Run World Media: 05/05/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 5, 2019

எலப்பாக்கத்தில் போலீஸ் அராஜகம் - வீடியோ உள்ளே Police Harassment in Elapakkam Palkavadi Festival[இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் மறக்காமல் பாருங்கள்]
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலப்பாக்கம் கிராமத்தில் பால் காவடி திருவிழா நடைபெற்று வருகிறது.


பொதுமக்கள் அமைதியாக இருந்த போதிலும் போலீசார்கள் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் தேவையில்லாமல் பிரச்சனைகளை உண்டாக்கி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.


கடந்த ஆண்டு அனைத்து இரு சக்கர வாகனங்களும் ஓரமாக நிறுத்தப்பட்டபோதிலும் வாகனங்களை கீழே தள்ளி காற்றை பிடுங்கி விட்டு தேவையில்லாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களில் வீடு திரும்பும் நினைக்கும் பொது மக்களின் நிலைமை மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடலாம் என ஏதாவது சட்டம் உள்ளதா..?


இந்த ஆண்டு பின்புறமாக தனியாக நிற்கும் பொதுமக்களையும் தேவையில்லாமல்  அடித்து துரத்துவது மட்டுமல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.


முறையாக ஞாயத்தை கேட்டாலும் "இன்னைக்கு அடங்க மாட்ட நாளைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தானே வந்து நிற்கனும், அந்த சர்டிபிகேட் வேணும், இந்த சர்டிபிகேட் வேணும்னு" என மிரட்டி  தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.
இந்த திருவிழாவானது ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய பிரசித்திபெற்ற திருவிழா என்பதால் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது மக்கள் வருகை தருகின்றனர். அப்படி மக்கள் வரும்பட்சத்தில் முன்கூட்டியே வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் ஏதாவது வழி செய்திருக்க வேண்டும்.
ஆனால் பொதுமக்கள் கூடிய பிறகு வேண்டுமென்றே வந்து வண்டியை தள்ளுமாரும், ஓரமாக நிற்குமாறு கூறி அராஜகத்தில் இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் பின்புறத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கின்றனரே தவிர முன் புறமாகவோ அல்லது உட்புறமாகவோ அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.கடந்த பங்குனி உத்திரம் திருவிழா அன்று போலீசார் இல்லாத காரணத்தினால் எந்தவித பிரச்சனையும் இன்றி சுமுகமாக திருவிழா நடந்தது.


அதனை கூறியதற்கு இந்த ஊர் காவல் படை காவலர் கேள்வி எழுப்பியவரையும், கடவுளையும் எவ்வளவு பச்சையாக பேசுகிறார் என்ற வீடியோவை நீங்களே கேளுங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம்

காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்...

திண்டிவனத்தில் போலீஸ் அராஜகம் - Thindivanam police harassment

விஜய் யார் என்றே தெரியாமல் அவருடன் நடித்த நடிகை
விஜய் யார் என்பது தெரியாமல் அவருடன் நடித்துள்ளார் கத்ரீனா கைஃப்.பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், விஜய்யும் சேர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு கோக் விளம்பரத்தில் நடித்தார்கள். இந்நிலையில் அனைடா ஷ்ராஃப் அட்ஜானியா நடத்தும் நிகழ்ச்சியில் கத்ரீனா கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் அவர் விஜய் பற்றி பேசியுள்ளார். விஜய் பற்றி கத்ரீனா கூறியதாவது,


ஊட்டி 
கோக் விளம்பரத்திற்காக ஊட்டிக்கு சென்றிருந்தேன். ஷூட்டிங்கின்போது தரையில் அமர்ந்திருந்தோம். நான் போனில் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் முன்பு இரண்டு பாதங்கள் தெரிந்தது.


பிசி 
யாரோ நிற்கிறார்கள் என்று நான் நிமிர்ந்து பார்க்காமல் போனில் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அப்பொழுதும் அந்த பாதங்களை பார்க்க முடிந்தது. யாரு இது என்று நிமிர்ந்து பார்த்தால் விளம்பரத்தில் என்னுடன் நடித்தவர்.


விஜய் 
அவர் பெயர் விஜய் என்பதும், அவர் தென்னந்திய சூப்பர் ஸ்டார் என்பதும் எனக்கு பின்னர் தான் தெரிய வந்தது. குட்பாய் சொல்வதற்காக வந்தவர் நான் போனில் பேசியதை பார்த்துவிட்டு நான் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார். ரொம்ப நல்ல மனிதர் என்கிறார் கத்ரீனா.


பந்தா 
விஜய் பெரிய ஸ்டாராக இருந்தாலும் பந்தா இல்லாமல் அனைவரிடமும் பழகுவார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதை தான் கத்ரீனா கைஃபும் தெரிவித்துள்ளார்.

ஒரு அரைசதம்.. சேவாக் சாதனை காலி.. அணிக்கு வெற்றி.. சிக்ஸர் மன்னன் ரிஷப் பண்ட்!


ரிஷப் பண்ட் அதிக சிக்ஸர்கள் அடிப்பதில் சேவாக் சாதனை ஒன்றை முந்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அருமையாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். 

இந்தப் போட்டியில் மட்டும் ஐந்து சிக்ஸர்கள் விளாசினார் ரிஷப் பண்ட். டெல்லி அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் இதுவரை 21 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மொத்தமாக தன் நான்கு வருட ஐபிஎல் ஆட்டங்களில் 88 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இவை அனைத்தும் டெல்லி அணிக்காக மட்டுமே அடித்துள்ளார் பண்ட். இதன் மூலம், டெல்லி அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இதற்கு முன்பு சேவாக் டெல்லி அணிக்காக 85 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை முறியடித்துள்ளார் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ரன் குவிப்பதும், சில போட்டிகளில் சொற்ப ரங்களில் ஆட்டமிழப்பதுமாக இருந்து வந்தார். எனினும், 3 அரைசதங்கள் அடித்து 14 போட்டிகளில் 401 ரன்கள் குவித்துள்ளார் பண்ட், இதன் சராசரி 36.45 ஆகும்.

அதே சமயம், ரிஷப் பண்ட் அடித்த அரைசதங்கள் டெல்லி அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியிலும், 116 என்ற இலக்கை நோக்கி ஆடிய போது மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், ரிஷப் பண்ட் மட்டுமே நிலைத்து நின்று ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக காவல் துறை - ஆர்பரிக்கும் பொதுமக்கள் : இனி உங்கள் வீடுகளை 24 மணி நேரமும் நேரடியாகவே கண்காணிக்கும் போலீஸ்..!


திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகள், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் தொடர் இணைப்பின் மூலமாக திருச்சி மாநகரம் முழுவதையும் இணைத்து திருச்சி மாநகர நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மெகா திரையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி மாநகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள அனைத்து பகுதிகளையும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனத்தை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி விட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும்.

அசர வைத்த செல்வி சீமா - வீடியோ உள்ளே - Seema nice speechஅதிசய விளக்கு | தலைகீழாக எண்ணைய ஊற்றி ஏற்றனும் - வீடியோ பாருங்க - Miraculous lamp

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்