Run World Media: 01/25/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்


எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 25, 2019

வந்தா 2 கிட்னியோட வா, கட்டிக்கலாம்.. கறார் காதலன்.. அதிர்ச்சி அடைந்த காதலி..

"2 கிட்னியோடு வந்தால்தான் கல்யாணம்" என்று கறாராக காதலன் சொல்லி விட்டதால் போலீசில் புகார் அளித்துள்ளார் இளம்பெண். 


சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவருக்கு வயது 32. நித்யாவுக்கு ஒரே ஒரு கிட்னிதான் உள்ளது. பிறவியிலேயே இந்த குறை இருந்தாலும் நித்யாவுக்கு 4 வருடத்திற்கு முன்புதான் வீட்டில் இந்த உண்மையை சொல்லி உள்ளார்கள். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்தநிலையில், இரண்டு வருடத்திற்கு முன்பு விக்னேஷ் என்ற 29 வயது நபர் நித்யாவுக்கு அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் நித்யாவை அவருக்கு பிடித்து போக கல்யாணம் செய்துகொள்வதாக வந்து சொல்லி இருக்கிறார்.


ஒரே ஒரு கிட்னி 

ஆனால் விக்னேஷ் வயதில் சிறியவர் என்பதால் இதற்கு நித்யா மறுத்துள்ளார். எனினும் வற்புறுத்தியதால் அவரது காதலை ஏற்றுள்ளார். அப்போது தனக்கு வலது பக்கத்தில் மட்டும் கிட்னி இருப்பதாகவும், இது தனக்கு பிறவி குறை என்றும் கூறினார்.


குடும்ப செலவு  

இதையடுத்து கடந்த வருடம் இரு வீட்டிலும் காதலை சொன்னதன் பேரில், பெற்றோர்களும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தினார்கள். ஆனால் நித்யாவின் தந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டதால் செலவு குடும்பத்தை நெருக்கி உள்ளது.


20 சவரன் நகை  

இந்தநிலையில் விக்னேஷ் வீட்டில் ஏற்கனவே போட்ட நகை இல்லாமல் மேலும் 20 சவரன் நகை அதிகமாக வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு பெண் வீட்டில் மறுப்பு சொன்னதாகவும் தெரிகிறது. பிரச்சனை இங்கிருந்துதான் வெடித்துள்ளது. இப்போது நிச்சயமான நிலையில், இரண்டு கிட்னியோடு வந்தால்தான் என்று விக்கேஷ் சொல்லுகிறாராம்.இரண்டு கிட்னி  

இதனால் விரக்தி அடைந்த நித்யா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருக்கிறார். நிச்சயமான நிலையில் விக்னேஷுடன் நெருங்கி பழகினேன் என்றும், இப்போது கிட்னியை காரணம் காட்டி வேண்டாம் என்பதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அணிந்த ஆடையை அணியக்கூடாது மனைவிக்கு 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி கொடுத்த கணவர்

மனைவி ஒரு முறை அணிந்த ஆடையை மீண்டும் அணியக் கூடாது என்பதற்காக கணவர் ஒருவர் மனைவிக்கு 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி கொடுத்து உள்ளார்.


ஜெர்மனியைச் சேர்ந்த மார்கொ ப்ரோக்மேனி இவரது கணவர் பால் ப்ரோக்மேன் ( 83). தன் காதல் மனைவி மார்கொ ஒரு முறை அணிந்த ஆடையை மீண்டும் அணியக் கூடாது என்பதற்காக தினம் ஒரு ஆடை வாங்கிக் கொடுத்திருக்கிறார் பால் .
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இப்படி 57 வருடங்களாக தன் மனைவிக்காக 55,000 ஆடைகளை வாங்கிக் குவித்திருக்கிறார் பால்.
உலகின் அதிகமான ஆடைக் கலெக்‌ஷன்களைக் கொண்டவர்கள்  என்கிற பெருமையும் இவர்களுக்கு உண்டு.
பால் மற்றும் மார்கொ தன் வீட்டில் ஒவ்வொரு இரவும் பால்ரூம் நடனம் ஆடுவது வழக்கமாம். அப்போது "மார்கொ ஏஞ்சலைப் போல் கவுன் அணிந்து வந்து தன் கை பிடித்து ஆடும்போது முதல் நாள் காதலைப் போல் உணர்வேன் என்கிறார் பால். அதனால் ஒவ்வொறு முறையும் மார்கொ புது கவுன் அணிந்து வர வேண்டும். அணிந்த கவுனை மீண்டும் அணியக் கூடாது என நினைத்தேன்" என்கிறார்.

