For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
துபாயில் உள்ள புர்ஜ் கோபுர கட்டிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தி புகைப்படம் இடம்பெற்றுள்ளது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலுள்ள மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா.
163 மாடிகளை கொண்ட இந்த உயரமான கோபுரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தியின் புகைப்படம் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில்
பதிவிடப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
வரும் 11ம் தேதி துபாய்க்கு 2 நாட்கள் பயணமாக செல்லவிருக்கிறார். அதனை
முன்னிட்டு சமூக வலைதள பக்கத்தில் இந்தியில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில்,
துபாய் பயணத்திற்கு முன்பாக மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் ராகுல்
காந்தியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பலரும் இதே பதிவுடன் கூடிய வீடியோவை ஷேர் செய்துள்ளனர். இந்த
வீடியோ கிட்டத்தட்ட 3,500 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. மேலும் 52,000 முறை
பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லடம் அருகே திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர்
சிவசாமி (வயது 57). இவருடைய மனைவி கமலம் (50). இவர்களுடைய மகன்
முத்துக்கிருஷ்ணன் (32). பேஷன் டெக்னாலஜி படித்துள்ள இவர் பல்லடத்தில்
உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இவருக்கும் திருப்பூர் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி–
ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் என்ஜினீயரிங் பட்டதாரியான தங்கமணிக்கும் (23)
கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர்
முத்துக்கிருஷ்ணனும், அவருடைய மனைவி தங்கமணியும் பல்லடம் மகாலட்சுமி நகர்
10–வது தெரு, தெற்கு வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள்
இல்லை.
இந்த நிலையில் சமீபகாலமாக முத்துக்கிருஷ்ணனுக்கு
மதுகுடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை முடிந்து தினமும்
வீட்டிற்கு வரும் முத்துக்கிருஷ்ணன் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம்
தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தங்கமணிக்கு இரண்டு
முறை கர்ப்பமாகி கரு கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இருவரும்
சில நாட்களாக பேசாமல் இருந்துள்ளனர்.
மேலும் உடல் நலம் குறித்து, தினமும்
காலையிலும், மாலையிலும் வெள்ளியங்கிரி, தனது மகள் தங்கமணியிடம் பேசுவதை
வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்கிரி,
தனது மகளிடம் பேசி உள்ளார். அப்போது தங்கமணி ‘‘ தனது கணவர், ஆஸ்பத்திரிக்கு
அழைத்து செல்வதாக கூறியதாவும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும்’’
தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வெள்ளியங்கிரி தனது
மகளின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள பல முறை முயன்றும், செல்போன் ஒலித்ததே
தவிர, அவர் அதை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வெள்ளியங்கிரி,
தனது உறவினர்களுடன் மகளின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது வீட்டின்
கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை நீண்டநேரமாக
தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டின் ஜன்னலை உடைத்து
பார்த்தபோது வீட்டினுள், முத்துக்கிருஷ்ணனும், தங்கமணியும் தூக்கில்
தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் துணை
போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற
வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அங்குள்ள அறையில் கணவனும்–மனைவியும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு
தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் தற்கொலை
செய்யும் முன்பு கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளனரா? என்றுஅந்த அறையில்
போலீசார் தேடினார்கள். ஆனால் எந்த கடிதமும் கிடைக்கவில்லை. இதையடுத்து
அவர்கள் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசில்
வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தங்கமணிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே
ஆவதால், சப்–கலெக்டர் ஷ்ரவன் குமார் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான
1½ ஆண்டில் தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில்
சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னிமலை அருகே செல்போனில் பேசிக்கொண்டு இருந்த ஒரு பெண் தவறி
கிணற்றுக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்தவர்களும்
தண்ணீரில் தத்தளித்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சின்ன பிடாரியூரை சேர்ந்தவர்
சங்கீதா (வயது 28).
(தொடர்ச்சி கீழே...)
ஈரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் சங்கீதா
வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இவருடைய கணவர் நவீன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக நவீனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சங்கீதா தன்னுடைய 10 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில்
நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் தன்னுடைய வீட்டை ஒட்டியுள்ள கிணறு அருகே
நின்றுகொண்டு சங்கீதா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென
நிலை தடுமாறிய அவர் செல்போனோடு கிணற்றில் விழுந்து விட்டார்.
இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (60), கதிரேசன் (வயது 25) ஆகியோர் சங்கீதாவை காப்பாற்ற கிணற்றில் குதித்தனர்.
கிணற்றில்
படிகள் ஏதும் இல்லாததால் 3 பேரும் மேலே வர முடியாமல் தண்ணீரில்
தத்தளித்தனர். அனைவருக்குமே லேசான காயமும் ஏற்பட்டு இருந்தது.
