம்.. திருவாரூரில் திமுக சார்பில் உதயநிதி போட்டியா? ரசிகர்கள் விருப்பமனு தாக்கல்!

திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

தற்போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூரில் போட்டியிட திமுக சார்பாக நிறைய பேர் விருப்ப மனுக்கள் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.


மனு தாக்கல்  

கடந்த திங்கள் கிழமையில் இருந்து விருப்ப மனு தாக்கலை திமுக பெற்று வருகிறது. இந்த மனுக்கள் மீது இந்த ஆலோசனை நடத்தப்படும். அதன்பின் நாளை நேர்முக தேர்வு நடத்தப்படும். நாளையே வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும்.


காலையில் தாக்கல் 

இன்று காலையிலேயே இதற்காக சிலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 20க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பாக 40 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அவர் பெயரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர்.


உதயநிதி  

இந்த நிலையில் திடீர் திருப்பமாக திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் சிலர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர். இவரது விருப்ப மனுவும் பரிசீலனையில் உள்ளது.


புகைப்படம்

இந்த விருப்ப மனு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் 1977ல் இருந்து திமுகவில் இருப்பதாகவும், களப்பணிகள் செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்யாணம்ங்கறது ஒரு ஜெயில் தான்.. அதுக்காக இப்டியா பப்ளிக்கா இன்விடேஷன் அடிக்கிறது?

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வித்தியாசமாக அச்சடித்துள்ள திருமணப் பத்திரிக்கை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சமீபகாலமாக திருமண அழைப்பிதழ்களை விதவிதமாக அச்சடிப்பது பிரபலமாகி வருகிறது. மஞ்சள், ரோஸ் என கலர் கலராக அச்சடித்த காலம் போய், தற்போது மணமக்கள் தங்கள் துறை சார்ந்ததாக வித்தியாசமாக திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து அசத்தி வருகின்றனர்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அந்தவகையில் கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் விஷ்ணு மணி என்பவர் நீதிமன்ற சம்மன் மாடலில் திருமண அழைப்பிதழை அச்சடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இதில் என்ன பரபரப்பு என்கிறீர்களா, இந்த அழைப்பிதழை மெயிலில் பார்த்த பலர், தங்களுக்கு ஏன் திடீரென நீதிமன்ற சம்மன் வந்துள்ளது என அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அதனை படித்துப் பார்த்த பிறகுதான் அது சம்மன் அல்ல, திருமண அழைப்பிதழ் எனத் தெரிய வந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். மாப்பிள்ளை விஷ்ணு மணி மட்டுமல்ல, மணமகள் அருந்ததியும் வழக்கறிஞர் தான். இவர்களது திருமணம் கோட்டயத்தில் இம்மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நீதிமன்ற சம்மன் நோட்டீஸ் வடிவிலான அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருத்தர், ரெண்டு பேர் இல்லை.. 5 மனைவியர் இருக்க.. 6-வது பெண்ணுடன் எஸ் ஆன முருகன்!

ஒருத்தர், ரெண்டு பேர் இல்லை.. முருகனுக்கு 5 பொண்டாட்டிகள் இருந்தும் இன்னொரு பெண்ணுடன் எஸ்கேப் ஆகி உள்ளார்!! 

திண்டுக்கல் அருகே தென்னம்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர்தான் முருகன். மளிகைகடை ஒன்றினை நடத்தி வருகிறார். இவருக்கும் கள்ளிமந்தயம் பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண் பழக்கமானார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

நாளைடவில் ஒருத்தரையொருர் விரும்ப ஆரம்பித்து, தீவிர லவ்வாக அது மாறியது. ஆனால் ராதாவை கல்யாணம் செய்ய முருகன் வீட்டில் சம்மதிக்கவில்லை. இருந்தாலும், முருகன் வீட்டை எதிர்த்து கல்யாணமும் செய்து கொண்டு, ஒரு மளிகை கடை மூலம் குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்தார்.


மீண்டும் கர்ப்பம்

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளதுடன் திரும்பவும் ராதா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். வீட்டை எதிர்த்து முருகன் கல்யாணம் செய்தாலும், எப்பவுமே ராதாவுடன் தகராறு செய்தே வந்தார். ஒருத்தருக்கொருத்தர் சின்ன விஷயத்திலும் உடன்படுவதில்லை. இதில், முருகனுக்கு கடன் பிரச்சனையும் சேர்ந்து கொண்டது.