பால் எப்போது வெளியே சென்றாலும் ஆடைகளை வாங்கி வருவாராம். பின் ஆடைகள் விற்பனை செய்யும் கடைகளில் நேரடித் தொடர்புவைத்துக் கொண்டு புது கலெக்‌ஷன்கள் வந்தால் முதல் நபராக இவரை அழைப்பார்களாம். மார்கொவிற்காக 2, 3 ஆடைகளை வாங்கி வருவாராம்.
ஆரம்பத்தில் மார்கொவிற்கு ஒன்றும் புரியவில்லையாம். பின் தன் மீதான அன்பால் இவ்வாறு செய்கிறார் என ஏற்றுக் கொண்டாராம். ஒரு நாள் அவர் வாங்கிக் குவித்த ஆடைகளைப் பார்த்தால் மலை போல் நிரம்பியிருந்ததாம். ஒரு கட்டத்தில் மார்கொவின் அலமாரியில் ஆடைகள் வைக்க இடம் இல்லாமல் போயிருக்கிறது. பின் இது போதும் நிறுத்திக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார் மார்கொ.

”எதர்க்கும் ஒரு முடிவு வேண்டும். எனக்கும் வயதாகி விட்டது. இனி என்னால் விலையுயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. எனவே இனி ஆடைகளை வாங்க வேண்டாம்” என தன் கனவரிடம் கூறியிருக்கிறார் மார்கொ. அதை ஏற்றுக் கொண்ட பால் 2014-ம் ஆண்டிலிருந்து ஆடைகள் வாங்குவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
தற்போது அந்த ஆடைகளை தன் மகளின் அறிவுரைப்படி விற்க முடிவு செய்திருக்கின்றனர். இதுவரை 7000 ஆடைகளை விற்றிருகின்றனர். அதில் 200 ஆடைகளை மட்டும் விற்பனைக்கு அல்லாமல் எடுத்து வைத்திருக்கிறார் பால். காரணம், இனி வரும் நாட்களுக்கு மார்கொ அணிய வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்திருக்கிறாராம். 

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 7500லிருந்து ரூ. 10,000 ஆக அதிரடி உயர்வு

தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


இவர்களின் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு ஆணை பிறப்பித்து உள்ளது. அவர்களுக்கான தொகுப்பூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இன்று 4 வது நாளாக ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்து, 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல், தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.


இந்நிலையில், ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் போராட்டம் நின்றபாடில்லை. தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வழக்குத் தொடர அனுமதி வேண்டும் என்று வைத்திருந்த கோரிக்கை மனுவையும் நீதி மன்றம் நிராகரித்தது. இதையடுத்து அதிரடியாக முடிவெடுத்த தமிழக அரசு, ஆசிரியர்கள் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகமும் உடனடியாகத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் என்று அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அதை மாற்றி மாதம் 10 ஆயிரம் ரூபாய் எனவும் அரசு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

கடனை திரும்ப செலுத்தாததால் கொடூரம் இளம்பெண்ணை தாக்கி தரதரவென இழுத்து சென்ற மகளிர் குழுவினர்

