Run World Media: 04/16/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 16, 2019

14வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவன் பலி


திருப்போரூர் அடுத்த காலவாக்கம் கிராமத்தில்  தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தனியார் பல்கலைக்கழகம்  ஒன்றில் 3ம் ஆண்டு படிக்கும் கேரளாைவ சேர்ந்த முகம்மது அப்ரிடி உள்பட  மாணவர்கள் சிலர், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

நேற்று காலை  கல்லூரிக்கு புறப்பட்ட மாணவர்கள், வீட்டின் சாவியை உள்ளே வைத்து விட்டு வீட்டை  பூட்டி சென்றனர்.மாலையில் கல்லூரியில் இருந்து திரும்பி வந்தபோது, சாவி இல்லாமல் திகைத்தனர். பின்னர், பூட்டை உடைத்து  கதவை திறப்பது சிரமம் என நினைத்த அவர்கள், மொட்டை மாடியில் இருந்து கயிறு  கட்டி இறங்கி, ஜன்னல்  வழியே உள்ளே செல்ல முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து, முகம்மது அப்ரிடி    உடலில் கயிறு கட்டி மொட்டை மாடியில் இருந்து கீழே  இறங்கினார். அப்போது திடீரென கயிறு அறுந்து 14வது மாடியில் இருந்து  முகம்மது அப்ரிடி கீழே விழுந்தார். அதில், அவரது மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே  இறந்தார்.தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் ஊர்வலம் வந்த கணவன்


பெருந்துறை: கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையை அறுத்து உடலை பைக்கில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (28). இவர், முனியப்பன் கேஸ் லாரிகளுக்கு சிலிண்டர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரை சேர்ந்தவர்.

இவரது மனைவி நிவேதா (19). இவர் தனியார் டிப்பார்மெண்ட் ஷோரூமில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கடந்த 7 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று இரவு முனியப்பன் வேலைக்கு சென்று விட்டு, வேலை குறைவாக இருந்ததால் இரவு 10 மணிக்கே வீடு திரும்பினார். 

http://www.runworldmedia.com/2019/04/blog-post_16.html
அப்போது வீட்டில் நிவேதா, வேறொரு வாலிபரோடு உல்லாசமாக இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதன்காரணமாக நிவேதாவிற்கும் முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.


அப்போது முனியப்பன், ‘நிவேதாவிடம் உனது தாய் வீட்டில் விட்டு விடுகிறேன் வா’ என்று கூறி தனது பைக்கில் அழைத்து வந்துள்ளார். பவானி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்காட்டுவலசு பகுதியில் வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன், தான் வைத்திருந்த கத்தியால் நிவேதாவை கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் தலையை தனியே எடுத்து பைக்கின் முன்புறம் வைத்துவிட்டு, உடலை எடுத்து பெட்ரோல் டேங்கின் மீது தன் பக்கமாக திருப்பி உட்கார வைத்து பைக்கில் ஊர்வலமாக சென்றுள்ளார்.

அப்போது வேகமாக வந்து பைக்கை திருப்பியபோது அப்பகுதியில் உள்ள வீட்டு சுவரின் மீது மோதி விழுந்துள்ளார்.இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல்படி பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முனியப்பனை கைது செய்தனர். நிவேதா உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மனைவியின் தலையை அறுத்து உடலை பைக்கில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய அரசு நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை - கடைசி நாள் : 23.4.2019மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள Garden Reach Ship Builders & Engineers நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள் :

1. Mechanical : 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்சி-1)
2. Admin & HR : 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
3. Electrical Maintenance : 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-2)
4. Finance : 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
5. Material Mgmt : 1 இடம் (பொது)
6. Fire Fighting : 1 இடம் (பொது)
7. Chemist : 1 இடம் (பொது)
8. Welder : 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
9. Painter : 1 இடம் (பொது)
10. Naval Architecture : 2 இடங்கள் (பொது)
11. Junior Hindi Translator : 1 இடம் (எஸ்டி)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது : 1.3.2019 அன்று 28க்குள்.
http://www.runworldmedia.com/2019/04/blog-post_16.htmlசம்பளம் : ரூ. 23,800-83,300.

வயது, கல்வித்தகுதி, தேர்வுமுறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.grse.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.4.2019.


கணவர் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் இதை செய்கிறார்... மனைவி எடுத்த அதிரடி முடிவு.!!நம் நாட்டில் விவாகரத்து கேட்கும் பெண்கள் கருத்து வேறுபாடு, கணவன் அல்லது அவரது குடும்பத்தினர் செய்யும் கொடுமை, கணவன் குடிக்கிறார், வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார், ஆண்மை இல்லை, இவ்வாறு பல காரணங்களை கூறி பெண்கள் விவகாரத்து பெறுவதுதான் வழக்கம்.


ஆனால் மத்திய பிரதேசம் மாநிலம்  போபால் அருகே பாரிகார் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பெண்(23 வயது) ஒருவர் தனது கணவர் வாரம் ஒருமுறை மட்டுமே குளிக்கிறார், ஒழுங்காக சேவ் செய்வதில்லை என்றும் புகார் கூறி அவருடன் வாழ முடியாது என்று விவகாரத்து கேட்டு வழக்கு தொடந்துள்ளார்.

http://www.runworldmedia.com/2019/04/blog-post_61.htmlஇருவருக்கும் திருமணம் ஆகி ஓராண்டு தான் ஆகிறது. அதிலும் இந்த தம்பதிகளுக்கு குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் சம்மதத்துடன், போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.நீதிமன்றம் இவர்களை 6 மாதம் பிரிந்து இருக்கும் படி கூறியுள்ளது. அதன் பிறகு விவாகரத்து குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். இவர்களது விவகாரத்தில் அவர்களது பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை என்றும் கூறப்படுகிறது.


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்