For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
பிரபலமான பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மும்பையைச் சேர்ந்த
11 வயது சிறுவன் ஒருவன், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு செல்போன் கேம் டிரெண்டிங்கில் இருக்கும்.
அந்தவகையில் பிரதமரே தனது பேச்சில் குறிப்பிடும் அளவிற்கு பப்ஜி கேம்
தற்போது நமது நாட்டில் டிரெண்டிங்காக இருக்கிறது.
வயது வித்தியாசம்
இல்லாமல் இதை விளையாடி வருகின்றனர். பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி
எப்போதும் இதனை விளையாடியபடியே இருக்கின்றனர்.
இதனால் இந்த விளையாட்டானது பொழுதுபோக்காக இல்லாமல், பொழுதை பாழடிப்பதாக
அமைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் இந்த விளையாட்டிற்காக அதிக
நேரம் செல்போனிலேயே செலவழிக்கின்றனர்.
பள்ளிச் சிறுவன்:
இந்நிலையில், இந்த விளையாட்டைத் தடை செய்யக் கோரி மகாராஷ்டிரா மாநிலம்
மும்பை பாந்த்ராவைச் சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுவன் அஹத் நிசாம்,
உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளான். தனது
தாயின் உதவியுடன் அஹத் இந்த வழக்கைத் தொடுத்துள்ளான்.
தடை கோரி வழக்கு:
அந்த மனுவில், ‘பப்ஜி விளையாட்டை, தான் சில நாள்கள் விளையாடியதாகவும்,
அதிலிருந்து தனக்கு எதிர்மறை எண்ணங்கள் வந்ததாகவும், மேலும் அதில் கொலை
போன்ற வன்முறைகள் அதிகமாக இருப்பதாலும் இந்த கேமை தடை செய்ய மகாராஷ்டிர
அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.
ஆணையம் தேவை:
மேலும் ஆன்லைன் நெறிமுறை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி இதுபோன்ற
வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் தனது மனுவில்
அஹத் தெரிவித்துள்ளான்.
குஜராத்:
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரிலும் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தேசிய
குழந்தைகள் ஆணையத்தில் மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சமீபத்தில் இந்த விளையாட்டிற்கு தடை
விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் மகள் பேட்மிண்டன் விளையாட்டில் அசத்தி வருகிறார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி, நடித்து வருகிறார்.
தாத்தாவை போன்று இயக்குனராகவும், அப்பாவை போன்று ஹீரோவாகவும் ஆக
திட்டமிட்டுள்ளாராம்.
(தொடர்ச்சி கீழே...)
ஷங்கர் இயக்கத்தில் ஜேசன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஜேசனின்
தங்கை திவ்யா சாஷாவுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் ஈடுபாடு அதிகம். அவர்
அதில் கவனம் செலுத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார் அவர்.
பள்ளியின் பேட்மிண்டன் அணியில் திவ்யாவும் உள்ளார். பேட்மிண்டன் அணியின்
புகைப்படங்களை அந்த பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பெருமையுடன் சமூக
வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
அந்த புகைப்படங்களில் திவ்யா உள்ளார். அந்த குழு அண்மையில் நடந்த போட்டி
ஒன்றில் 3வது இடம் பிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது ஐந்து மாத குழந்தையின்
வாயில் உயிருள்ள மீனை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியை சேர்ந்தவர் பாபு மாலி. இவர் படாஸ் பகுதியில்
உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஐந்து
மாத பெண் குழந்தையும் உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
பாபுவின் ஐந்து மாத குழந்தை, எப்போதும் வாயில் ஜொள்ளு வடித்துக்
கொண்டே இருந்தது. இதனை நிறுத்துவதற்காக, பாபுவின் மனைவி அக்கம்பக்கத்தில்
உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார். அப்போது சிலர், உயிருள்ள மீனை குழந்தையின்
வாயில் வைத்தால் ஜொள்ளுவிடுவதை நிறுத்திவிடும் என ஆலோசனை கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஒரு உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் பாபுவின் மனைவி
வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மீன் குழுந்தையின் தொண்டையில்
சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறியது.
இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. ஒரு
சிறிய அறுவை சிகிச்சைக்கு பின்னர், குழந்தையின் தொண்டையில் சிக்கிய மீன்
வெளியே எடுக்கப்பட்டது.
அக்கம்பக்கத்தாரின் பேச்சைக் கேட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்
வகையில் தாய் செயல்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது
Featured Post
பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...