குப்பியில் கடனை திரும்ப செலுத்தாத இளம்பெண்ணை தாக்கி மகளிர் குழுவினர் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துமகூரு மாவட்டம் குப்பியை சேர்ந்தவர் சவிதா(வயது 28). இவர் அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் குழுவில் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். கூலி வேலை செய்து வரும் சவிதா கடனை திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இருப்பினும் இதுவரை ரூ.10 ஆயிரம் கடனை திரும்ப செலுத்தியுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மீதமுள்ள ரூ.15 ஆயிரத்தை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை என தெரிகிறது. இதுகுறித்து மகளிர் குழுவினர் அவரிடம் கேட்டுள்ளனர். அவரும் விரைவில் தருவதாக கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் சவிதாவை சந்தித்த மகளிர் குழுவினர் கடனை திரும்ப செலுத்தும்படி கேட்டுள்ளனர். அப்போது சவிதாவுக்கும், மகளிர் குழுவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

இதைதொடர்ந்து மகளிர் குழுவை சேர்ந்த சில பெண்கள் சவிதாவை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த சிலர் தடுக்க முயன்றனர். இருப்பினும் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள், சவிதாவை சரமாரியாக தாக்கியதுடன், தரதரவென இழுத்துச் சென்றனர். மேலும் கால் களால் அவரை எட்டி உதைத்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் சவிதா கதறி அழுதார்.

இதையும் பொருட்படுத்தாமல் தாக்குதல் சம்பவம் தொடர்ந்தது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களிலும், கன்னட செய்தி தொலைக்காட்சி சேனல்களிலும் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  

வாய்க்கால் கரையில் அத்துமீறிய தொழிலாளி.. கைவிரலை கடித்து துப்பிய மாணவி.. 4 வருடம் சிறை!

வாய்க்கால் கரைக்கு மாணவியை தூக்கி கொண்டு போய் பலாத்காரம் செய்ய முயன்ற பால்ராஜூக்கு 4 வருஷம் தண்டனை கிடைத்துள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஜம்புமடை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு வயது 42.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

கடந்த 2017, ஜூலை மாதம், பள்ளி மாணவி ஒருவரை வாய்க்கால் கரைக்கு தூக்கி சென்று விட்டார். அங்கு அப்பெண்ணை பலாத்காரம் செய்யவும் முயன்றார். ஆனால் பள்ளி மாணவியோ இந்த காமுகனிடம் போராடியதுடன், பால்ராஜின் கைவிரலை கடித்து துப்பி விட்டார். இதில் ரத்தம் கொட்ட ஆரம்பித்ததும், வலியால் துடித்தார் பால்ராஜ். 

இந்த சமயத்தில் மாணவி அங்கிருந்து தப்பி ஓடிவந்து பெற்றோரிடம் நடந்ததை சொன்னார். இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனடியாக தா.பேட்டை போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் பால்ராஜ் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இது சம்பந்தமான வழக்கும் திருச்சி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடப்பட்டு வந்தது. கடைசியில் நேற்று எல்லா சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு சொல்லப்பட்டது. மாணவியை சீரழிக்க செய்ய முயன்ற பால்ராஜுக்கு 4 வருஷம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருஷம் சிறை தண்டனை என்றும் நீதிபதி ஜி.மகிழேந்தி தீர்ப்பு கூறினார்.

‘போர்வை’யுடன் தீவிரக் காதல்.. பிப்ரவரியில் டும் டும் டும்.. கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க !

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது போர்வையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார். 
இந்த உலகில் வினோதங்களுக்கு பஞ்சமேயில்லை. யாருக்கு யார் மீது காதல் ஏற்படும் என்பதை சொல்வதற்கில்லை. இதுவரை எத்தனையோ திருமண செய்திகளை படித்திருப்போம். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால் இந்த செய்தி முற்றிலும் வினோதமானது தான். ஆம், இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது போர்வையை காதலித்து வருகிறாராம். விரைவில் அந்த போர்வையையே திருமணமும் செய்து கொள்ளப்போகிறார்.

பற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்!

பற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கரையானது, மினரல் உப்புகள், சாப்பிட்ட உணவின் மீதி மற்றும் சில பொருட்களால் உண்டாகிறது. 


