Run World Media: 05/01/19

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 1, 2019

பாலியல் வன்புணர்வு செய்ய வந்த இளைஞனை ஒரே வார்த்தையில் ஓடவிட்ட பெண்!!கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ய வந்த இளைஞனை சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓடவைத்துள்ளார் இளம்பெண் ஒருவர்.

மகராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ராஜ்நகரைச் சேர்ந்த 29 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த மார்ச் 25ம் தேதி தனது 6 வயது மகளுடன் அங்குள்ள தர்கா அருகே நின்றிருந்த போது பைக்கில் சென்றவர்களிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான கிஷோர் விலாஸ் அஹ்வத் என்ற இளைஞன் இருவரையும் இறக்கி விடுவதாக கூறி தனது பைக்கில் ஏற்றியுள்ளார்.

ஆனால் அந்த இளைஞர் இருவரையும் ஒதுக்குப்புறமான பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளான்.அந்த இக்கட்டான தருணத்திலும் சமயோசிதமாக யோசித்த அப்பெண் தான் எய்ட்ஸ் (HIV) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த அந்த இளைஞர் தலைதெறிக்க அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளார்.

பின்னர் காவல்நிலையம் சென்ற அந்த பெண் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த இளைஞரின் அங்க அடையாளங்கள், டாட்டூ ஆகியவை குறித்து போலீசாரிடம் விளக்கியுள்ளார். அந்தப்பெண் கூறிய அடையாளங்களை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் அஹ்வத்தை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு முயற்சி மற்றும் POSCO ஆகிய பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் தனது தந்தையை கொலை செய்துவிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், ஜாமீனில் வெளிவந்த போது இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் சமயோசிதமாக செயல்பட்டு பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பியதுடன், துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளி குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த பெண்மணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குற்றவாளி குறித்த அடையாளங்களை அவர் தெரிவித்திருந்தது அவரை பிடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் No. 1 – தெறிக்கவிட்ட தல அஜித் ரசிகர்கள்!


தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவருக்கு நாளை பிறந்தநாள், இதனால், தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பிரமாண்டமாக இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இவரின் பிறந்தநாளை டுவிட்டரில் மாலை 5 மணியளவில் #HBDIconicThalaAJITH என்ற டேக் ஆரம்பித்து கொண்டாட தொடங்கினர். ஆரம்பித்த 10 நிமிடத்தில் இந்தியளவின் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்திற்கு இந்த டேக் வந்துள்ளது. மேலும், 25 ஆயிரம் டுவிட்ஸ் அதில் இடம்பிடித்துள்ளது.


பிறந்தநாள் கொண்டாடும் நேரத்தில் அஜித் வீட்டில் சோகம் !


மே1 என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே ஒரு விஷயம் தான் அஜித் அவர்களின் பிறந்தநாள். இந்த தினத்திற்காக தல ரசிகர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பில் இருந்தே பல ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

அந்த விஷயங்களையும் நாம் அறிவித்து வந்தோம், நாளும் நெருங்கிவிட்டது, ஸ்பெஷல் DP, டாக் எல்லாவற்றையும் ரசிகர்கள் டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நேரத்தில் தான் ஒரு சோக செய்தி, அதாவது அஜித்தின் அவர்களின் அப்பா சுப்பிரமணி அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்