அலைந்து திரிந்தார் 

அதனால் சம்பவத்தன்று ராதாவிடம் சண்டை போட்ட முருகன், கடன் நிறைய உள்ளதால் எங்காவது போய் பணம் புரட்டி கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு போனார். ஆனால் அப்போதிருந்தே முருகன் எஸ்கேப். எங்கே போனார் என்றே தெரியாததால், ராதா பயந்து எல்லா இடங்களிலும் தேடினார். கையில் குழந்தை, நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், முருகன் சென்று வரும் இடங்களில் எல்லாம் அலைந்து திரிந்தார்.


இன்னொரு பெண்

அப்போதுதான், முருகன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரிக்கும்போது முருகன் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. அதுவும் 5 பெண்களை இதற்கு முன்பு கல்யாணம் செய்திருக்கிறார். இப்போது இன்னொரு பெண்ணுடன் லவ் ஆகி, அந்த பெண்ணையும் இழுத்து கொண்டு எங்கோ போய்விட்டார் என்ற தகவலை கேட்டதும் ராதா நிலைகுலைந்து போனார்.


மளிகை கடை அபகரிப்பு  

அதனால் முருகனின் அம்மா வீட்டில் நியாயம் கேட்க செல்லலாம் என்றால், முருகன் நடத்தி வந்த கடையையும், வீட்டையையும் அவர்களே பிடுங்கி கொண்டுள்ளார்கள். ராதாவை ஏற்கனவே அவர்களுக்கு பிடிக்காது என்பதால் இப்போது வீட்டில் சேர்க்க மறுக்கிறார்கள்.


கோயில் மண்டபம் 

இதனால், கட்டிய கணவனும் ஓடிப்போய், கையில் குழந்தை, வயிற்றில் குழந்தையுடன் வீடு வாசல் எதுவும் இல்லாமல் ஒரு கோயில், குளம், மண்டபம் என தங்கி வருகிறார் ராதா. கடைசியில் வேறு வழி இல்லாமல், வடமதுரை போலீசில் இது சம்பந்தமாக ஒரு புகாரையும் அளித்திருக்கிறார்.

புது வீட்டுக்கு மாறியும் விடாத காதல்.. பழைய வீட்டில் காதலனுடன் மனைவி உறவு.. வெட்டிக் கொன்ற கணவர்

புத்தாண்டு தினத்தை கள்ளக்காதலனுடன் கொண்டாடியதால் மனைவியை அடித்து கொன்றதாக கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

கோவில்பட்டி நடராஜபுரம் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (28). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி விமலா (20). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

விமலாவுக்கும் அதே பகுதியைச் சேர்நத வெல்டிங் பட்டறை தொழிலாளி குமாருக்கும் (20) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இது மாரிமுத்துவின் காதுகளை எட்டியது. இதையடுத்து விமலாவிடம் நல்லவிதமாக மாரிமுத்து புரிய வைத்து புத்தாண்டு முதல் அனைத்தையும் மறந்து நாம் புது வாழ்க்கை வாழ்வோம் என கூறியுள்ளார். இதற்கு விமலாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.


உல்லாசம்

இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு அதே பகுதியில் வேறொரு வீட்டுக்கு மாரிமுத்து- விமலா தம்பதி குடித்தனம் வந்துள்ளனர். ஆனால் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு விமலா, குமாருடன் பழைய வீட்டுக்கு சென்று அங்கு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்த கணவர் மாரிமுத்து விமலாவை அடித்து கொன்றுவிட்டார்.


பரபரப்பு 

இதையடுத்து அவரை கோவில்பட்டி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், குமாருடன் விமலா பல முறை உறவு கொண்டுள்ளார். இதெல்லாம் மறந்துவிட்டு குழந்தைகளின் நலனுக்காக பொறுத்துக் கொண்டு அவருக்கு புத்திமதி சொன்னேன்.


உல்லாசம்  

ஆனால் அவர் கேட்கவில்லை. புதிய வீட்டுக்கு வந்த பிறகு புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் விமலாவை காணாது அதிர்ச்சி அடைந்தேன். அப்போது தேடி பார்த்தபோது விமலா பழைய வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. நேராக அங்கு போனேன். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர்.


தலைமறைவு  

இதனால் ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால் இருவரையும் ஓங்கி அடித்தேன். இதில் விமலா உயிரிழந்துவிட்டார். குமார் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நான் போலீஸில் சரணடைந்துவிட்டேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மாரிமுத்துவை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு கோவில்பட்டி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்