இது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இது மிக கடுமையான கரையாக இருக்கும். இந்த கரையானது பற்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது. முதலில் இதனை நீக்குவது மிக கடினமானதாக இருக்கும். மேலும், இதனை வராமல் பார்த்துக்கொள்வது கடினமான ஒரு செயல் தான். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இது பற்களை சொத்தையாக்குவது மட்டுமில்லாமல், சிலவகையான தொற்றுக்களுக்கும் காரணமாக அமைகிறது.
நீங்கள் இந்த கரைகளுக்கு மிக அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகமிக அவசியம். ஏனென்றால், இது வாய் பாதுகாப்பிற்கு மிகமிக அவசியம். அதிஷ்டவசமாக உங்களுக்கென சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை பற்களுக்கு பின்னால் உள்ள கரைகளை எளிதில் போக்க உதவுகிறது.


1. கிராம்பு

கிராம்பில் உள்ள இயற்கை எண்ணைகளில் ஆன்டி பாக்டீரியல் முலக்கூறுகள் உள்ளன. இது உங்களது வாய் துர்நாற்றம் மற்றும் தொற்றுகளை தடுக்க உதவுகிறது.


தேவையான பொருட்கள்  

அரை டீஸ்பூன் 
கிராம்பு 1 கப் தண்ணீர் 

செய்முறை :  

முதலில் கிராம்பை தண்ணீரில் போட்டு இருபது நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். இந்த நீரை கொண்டு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.


2. கடுகு எண்ணெய்  

கடுகு எண்ணெய்யில் ஆண்டி பாக்டீரியல் தன்மை உள்ளது இது வாய்துர்நாற்றம் மற்றும் தொற்றுகளை நீக்க கூடிய தன்மை உள்ளது. இந்த கடுகு எண்ணெய்யானது, ஈறுகளை வலியாக்கவும், பற்களை சுத்தம் செய்யவும் உதவுகிறது. மேலும் இது உணவு துகள்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவுகிறது.தேவையான பொருட்கள்  

1 டீஸ்பூன் கடுகு எண்ணெய்
 அரை கப் தண்ணீர் 

செய்முறை:  

கடுகு எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் இட வேண்டும். இந்த கலவையை கொண்டு வாயை நனைக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு பஞ்சினால், இந்த நீரை தொட்டு, ஈறுகளை துடைக்கலாம்.


3. கற்றாளை, எலுமிச்சை 

பற்களில் இருக்கும் கரைகளை போக்க, கற்றாளை, எலுமிச்சை மற்றும் க்ளிசரின் ஆகியவை கலந்த பேஸ்ட் உதவியாக இருக்கும். இதனை பற்களின் மீது நேரடியாக வைத்தாலே துர்நாற்றம் மற்றும் பற்களில் உள்ள கரைகள் நீங்கும்.


தேவையான பொருட்கள் 

கற்றாளை - 1 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை - 1 டேபிள் ஸ்பூன் 
வெஜிடபிள் கிளிசரின் - 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை  

மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை டூத் பிரஸை கொண்டு டூத் பேஸ்டை போல பயன்படுத்த வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை அல்லது குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

4. உப்பு

உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளிப்பது பல காலமாக நாம் கடைப்பிடித்து வரும் ஒரு முறையாகும். இது பற்களின் பின்புற கரைகள், பாக்டிரியா, வாய்துர்நாற்றம் போன்றவற்றை தடுக்கும். இது தொற்றுகளை தடுக்கிறது.


5. எலுமிச்சை சாறு 

எலுமிச்சை சாற்றில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது பற்களில் உள்ள மஞ்சள் கரைகளை வெண்மையாக்கவும், துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது.


தேவையானவை  

தண்ணீர் - கால் கப் 
எலுமிச்சை - பாதி எலுமிச்சை 

செய்முறை 

தண்ணீரை சூடு செய்து, எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரால் ஒரு நிமிடம் வரை ஒருநாளைக்கு ஒருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

சார்.. 2 நாள் லீவு கொடுங்க.. என் பொண்டாட்டியை கொல்லனும்..

