Run World Media: 03/27/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, March 27, 2019

சென்னைக்கு இதற்காக தான் வந்தோம்: வெளிமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் திடுக்கிடும் வாக்குமூலம்கவரிங் நகைகளை மாற்றி அதற்கு பதிலாக தங்கநகைகளை சென்னையில் தான் எளிதாக பெறமுடியும் என்பதற்காகவே சென்னை வந்தோம் என இளம் பெண் உட்பட ஒரு கும்பல் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளது.


சென்னை தண்டையார்பேட்டையில் நவரத்தன்சிங் என்பவர் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடந்தி வரும் நிலையில் அங்கு 25 வயதான இளம் பெண்ணும், 50 வயதான நபரும் வந்தனர். பின்னர் தங்களிடம் பழைய தங்கக் கம்மல் இருப்பதாகவும் அதற்கு பதிலாக தங்க செயின் வேண்டும் என்றும் கூறினர்.


இதையடுத்து அங்கிருந்த 6 கிராம் எடையுள்ள தங்கநகையை அவசரமாக தேர்வு செய்து எடுத்துகொண்ட நிலையில் அதற்கு பதிலாக 7 கிராம் எடையுள்ள கம்மல்களை அப்பெண் கொடுத்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து வேகமாக கிளம்பிய நிலையில், கடை ஊழியர்கள் சந்தேகமடைந்து கம்மலை சோதித்தனர்.
அப்போது அது கவரிங் என தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.


இது குறித்த தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் டெல்லியைச் சேர்ந்த கிசன்லால் (69) என்பவர் சிக்கினார். விசாரணையில், அவர் டெல்லியிலிருந்து குடும்பத்தோடு வந்து, கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.


அவர் கொடுத்த தகவலின்படி அவரின் மகன் சஞ்செய் மற்றும் உறவினர்கள் சோனுகுமார், அவரின் மனைவி லதா ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில், தமிழகத்தில் தான் அதிகளவில் நகைகளை அணிவார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்ததும், மேலும் சிலரை இதே போல ஏமாற்ற திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.


கொள்ளைக் கும்பல் அளித்த வாக்குமூலத்தில், சென்னையில் தான் கவரிங் நகைகளை எளிதில் மாற்ற முடியும் என்றுதான் இங்கு வந்தோம். கொண்டு வந்த நகைகள் அனைத்தையும் மாற்ற நினைத்தோம், ஆனால் அதற்குள் பொலிசார் பிடித்துவிட்டனர் என கூறியுள்ளனர்.

பள்ளிக்கு பறந்து செல்லும் மாணவி!ஐம்பது அடி தூரம் நடந்தாலே, இந்த புத்தக மூட்டையை சுமந்து கொண்டு எப்படி நடந்து வருவது என நம்ம வீட்டு குட்டீஸ் தர்ணா செய்கிறார்கள். இவர்கள் வீட்டை விட்டு கீழே இறங்கியதும், பள்ளிக்கு செல்ல பைக், வேன், ஆட்டோ அல்லது பள்ளி பேருந்து காத்து இருக்கிறது.


இது போன்று சொகுசாக பயணம் செய்யும் நம்ம பிள்ளைகளுக்கு மத்தியில் தினமும் 14 கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கு சென்று வருகிறார் நிகிதா. நிகிதா, மகாராஷ்டிரா மாநிலம் ரெய்காட் அருகேயுள்ள பால்சில் கிராமத்தை சேர்ந்தவர்.


9ம் வகுப்பு படிக்கிறார். இவர் பள்ளிக்கு தினமும் 14 கிலோ மீட்டர் நடந்தே செல்கிறார். அதுவும் பயங்கர மிருகங்கள் நிறைந்த வனப்பகுதியை கடந்து. நிகிதாவின் தந்தை ஒரு ஏழை விவசாயி. அவர் சம்பாதிப்பது குடும்பத்தின் செலவிற்கே சரியாக இருப்பதால், அவரால் நிகிதாவின் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.


 நிகிதா நடந்து செல்லும் சில நேரம் காட்டுப்பன்றிகள் குறுக்கிடும். அதை சமாளித்து பாம்பு மற்றும் பூரான்களை கடந்தே பள்ளியை அடைகிறார். தினமும் இரண்டு மணிநேரம் முன்னதாக நடையை தொடங்கினால்தான் குறிப்பிட்ட நேரத்திற்கு இவரால் பள்ளியை அடைய முடியும். மாலை அவர் வீடு திரும்பும் போது இருட்டிவிடும். டாக்டராக வேண்டும் என்ற தனது ஆசைக்கு மத்தியில் இந்த நடைபயணம் அவருக்கு சுகமான சுமையாக உள்ளது என்கிறார் நிகிதா.


நிகிதாவின் கல்வி ஆர்வம் குறித்து மராட்டிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து புனேயை சேர்ந்த சிட்டி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் அவருக்கு உதவ முன்வந்தது. அந்த நிறுவனம் மாணவி நிகிதாவிற்கு மின்சார சைக்கிள் ஒன்றை கடந்த மாதம் 25ம் தேதி பரிசாக அளித்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுமி நிகிதாவின் கல்வி ஆர்வம் குறித்து அறிந்த எங்கள் நிறுவனம் அவருக்கு எலக்ட்ரிக் சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளது.


இனி அவர் தனது பயணம் குறித்து கவலை கொள்ளத்தேவையில்லை. அவரது மருத்துவ கனவு நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள்’’ என தெரிவித்தார். இது தொடர்பாக நிகிதா கூறுகையில், ‘‘என்னுடைய பள்ளி படிப்பு முடியும் வரை நடந்து தான் செல்லவேண்டுமோ என நினைத்திருந்தேன். பல நேரங்களில் நடந்து வரும் அசதியினால் பள்ளியில் தூங்கிடுவேன். இப்போது சைக்கிளில் பள்ளிக்கு பறந்து செல்கிறேன்’’ என்றார் நிகிதா.


மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த எலக்ட்ரிக் சைக்கிளை 2 மணிநேரம் சார்ஜ் ஏற்றினால் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். நிகிதாவின் மருத்துவ கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்