Run World Media: 01/20/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 20, 2019

உழுதமங்கலம் கிராமத்தில் இரவு பாடசாலை & நூலகம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு மக்கள் கட்சி..


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள உழுதமங்கலம் கிராமத்தில் இரவு பாடசாலை & நூலகம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு மக்கள் கட்சி..


இன்று (18.01.2019) கிராம மக்களின் ஒப்புதலுடனும்  பங்கேற்புடன் அடிகள் நாட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது பெரும் மகிழ்ச்சி.


நிகழ்வில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் இளையராஜா சே.
செ. பிரகாஷ் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அண்ணன் ஜெகநாதன் கிராம பெண்கள், இளைஞர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.


எங்களின் இந்த பயணம் பல்வேறு கிராமங்களை நோக்கி தொடர்ந்து முன்னேறும்.

நன்றி
சு.க.சுஜி
தமிழ்நாடு மக்கள் கட்சி

தொடர்புக்கு
9944339756


காரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.! ஹேக்கர் ஹண்ட் ஆன்.!டெஸ்லா கார் நிறுவனம் உலக ஹேக்கர்களுக்கு புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி டெஸ்லா காரின் மென்பொருளை ஹேக் செய்தால் 1.10 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படுமென்று அறிவித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பின்படி சுமார் ரூ. 7 கோடி பரிசு வழங்கப்படுமென்று டெஸ்லா நிறுவனம் உறுதியளித்துள்ளது. அத்துடன் டெஸ்லா காரின் மென்பொருளை ஆராய்ந்து, அதில் உள்ள பக்-கை கண்டுபிடிக்கும் முதல் ஹேக்கர் பொறியாளருக்கு புத்தம் புதிய டெஸ்லா கார் பரிசாக வழங்கப்படுமென்றும் டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எலெக்ட்ரிக் கார் 
அதிநவீன எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 2003 ஆம் ஆண்டு, இந்த எலக்ட்ரிக் கார் நிறுவனம் துவக்கப்பட்டது. எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சாரத்தினால் இயங்கும் மின்சார கார்களை டெஸ்லா நிறுவனம் வடிவமைத்து விற்பனை செய்துவருகிறது.


ரூ.7 கோடி பரிசு 
தற்போது டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாடல் 3 ஆம் காரின் பாதுகாப்பு மென்பொருளை ஹேக் செய்பவருக்கு ரூ.7 கோடி பரிசும் மற்றும் மென்பொருளில் உள்ள முதல் பக் கண்டுபிடிக்கும் மென்பொருள் பொறியாளருக்கு டெஸ்லா காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது என டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Pwn2Own ஹேக்கிங் 
போட்டி Pwn2Own என்ற கம்ப்யூட்டர் ஹேக்கிங் நிகழ்ச்சி கான்செக் மேற்கு பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்த ஹேக்கிங் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு மென்பொருள் மற்றும் மொபைல் போன்களில் உள்ள பிழைகளை கண்டறிய வாய்ப்பு தரப்படும். தவறுகளைச் சரியாக சுட்டிக்காட்டும் வெற்றியாளருக்கு பணம் மற்றும் பொருளாக பரிசுகள் வாங்கப்பட்டுவருகிறது.
டெஸ்லா கார் 3 
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு டெஸ்லா நிறுவனம் Pwn2Own கம்ப்யூட்டர் ஹேக்கிங் போட்டியாளர்களுடன் இணைத்து, தனது காரில் உள்ள மென்பொருள் பிழை மற்றும் அதில் உள்ள பக்-களை சுட்டிக்காட்டும் வெற்றியாளருக்கு 7 கோடி பரிசு தொகை மற்றும் டெஸ்லா காரின் 3 ஆம் மாடலை பரிசாக வழங்கவுள்ளது. இச்செய்தி பல ஹேக்கர்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது. 