"சார்.. என் பொண்டாட்டியை கொலை செய்யணும்.. 2 நாள் லீவு வேணும்" என்று கேட்ட வங்கி மேலாளரின் கடிதத்தை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தே போய்விட்டனர்! 
மனைவியை கொலை செய்ய, இரண்டு நாட்கள் விடுப்பு கோரி, வங்கி மேலாளர் ஒருவர், தன் உயர் அதிகாரிகளுக்கும், மத்திய அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பீஹார் மாநிலம் பக்ஸரை சேர்ந்தவர் முன்னா பிரசாத். இவர் ஒரு கிராம வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் உள்ளது. கிட்னி பிரச்சனை காரணமாக ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இனி லீவு கிடையாது  

மனைவி ஆஸ்பத்திரியில் உள்ளதால் அடிக்கடி லீவு போட்டுவிட்டு அவரை கவனிக்க வேண்டி வந்தது. இதனால் ஒரு வருஷத்தில் எவ்வளவு லீவு எடுக்க முடியுமோ எல்லா லீவையும் முன்னாபிரசாத் எடுத்துவிட்டார். ஆனாலும் மனைவி குணமாகவில்லை என்பதால், இன்னும் லீவு தேவைப்பட்டது. ஆனால் இதற்கு மேல் லீவு எடுக்க கூடாது என உயர் அதிகாரிகள் கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள்.


கொலை செய்யணும் 

இதனால் என்ன செய்வதென்றே தெரியாத முன்னாபாய், தன் மேலதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், "சார்.. என் மனைவியை கொலை செய்ய வேண்டும், பிறகு அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டும். அதனால் 2 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும்" என்று கடிதம் எழுதினார்.


ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம்  

முன்னாபாய் அதோடு விடவில்லை. இந்த கடிதத்தின் நகலை பாட்னாவில் உள்ள வங்கியின் தலைமையகம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரின் அலுவலகம், பிரதமர், ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.


உடனடி லீவு 

லட்டரை படித்து பார்த்த வங்கி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்ததுடன், நகல்களின் முகவரியை கண்டு இன்னும் நடுங்கியே போய்விட்டது. அதனால் உடனடியாக முன்னாபாய்க்கு லீவு தர அனுமதி அளித்தது.


என்ன பண்றதுன்னு தெரியல  

பிறகு "ஏன் இப்படி லீவு லட்டர் எழுதினீங்க" என்று கேட்டதற்கு, "என் மனைவி உடல்நிலை நாளுக்கு நாள் மோசமா போய்ட்டு இருக்கு. கூடஇருந்து கவனித்து கொள்ளவே முடியவில்லை. லீவும் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் இப்படி எழுத வேண்டியதா போச்சு" என்று வருத்தத்துடன் விளக்கம் தந்தார் முன்னாபாய்!!

மரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்...!
மரணம் என்பது யாரும் விரும்பாத ஒன்று. ஆனால், பிறக்கும் போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், அந்த மரணம் எப்போது வரும் யாராலும் கணிக்க முடியாது.மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
* வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது என்றால் அதிலிருந்து ஆறு மாதங்களில் மரணம் நிச்சயம் என் சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
* திடீரென உடல் வெள்ளை மற்றும் மஞ்சளாக நிறம் மாற துவங்குகிறது. உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்படுகின்றன என்றால் அடுத்த ஆறு மாதத்தில் அந்த நபர் இறந்து போவார்.* தொண்டை மற்றும் நாக்கு ஒருவருக்கு விடாமல் வறட்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது எனில், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
* ஒருவரது இடது கை அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது. நாவில் வறட்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவர்.
* ஒருவரால் கருப்பு அல்லது சிவப்பு நிற வட்டத்தை நிலா மற்றும் சூரியனில் பார்க்க முடிகிறது என்றால் அவர் 15 நாட்களுக்குள் இறந்துவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை என்றாலும் மிக மந்தமாக தான் தெரிகிறது எனில், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.* ஒருவர் திடீரென ஊதா நிற ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று அர்த்தமாம்.
* கருடன், காகம், கழுகு - புறா ஒருவரது தலையில் வந்து அமர்வது மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஒருவர் தனது நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.* எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது மற்றும் நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சமிக்ஞை.
* எண்ணெய், தண்ணீர் போன்றவறில் ஒருவரது பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்