Run World Media: 04/15/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, April 15, 2019

தையூர் ஊராட்சியில் கழிவுநீர் தேக்கம் : புகார் மீது அதிகாரிகள் அலட்சியம்
திருப்போரூர்: சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சி வளர்ச்சி அடைந்துவந்ததாலும் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. தையூர், கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய்கள் வழியாக பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி குட்டை போல் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. கழிவுநீர் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் கழிவுநீர் அகற்றி, உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள கேளம்பாக்கம் மற்றும் தையூர் ஊராட்சி நிர்வாகத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லை’’ என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து சாத்தாங்குப்பம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘’எங்கள் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் தையூர், சாத்தங்குப்பம், கேளம்பாக்கம் பகுதிகளில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய், சாலைகள் அமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். இப்பகுதிகளில் அரசு கூடுதல் நிதி கொடுத்து, இங்கு பாதாள சாக்கடை திட்டத்தைநிறைவேற்றித் தரவேண்டும்’’ என்றார்.


தபாலில் வந்த 500 ரூபாய் நோட்டுகள்: வேட்பாளருக்கு ஓட்டுபோடும்படி வீட்டுக்கு தபாலில் வந்த 500 ரூபாய் நோட்டுகள்


பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலோடு பெரம்பூர் உள்பட 18 சட்டசபை இடைத்தேர்தலும், இதைத் தொடர்ந்து மே 19-ந் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம்-பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓட்டுக்கு பணம் வாங்கும் சில வாக்காளர்களை குறி வைத்து புதுப்புது விதத்தில் அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து வருவது வாடிக்கையாக உள்ளது.


இந்த நிலையில் பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆலை பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த தொழிற் சாலையின் தொழிற்சங்கம் பெயரில் இந்த தபால் வந்து உள்ளது. 
http://www.runworldmedia.com/2019/04/blog-post_61.html

அந்த தபாலில் கடிதத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டும் இருந்தது. கடிதத்தில், தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு அளிக்கும்படி எழுதப்பட்டு இருந்தது. இதேபோல் 500 ரூபாய் நோட்டுடன் கூடிய தபால் பெரம்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வந்து இருப்பதாக தெரிகிறது.

ரூபாய் நோட்டுடன் வந்த கடிதத்தை சிலர் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்ததால் இது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த தபால் பெரம்பூர் தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதேபோல் ரூபாயுடன் மேலும் கடிதம் வருமா? என்றும் சிலர் ஏக்கத்துடன் காத்து உள்ளனர். இதற்கிடையே ஓட்டுக்காக வாக்காளர்களின் வீட்டுக்கே தபாலில் ரூ. 500 நோட்டு அனுப்பப்பட்டது பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் வந்தது. அவர்கள் அரசியல் கட்சியினரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் தபாலில் பணம் அனுப்பியவர்கள் யார்? என்பது பற்றி ரகசிய விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். பெரம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக ஆர்.எஸ். ராஜேஷ் (அ.தி.மு.க.), ஆர்.டி.சேகர்(தி.மு.க.), வெற்றிவேல் (அ.ம.மு.க.) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதேபோல பெரம்பூர் தொகுதியை உள்ளடக்கிய வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமியும், அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.), சந்தான கிருஷ்ணன் (அ.ம.மு.க.) போட்டியிடுகிறார்கள்.

டிக்-டாக் செயலி பதிவின் போது விபரீதம் - டெல்லியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வாலிபர் பலி


டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 19) என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர்களான அமிர், சொகைல் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் இந்தியா கேட் பகுதிக்கு சென்றார்.

பின்னர் வீடு திரும்பும் வழியில் அவர்கள் துப்பாக்கியை உடலில் குறிவைப்பது போன்று டிக்-டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக காரின் டிரைவர் இருக்கையில் இருந்த சல்மானின் கன்னத்தில், நாட்டுத்துப்பாக்கி ஒன்றின் முனையை வைத்தவாறு சொகைல் போஸ் கொடுத்தார். அப்போது திடீரென அந்த துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டுபாய்ந்ததால் படுகாயமடைந்த சல்மான், காரிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனால் பதறிப்போன நண்பர்கள், உடனே அவரை தங்கள் உறவினர் ஒருவருடன் சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சல்மான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சல்மானின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சல்மானின் 2 நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினரை போலீசார் கைது செய்தனர். டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்