[வேலை வாய்ப்பு] - ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - கடைசி தேதி : 11.02.2019தமிழக அரசிற்கு உட்பட்டு கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) 
மேலாண்மை : தமிழக அரசு 
மொத்த காலிப் பணியிடம் : 01 
பணி : தொழில் நுட்பவியலாளர் 
கல்வித் தகுதி : 10-வகுப்பு தேர்ச்சி 
முன் அனுபவம் : தேவை இல்லை 
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்


விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629003. 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு முறை : கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrkanapp110119.pdf அல்லது http://aavinmilk.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்

டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களை குறித்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பகீர் தகவலை வாக்குமூலமாக வெளியிட்டார். டப்ஸ்மாஷ் என்ற ஆப் ஒன்று பிரபலம் ஆனது. அதில் வரும் சினிமா பாடல்களுக்கும், வசனங்களுக்கும் அனைத்து தரப்பினரும் வாயசைத்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தனர். 
எனினும் இவை சம்பந்தப்பட்டவரின் செல்போனில் மட்டுமே இருக்கும். அவராக பார்த்து யாருக்காவது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்வார்டு செய்தால் உண்டு. ஆனால் தற்போது அறிமுகமாகியுள்ள டிக் டாக் செயலியில் உலகம் முழுக்க பார்க்கும் படி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஆபாச ஆடை 
இதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் என மிகவும் ஆபாசமாக ஆடை அணிந்து கொண்டு செக்ஸியாக நடனம் ஆடுகின்றனர். இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் இதை அனைவரும் பார்க்கின்றனர்.
பரபரப்பு தகவல் 
இது போன்ற பெண்களை குறி வைத்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் ஐடி நிறுவன ஊழியர்களை குறிவைத்தும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மசாஜ் சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த புரோக்கர் பூங்கா வெங்கடேசன் (43).

குண்டர் சட்டம்
இவர் மீது சென்னை முழுவதும் 60க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலம் தப்ப முயன்ற பூங்கா வெங்கடேசனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டிக் டாக் செயலி 
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் பாலியல் தொழிலை விரிவுப்படுத்த நவீன முறையை பயன்படுத்தலாம் என நினைத்த போதுதான் டிக் டாக் செயலி நினைவுக்கு வந்தது. இதில் பல பெண்கள் வீடியோக்களை வெளியிடுகின்றனர்.


சாட்டிங் 
அவர்களுள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரைகுறை ஆடைகளோடு ஆபாசமாக நடனமாடி பெண்கள் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். இவர்களுள் யாருக்கு அதிக லைக்ஸ் கிடைக்கிறது என்பதை வைத்து அவர்களிடம் சாட்டிங்கில் நட்பாக பேசுவோம்.


தொழில் நடத்த 
பின்னர் அவர்களிடம் நைஸாக பேசி பாலியல் தொழிலுக்குள் கொண்டு வருவோம். அதோடு இந்த வீடியோக்களுக்கு மயங்கி ஆபாசமாக கமெண்ட் போடும் ஆண்களையும் விடாமல் சாட் செய்து அவர்களை அந்த பெண்களுடன் உறவு கொள்ள வைப்போம். இப்படித்தான் பாலியல் தொழிலை நடத்தி வந்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.

சென்னை - தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக 8 வழிச்சாலை - மத்திய அரசு முடிவு

  • மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இருந்து இந்த திட்டத்திற்காக முன்வைத்துள்ள விரிவான திட்ட அறிக்கை நகல் தந்தி டி.விக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.


  • அதில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 13,200 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சென்னையிலிருந்து விழுப்புரம் வரை 10 வழி சாலை திட்டமாகவும், விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழி சாலை திட்டமாகவும், தஞ்சாவூர், திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை ஆறு வழி சாலை திட்டமாகவும் இதை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

  • இதன் மூலம் சென்னை-தூத்துக்குடி இடையிலான பயண தூரம் 100 கிலோமீட்டர் வரை குறையும் என கூறப்படுகிறது.
  • தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், புதிய பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
  • 2022ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

பொலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில்முன்னாள் மாணவர்களின் குதூகல பொங்கல்காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பொலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன் 1989ம் ஆண்டு  10ம் வகுப்பு படித்தவர்கள் ஒன்றாகி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடினார்கள்...


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்