Run World Media: 01/10/19

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 10, 2019

5வது குழந்தை பெற்றுக் கொண்டால் மாதம் ரூ. 2 லட்சம் நிதியுதவி.. மக்கள்தொகையைப் பெருக்க ஜப்பான் அதிரடி!

மக்கள்தொகையைப் பெருக்கும் முயற்சியாக, 5வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்யப்படும் என ஜப்பான் நகரம் ஒன்றில் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு பெரும் பூதாகரமாக உள்ள பிரச்சினைகளில் ஒன்று மக்கள்தொகைப் பெருக்கம். ஆனால் இதற்கு நேர்எதிராக மக்கள்தொகை குறைந்து வருவதால் பெரும் கவலையில் இருக்கிறது ஜப்பான். 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

உலகில் உள்ள நாடுகளில் கடந்த 1970களில் இருந்த மக்கள் தொகையைவிட அதிகம் குறைந்து வருகிறது ஜப்பானில். கடந்த 2017ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சம் தான். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டுகிறது. ஜப்பான் நாட்டின் சுகாதரம் மற்றும் தொழிலாளர் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது.


குழந்தைகள் சதவீதம்:  

ஜப்பான் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், குழந்தைகளின் சதவீதம் என்பது 12.3 மட்டும் தான். ஆனால் அதுவே இந்தியாவில் 31 சதவீதமும், அமெரிக்காவில் 19 சதவீதமும், சீனாவில் 17 சதவீதமும் ஆகும். தற்போது ஜப்பானின் மக்கள் தொகை 12.7 கோடியாகும். இது வரும் 2065ம் ஆண்டில் சுமார் 9 கோடியாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.


ஜப்பான் கவலை:  

இதனால் அந்நாட்டு அரசு பெரும் கவலையில் உள்ளது. எனவே, ஜப்பானின் மக்கள் தொகையை பெருக்க அந்நாட்டு அரசு மேலும் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறுது. அதாவது, மானியத்துடன் வீடு, இலவச தடுப்பூசிகள், பள்ளி கட்டணம், மற்றும் மானியத் தொகை என அள்ளிக்கொடுக்கிறது ஜப்பான் அரசு.


பணப்பரிசு தருகிறது:  

அவற்றில் ஒன்றாக ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள நாகி எனும் ஊரில் குழந்தை பெற்றுக் கொண்டால் பணப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு மட்டும் மற்ற நகரங்களைவிட பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஊரின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை வெறும் 6 ஆயிரம் தான். ஆனால் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், இந்த விவசாய பகுதிக்கு தங்கள் குழந்தைகளும் குடிபெயர பலரும் விரும்புகின்றனர்.


மாதாமாதம் பணம்: 

இந்த ஊரின் தனிச்சிறப்பே, குழந்தைகளுக்கு அந்த ஊரின் நிர்வாக அமைப்பு மாதாமாதம் பணம் கொடுப்பது தான். முதல் குழந்தைக்கு சுமார் 61 ஆயிரம் ரூபாய், இரண்டாவது குழந்தைக்கு ரூ.92000, 5வது குழந்தைக்கு ரூ.2.43 லட்சம் என ஒரு குடும்பத்துக்கு நிதியுதவி செய்கிறது ஜப்பான் அரசு.


கருத்தரிப்பு அதிகரிப்பு: 

இந்த நடவடிக்கைகளின் மூலம் நாகி நகரில் கருத்தரிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இருந்ததைவிட, கருத்தரிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் ஒப்பிட்டு பார்க்கும் போது நாகி நகரில் மட்டும் தான் கருத்தரிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரட்டி விரட்டி லஞ்சம்.. ஸ்கெட்ச் போட்ட போலீஸார்.. சிக்கியும் எஸ் ஆன இன்ஸ்பெக்டர்

பக்காவா போலீஸார் ஸ்கெட்ச் போட்டும் "எஸ்" ஆன ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்த செய்திதான் இது!! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டிராபிக் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பதி. 


வயது 47 ஆகிறது. ஆனால் செக்போஸ்ட்டில் ஒரு லாரியை விடுவது கிடையாது. விரட்டி விரட்டி லஞ்சம் வாங்குவதுதான் இவரது டியூட்டியே. ஒருநாளைக்கு குறைந்தது 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கறந்து விடுவாராம். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

குறிப்பாக, சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை செக்கிங் செய்வதுபோல, வண்டிகளை தடுத்து நிறுத்தி, அந்த டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு வந்திருக்கிறார். இது சம்பந்தமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வர ஆரம்பித்தது.


