For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' செய்ய
முடிகின்ற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு மூலம்,
வதந்திகள் ஓரளவு குறைந்தது.
(தொடர்ச்சி கீழே...)
வதந்தி, போலிச் செய்திகளால் ஏற்படும் வன்முறைகளை தடுக்கப்பட வேண்டும்
என்ற, இந்திய அரசின் உத்தரவை அடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம், ஒரே நேரத்தில் 5
பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்யும், கட்டுப்பாடு விதித்தது.
ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள்
என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம்
விளக்கம் அளித்துள்ளது.
தற்போது, இந்தக் கட்டுப்பாடு உலக அளவில் அனைத்து நாட்டிலும்,
அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்-அப்
பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் உள்ளனர்.
கைகள் தனியாக, கால்கள் தனியாக என கனக்கச்சிதமாக பார்சல் செய்யப்பட்ட
இளம்பெண்ணின் உடலை குப்பை மேட்டில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்
மாநகராட்சி ஊழியர்கள்!!
பெருங்குடியில் மிகப்பெரிய குப்பை கிடங்கு உள்ளது. இங்குதான் பாதி
சென்னையின் ஒட்டுமொத்த குப்பையும் கொட்டப்படும்.
இப்படி கோடம்பாக்கம் பகுதியிலிருந்து வந்து கொட்டப்பட்ட குப்பையில்தான்
வித்தியாசமான பார்சல்கள் இருந்ததை மாநகராட்சி ஊழியர்கள் பார்த்து
சந்தேகப்பட்டனர்.
(தொடர்ச்சி கீழே...)
துண்டாக பார்சல்
அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அது பெண்ணின் உடல் என்பதும்,
கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பார்சலாகி வந்தது என்பதும். ஆனால்
உடலை மட்டும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக
பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பச்சை குத்தப்பட்டுள்ளது
விரைந்து வந்த போலீசாரும் இதுகுறித்து விசாரணையில் இறங்கினார். கொலை
செய்யப்பட்ட பெண் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவரா? அல்லது வேறு பகுதியை
சேர்ந்தவரா என உடடினயாக தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30
வயதிருக்கும் என கூறப்படுகிறது. அவரது கையில் 2 இடங்களில் டாட்டூ எனப்படும்
பச்சை குத்தப்பட்டுள்ளது.
பலாத்காரம்
அதாவது வலது கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் படம் பச்சை
குத்தப்பட்டுள்ளது. கால்களில் மெட்டி இருக்கிறது. வசதியான வீட்டு பெண்ணாக
இருக்கலாம் என தெரிகிறது. பார்சலில் உடல் பாகங்கள் இருந்தாலும், நேற்று
அல்லது நேற்று முன்தினம்தான் கொலை நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆனால் பலாத்காரம் செய்துதான் இந்த கொலை நடந்திருக்க நிறையவே வாய்ப்பு
உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள்.
கைரேகைகள்
இப்போதைக்கு கால், கை மட்டும் கிடைத்துள்ளதால், கையிலுள்ள ரேகை எடுத்து
பார்த்து, ஆதாருடன் பொருத்தி பார்த்தால்தான் கொலை செய்யப்பட்ட பெண் யார்
என்பதும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரியவரும். அது
சம்பந்தமான முயற்சியில் போலீசார் இறங்கி வருவதுடன், பெண்ணின் உடல் எங்கே
உள்ளது என்றும் தேடி வருகிறார்கள்.
200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு... எங்கே தெரியுமா? கோயில்
பிரசாதத்துக்குதான்!!
பொதுவாக ஒரு விசேஷம் என்றால் கிடா வெட்டி விருந்து வைப்பார்கள்.
ஆனால்
கோயில் பிரசாதமாக பிரியாணியை தருவார்களா? என்பதுதான் பலரின் கேள்வியாக
உள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவில் உள்ள கிராமம்தான் வடக்கம்பட்டி.
இந்த கிராமத்தில் உள்ள முனிஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி
திருவிழா நடக்கும்.
(தொடர்ச்சி கீழே...)
ஆடுகள், கோழிகள்
அப்போது காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வருவார்கள். பிறகு
முனியப்பசாமிக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்வர். அதன்பின்னர் நேர்த்திக்
கடனாக ஆடு, கோழிகளை ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலுக்குள் விடுவார்கள். அந்த
ஆடு, கோழிகள் எல்லாம் இரவு நேரத்தில் வெட்டப்பட்டு பிரியாணி தயார் ஆகும்.