கிணற்றில் 3 பேர் தத்தளிப்பதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுபற்றி
சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய
அதிகாரி நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு
விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் தவித்த 3 பேரையும் கயிறுகட்டி பத்திரமாக
மீட்டு மேலே கொண்டுவந்தார்கள். அதன்பிறகு 3 பேரும் சென்னிமலை அரசு
ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது குறித்து
சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
‘‘திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள்’’ என வாலிபர் போலீசில் புகார் அளிக்க வந்த ருசிகர சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இளைஞர் ஒருவர் தனது இதயத்தை பெண் ஒருவர்
திருடிவிட்டார் எனக்கூறி, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த விவகாரம்
போலீசாரை செய்வதறியாது திணற வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொள்ளையர்களிடம்
இருந்து கைப்பற்றப்பட்ட 82 லட்சம் மதிப்புள்ள பொருட்களை உரிமையாளர்களிடம்
ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்த நாக்பூர் காவல் ஆணையர் பூஷன் குமார் உபத்யாய், இந்த விசித்தர
சம்பவம் பற்றி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
திருடப்பட்ட
பொருட்களை நாங்கள் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைத்து
விடுகிறோம். ஆனால், எங்களால் தீர்வே காண முடியாத சில புகார்களையும் நாங்கள்
பெற வேண்டியுள்ளது. அண்மையில், நாக்பூரைச்சேர்ந்த ஒரு இளைஞர் தனது இதயத்தை
பெண் ஒருவர் திருடிவிட்டதாக கூறி உள்ளூர் காவல் நிலையம் ஒன்றில் புகார்
கொடுக்க வந்துள்ளார்.
அவரது புகாரைக்கேட்டு
அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்த போலீசார், உயர் அதிகாரிகளை தொடர்பு
கொண்டு கேட்டுள்ளனர். இதையடுத்து, புகார் அளிக்க வந்த இளைஞரிடம் இந்த
புகாரை பதிவு செய்வதற்கு இந்திய சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை
எனக்கூறிவிட்டு, இந்த பிரச்சினைக்கு எங்களிடம் தீர்வு இல்லை.
திரும்பிச்செல்லுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்” என்றார்.
ஹரிணி பாப்பாவை பார்க்க லதா ரஜினிகாந்த் ஆவலாக இருக்கிறாராம்...
இதற்கான சந்திப்பு இன்று நடக்கும் என்றுகூட தெரிகிறது.
நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகள் ஹரிணி 3
மாதத்துக்கு முன்பு காணாமல் போய்விட்டாள். இதனால் போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரித்து வந்தனர்.
ஹரிணியின் மழலை முகத்தில் தங்களை மறந்த தமிழக மக்களும் அவளை தேடும்
முயற்சியில் ஆர்வமாக இறங்கினார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
போஸ்டர் அடித்தார்கள்
இதற்காக சொந்தமாகவே செலவு செய்து ஹரிணி போட்டோவை போஸ்டர் அடித்து ஒட்டி,
கண்டுபிடித்து தந்தால் சன்மானம் என்றுகூட விளம்பரம் செய்தார்கள்.
இணையதளத்திலும் ஏராளமான தன்னார்வ அமைப்புகள், சமூக நிறுவனங்கள் தானாக
முன்வந்து ஹரிணியை கண்டுபிடிக்க உதவி செய்தன.
ரஜினி காட்டம்
இதேபோலதான் லதா ரஜினிகாந்தும் உதவி செய்ய முன்வந்தார். இவர் குழந்தைகள்
நலனுக்கான ‘தயா பவுண்டேசன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சமீபத்தில்கூட
இது சம்பந்தமான விழா திருவான்மியூரில் நடைபெற்றபோது, ரஜினிகாந்த் இதில்
கலந்து கொண்டு பேசினார்.
ஆதங்கம்
அப்போது, "நிறைய குழந்தைகள் காணாமல் போகின்றன, அவர்களை கடத்தி கொண்டு போய்
பிச்சை எடுக்க வைத்துவிடுகிறார்கள், குழந்தை கடத்தல் தொடர்பாக மத்திய -
மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை" என்று தன் ஆதங்கத்தை கொட்டி
தீர்த்தார்.
தைரியமா இருங்க
இந்த நிலையில்தான், சில தினங்களுக்கு முன்பு, லதா ரஜினிகாந்த், ஹரிணியின்
அம்மா காளியம்மாளை போனில் கூப்பிட்டு பேசினார். தான் நடத்தி வரும்
குழந்தைகள் அமைப்பு மூலம் ஹரிணியை தேடி வருகிறோம் என்றும், மும்பையில்
ஹரிணி போலவே ஒரு குழந்தை இருப்பதாக தகவல் வந்திருக்கிறது, அதனால்
கவலைப்படாமல் இருங்கள், விரைவில் குழந்தையை மீட்கலாம் என்று தைரியம்
சொன்னார்.
ஹரிணி மீட்பு
ஆனால் மும்பையில் ஹரிணி கிடைக்கவில்லை, மாறாக திருப்போரூரிலேயே தகவல்
வந்ததால், அங்கு சென்று சிறுமியை நேற்று போலீசார் மீட்டனர். இப்போது, ஹரிணி
பாப்பாவை நேரில் சந்திக்க லதா விருப்பம் தெரிவித்துள்ளார்.
சந்திக்க விருப்பம்
இதற்காக ஹரிணி மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியரை
லதா ரஜினிகாந்த நேரில் அழைத்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள
ரஜினியின் இல்லத்தில்தான் இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது.
Featured Post
பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...