மாறுவேடம்  

அதனால் இன்ஸ்பெக்டர் பதியை பிடிக்க முடிவு செய்து, அதற்கான பிளானையும் போட்டார்கள். அதன்படி, நேற்றுமுன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேர் டிரைவர், கிளினீர் போல கெட்-அப்புக்கு மாறினார்கள். ஒரு லாரியை எடுத்து கொண்டு, பதி டியூட்டி பார்க்கும் ரூட்டில் அதாவது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி மாறுவேஷத்தில் வந்தனர்.


மாமூலை எடு 

அப்போது பதி, தனக்கு சொந்தமான 'ஹூண்டாய் இயான்' காரில் சென்று வாகன சோதனையில் தனி ஒருவராக ஈடுபட்டு கொண்டிருந்தார். வழக்கம்போல் லாரியை தடுத்து ஓரங்கட்ட சொன்னார். லாரி டிரைவராக இருந்த போலீஸ்காரரிடம் மாமூலை எடு என்றார்.


விசாரிக்கணும்  

பதி மாமூல் கேட்டதும், கிளீனர், டிரைவர் இருவருமே கீழே இறங்கி வந்தார்கள். பிறகு பாக்கெட்டில் ஏற்கனவே ரசாயனம் தடவி வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை பதியிடம் தரவும், அவரும் அதை வாங்கி கொண்டார். உடனே இருவரும், "நாங்க 2 பேரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். போலீஸ் ஸ்டேஷன்வரை வாங்க, உங்களை விசாரிக்கணும்" என்றனர்.


காரில் வந்த பதி  

இதை கொஞ்சமும் பதி எதிர்பார்க்காத பதி, உடனே வாங்கிய பணத்தை கீழே போட்டுவிட்டார். பிறகு சுதாரித்து கொண்டு, "சரி, நான் என் காரிலேயே ஸ்டேஷன் வருகிறேன்" என்று சொல்லி காரில் ஏறி கொண்டார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரும் லாரியில் ஏறிக் கொண்டனர். லாரிக்கு பின்னால் பதி காரை ஓட்டிவருவதை திரும்பி திரும்பி பார்த்துகொண்டே வந்தார்கள். ஆனால் கெஞ்சனூர் செல்லும் சாலை வந்தபோது, பின்னாடியே வந்துகொண்டிருந்த பதி எஸ்கேப்!


மின்னல் வேகம்  

மின்னல் வேகத்தில் லாரியை கார் கடந்து கெஞ்சனூர் நோக்கி சென்றது. இதை எதிர்பார்க்காத போலீசார் பதியை விரட்டி சென்றார்கள். காரின் வேகத்துக்கு லாரியும் இருட்டு வேளையில் நடுரோட்டில் பறந்தது. ஆனாலும் காரை அவர்களால் பின்தொடரவே முடியவில்லை. இதனிடையே எதிரே பைக்கில் வந்த ஒருவரை பதியின் கார் இடித்துவிட, அவர் படுகாயம் அடைந்து விழுந்தார். பொதுமக்கள் விரைந்து வந்து அந்நபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


திணறும் போலீஸ்

இப்போது பதி எங்கிருக்கிறார் என்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காகவும், விபத்தை ஏற்படுத்தி நபர் ஒருவரை படுகாயம் அடைய செய்ததற்காகவும் பதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எப்படி எப்படியோ ஸ்கெட்ச் போட்டு பிடித்தும் இன்ஸ்பெக்டர் பதியை பிடிக்க முடியவில்லையே என போலீசார் திணறி வருகிறார்கள்.

அட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்

நடிகர் அஜீத்தின் 60 அடி உயர கட் அவுட்டின் மேல் உட்கார்ந்து பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்த ரசிகர்கள், திடீரென கட் அவுட் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளனர். 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் அஜீத்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


மாலைகள்  

இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். எப்போதுமே அஜீத் படம் வெளியானால் அவரது ரசிகர்கள் கட்அவுட்டுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்து, சூடம் காட்டுவார்கள்.


60 அடி உயரம் 

அப்படித்தான் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா திரையரங்கில் விஸ்வாசம் படத்தை வரவேற்கும் விதமாக 60 அடி உயரத்துக்கு அஜீத்தின் உருவ கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.