மட்டன் பிரியாணி
இந்தக் கோயிலில் மட்டும்தான் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள்
மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் மட்டன்
பிரியாணி பிரசாதமாக தரப்படும். இந்த திருவிழா 3 நாட்கள் நடக்கும்.
பிரசாதம்
எப்போதும் 2 ஆயிரம் கிலோ அரிசி போட்டு, 200 ஆடுகளை வெட்டி பிரியாணி தயார்
ஆகும். இந்த பிரியாணி இரவு பகலாக சமைப்பார்கள். விடிகாலை 4 மணிக்கு மணக்க
மணக்க முனீஸ்வரனுக்கு பிரியாணியை படைத்துவிட்டு, அதன்பிறகு பக்தர்களுக்கு
பிரசாதமாக தருவார்கள்.
2000 கிலோ அரிசி
காலை நேரத்தில் பிரியாணியை பெரும்பாலும் மக்களுக்கு சாப்பிட்டு பழக்கமில்லை
என்றாலும், பிரசாதம் என்பதால் யார் வேண்டுமானாலும், எவ்வளவு
வேண்டுமானாலும், சாப்பிடுவார்கள். பலர் வீட்டிலிருந்து பாத்திரங்களை
எடுத்து வந்து பிரியாணியை வாங்கி செல்வார்கள். அதன்படி வருகிற 25-ம் தேதி
திருவிழாவுக்காக 2000 கிலோ அரிசியில் 200 ஆடுகளை வெட்டி போட்டு பிரியாணி
செய்ய போகிறார்கள்.
முனியாண்டி விலாஸ்
இந்த கோயிலில் பிரியாணியை பிரசாதமாக வழங்க காரணம், முனியாண்டி ஸ்வாமியே ஒரு
பிரியர்தானாம். இந்த கிராமத்து முனியாண்டிதான் "மதுரை முனியாண்டி விலாஸ்"
என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகளில் பிரபலமாகி உள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஜங்ஷனை அடுத்து விஜய்யின் மகன் இயக்கி நடித்துள்ள சிரி குறும்படம்
தளபதி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விஜய்யின் மகனுக்கு படங்களை இயக்குவதில் ஆர்வம் உள்ளது. அதன் முதல் கட்டமாக
அவர் குறும்படங்களை இயக்கி நடித்தும் வருகிறார். அவர் இயக்கி நடித்த
ஜங்ஷன் குறும்படம் வெளியானது.
இந்நிலையில் சிரி என்கிற குறும்படம் வெளியாகியுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
ஜேசன் சஞ்சய்
தனது போனை கையில் எடுத்து தான் 10 நிமிடங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல்
இருக்க முடியுமா என்று ஜேசன் சிரியிடம்(Siri) கேட்கிறார். அதன் பிறகு அவர்
பள்ளிக்குள் சென்றபோது அவர் யார் கண்ணுக்கும் தெரியவில்லை. அதனால் அவர்
கதவை திறந்தபோது அதை பார்த்த சக மாணவர்கள் பேயோ என்று நினைத்து
பயப்படுகிறார்கள்.
உருவம்
சக மாணவர்கள் மிரள்வதை பார்த்து ஜேசனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
பின்னர் கண்ணாடி முன்பு நின்றபோது தான் அவரின் உருவம் அதில் தெரியாததை
பார்த்து அவர் அதிர்ச்சி அல்ல மகிழ்ச்சி அடைகிறார். அதன் பிறகு சக
மாணவர்களை பயமுறுத்தி விளையாடுகிறார்.
ஆசிரியர்
சக மாணவர்களை பயமுறுத்திக் கொண்டிருந்தபோது ஒரு ஐடியா வந்து வகுப்பறைக்குள்
சென்று விடைத்தாளில் மதிப்பெண்களை மாற்றுகிறார். அப்பொழுது அங்கு வரும்
ஆசிரியரிடம் கையும் களவுமாக மாட்டுகிறார். அவர் சிரியிடம் கேட்ட 10
நிமிடங்கள் முடிந்ததை அவர் உணராமல் ஆசிரியரிடம் வசமாக மாட்டுகிறார்.
தமிழ்
ஜங்ஷன் குறும்படத்தில் ஆங்கிலத்தில் அதிக அளவில் பேசினார்கள். சிரி
குறும்படம் முழுக்க ஆங்கிலத்தில் தான் உள்ளது. ஜேசன் சர்வதேச அளவில் தனது
குறும்படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைத்து இப்படி செய்கிறார்
போன்று. சிரி குறும்படம் ஜேசனை சுற்றியே நகர்கிறது.
Featured Post
பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...