Run World Media: 05/24/19

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 24, 2019

அட சூப்பரால்ல இருக்கு! .. தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் 3 பெண் எம்பிக்கள்!

தமிழகத்திலிருந்து டெல்லிக்கு 3 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. 

இதில் தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து திமுக 38 நாடாளுமன்ற தொகுதியிலும் , அதிமுக ஒரே ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. அது போல் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவின் வெற்றி கணிசமான அளவு நடைபெற்றது. இந்த நிலையில் சென்னையிலிருந்து 3 பெண் எம்பிக்கள் டெல்லிக்கு செல்கின்றனர்.

எதிர்பார்ப்பு
அவர்களில் திமுகவை சேர்ந்த கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் காங்கிரஸின் ஜோதிமணி ஆகியோர் டெல்லி செல்கின்றனர். இவர்களது செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

கரூர் மக்கள் 
 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சினைகளையும் தண்ணீர் பிரச்சினையையும் தீர்ப்பது குறித்து கனிமொழியின் திட்டங்களை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அது போல் கரூரில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து தேர்தல் பிரசாரத்தின் போதே கரூர் மக்களிடம் இருந்து ஜோதிமணி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

தீர்வு 
 தென் சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை ஏற்படுத்தவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படுமா என மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர
எம்பிக்கள்
 செயல்பாடு முன்னாள் எம்பிக்களின் செயல்பாடே இவர்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த 3 பெண்களும் தொகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வாழ்த்துகள்.

“உடைச்ச டிவியை ஒட்ட வச்சு பிக் பாஸ் பார்க்க வேண்டியது தான்”.. மீண்டும் கமலை கலாய்த்த சிவி குமார்

மக்களவைத் தேர்தலில் கமலின் கட்சி தோல்வியடைந்ததை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சி வி குமார். 

 லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் தேசிய அளவில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவியேற்பது உறுதியாகி விட்டது. 
 இந்த தேர்தலில் தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் முதன்முறையாக போட்டியிட்டது. இதில் அக்கட்சி வேட்பாளர்களுக்கு பெரும்பாலான தொகுதிகளில் 3வது மற்றும் 4வது இடங்களே கிடைத்தன.

சி.வி.குமார் கிண்டல் 
 இந்நிலையில், கமல் கட்சியின் தோல்வியை விமர்சிக்கும் வகையில் சூதுகவ்வும், பீட்ஸா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும், மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களின் இயக்குனருமான சி.வி.குமார் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அதில் அவர் வடிவேலு படத்துடன், "போ... போ... எல்லாம் முடிஞ்சருச்சு போ ... உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ..." என கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

டிவியை உடைத்த கமல்
தேர்தல் பிரசாரத்தின் போது கமல் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பழைய அரசியல்வாதிகளின் பெயர்களை கூறும் போது கோபமாக அங்கிருக்கும் டிவியை கமல் உடைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தற்போது அதனைக் கலாய்த்து தான் இப்படி ஒரு பதிவை சி.வி.குமார் வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

இது முதல்முறையல்ல
கமலை இப்படி மறைமுகமாக சி.வி.குமார் விமர்சிப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே, கமல் கோட்சே பற்றி பேசிய போதும், இதே போன்ற ஒரு பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில் அவர், ‘அறிவாளி போல் காட்டிகொண்டாலும் அவரும் அரசியல்வாதி தானே ... ஓட்டுண்ணா எல்லாம் அப்படி தான் விட்டுட்டு வேலையை பாருங்கப்பா....' எனத் தெரிவித்திருந்தார். 

ரசிகர்கள் கோபம்  
தொடர்ந்து கமல் குறித்து இத்தகைய பதிவுகளை வெளியிடுவதால், அவரின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் சி.வி.குமார். டிவிட்டரில் கமல் பற்றிய சி.வி.குமாரின் பதிவுகளுக்கு கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சில கமெண்ட்கள் மிகவும் காட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது!

இயக்குநர் சிம்புதேவன் இயக்கும் படத்துக்கு கசட தபற என்று பெயர் வைத்து இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இப்படியே போனால் இனி தமிழ் எழுத்துக்களில் வல்லினம் மெல்லினம் இடையினம் என்கிற எழுத்துக்கள் குறித்த சந்தேகம் நம் பிள்ளைகளுக்கு இருக்காது.


கசட தபற ஆறு எழுத்து.. கதைக் களமும் ஆறு..ஆனால் ஒன்றுக்கு ஒன்று கதை தொடர்புடையதா இருக்குமாம். இயக்குநர் மட்டும்தான் ஒருவராவார் சிம்புதேவன்...மற்றபடி ஆறு யூனிட்டுக்கும் ஆறு டெக்னீஷியன்ஸ். 
இசை அமைப்பாளர்கள், கேமிரா மேன்கள், எடிட்டர்கள் என்று அசத்தும்படி கதைக்களம் இருக்குமாம். யுவன், பிரேம்ஜி,சந்தோஷ் நாராயண்,ஜிப்ரான் என்று இசை அமைப்பாளர்கள் ஆறு பேர். குழப்பம் இல்லாமல் ஒரு யூனிட் ஐந்து நாள் ஷூட்டிங் என்று திட்டமிட்டு 30 நாட்களில் படத்தை முடித்து கொடுக்க உழைத்து வருகிறாராம் சிம்பு தேவன். 
 நடிகர்கள் சிவா,ஜெய், வைபவ்,பிரேம்ஜி,சந்தீப், கிஷன் என்று உறுதியாகி உள்ளது. தயாரிப்பாளர் வெங்கட் பிரபுவாச்சே... ஆமா,வெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர் படத்தின் பிரச்சனை இன்னுமா முடிவுக்கு வரவில்லை?

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்