பாலாபிஷேகம்  

இதற்கு பாலாபிஷேகம் செய்ய ரசிகர்கள் பலர் கூடினர். அதில் ஒருசிலர் கட் அவுட் மீது ஏறி மாலை அணிவித்தனர். பிறகு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தபோது, மேலும் சில ரசிகர்களும் அதே கட் அவுட்டில் ஏற ஆரம்பித்தார்கள். அப்போது இதனால் பாரம் தாங்காமல் அஜீத் கட் அவுட் அப்படியே சரிந்து விழுந்தது.


6 பேர் படுகாயம் 

அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கட் அவுட் சரிய சரிய ஒவ்வொருவராக கீழே குதிக்க ஆரம்பித்தார்கள். இதனால் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நானும் அனிஷாவும் காதலிக்கிறோம், விரைவில் திருமணம் - விஷால் அறிவிப்பு

அயோக்யா படத்தில் பிசியாக இருக்கும் விஷால், ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட நடிகர் விஷால் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் மனுதாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடிகர் விஷால் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். திருமணம் பற்றி கேட்ட போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும்தான் திருமணம் செய்வேன் என்றும், நடிகையை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்வேன் என்றும் பலவாறு கூறிவந்தார்.

தற்போது முதல் முறையாக அவரே தனது திருமண தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். மணமகள் பெயர் அனிஷா ரெட்டி. ஆந்திரா - தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தைச் சேர்ந்தவர். தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார்.

திருமணம் பற்றி ‘அயோக்யா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஷாலிடம் கேட்டபோது கூறியதாவது:-

எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு. நாளை (வெள்ளிக்கிழமை) தான் எனது பெற்றோரும் அனிஷா பெற்றோரும் சந்தித்து பேசுகிறார்கள். இதில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி முடிவு செய்யப்படும்.
இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். திருமண தேதியை இந்தவார இறுதியில் அறிவிப்போம். அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இது தெரிந்துவிட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும்.

விஸ்வாசம் பார்க்க பணம் தராத அப்பா.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்..

விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இதனால் நடிகர் அஜித்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர்.


முதல் நாள் இந்நிலையில் வேலூர் மாவட்ட கட்டப்பாடி அருகே கிழஞ்சூரில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க பாண்டியன் என்பவரின் மகன் ஆசைப்பட்டிருக்கிறார். இவர் தீவிர அஜித்குமார் ரசிகர். இவரது பெயரே அஜித்குமார்தான். முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் பல ரசிகர்களில் இவரும் ஒருவர்.


பெட்ரோல் ஊற்றினார்  

அதனால் விஸ்வாசம் படம் பார்க்க தன் அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற அஜித்குமார், தூங்கிக்கொண்டு இருந்த தந்தை மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டார்.


தீவிர சிகிச்சை  

உடம்பெங்கும் தீ பற்றி எரிய பாண்டியன் அலறி துடித்துள்ளார். பிறகு சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் தீக்காயங்களுடன் பாண்டியனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.


காட்பாடியில் ஷாக் 

இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பார்க்க பணம் தராத அப்பாவை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்!

8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் அந்த பரபரப்பான செய்தி வெளியானது. 

மத்திய அரசு நாடு முழுக்க இந்தியை கட்டாய பாடமாக அறிவிக்க போவதாக செய்திகள் வெளியானது. 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


இந்தி ஆய்வு 

இந்தியை கட்டாயம் ஆக்குவதற்காக மத்திய குழு புதிய பரிந்துரையை செய்துள்ளதாகவும், அடுத்த நாடளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும், மத்திய அரசு இதற்கான செயல்திட்டங்களை வகுத்து வருவதாகவும் தகவல்கள் வந்தது.


பெரிய பரபரப்பு  

இந்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் இந்தி திணிப்பு செய்யப்படுகிறதா என்று அதிர்வை ஏற்படுத்தியது. இந்த முறை தமிழகம் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல்கள் எழ தொடங்கியது.


மறுப்பு தெரிவித்தார் 

இந்த நிலையில் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளது. பட திட்டத்தில் இந்தியை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சி செய்யவில்லை என்று இந்த செய்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


என்ன சொல்கிறார்  

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் தனது டிவிட்டில் ''8ம் வகுப்பு வரை எந்த மொழிப்பாடமும் கட்டாயம் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள், தகவல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தவறானது'' என்று கூறியுள்ளார்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்