For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
பஸ்-மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கெஜ்ரிவால் அறிவிப்பு...
டெல்லியில் மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி
படுதோல்வி அடைந்தது. அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த
நிலையில் டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் இலவசமாக பயணம்
செய்யலாம் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அதிக கட்டணம் என்பதற்காக எக்ஸ்பிரஸ் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில்
பயணம் செய்ய முடியாத பெண்களுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
எனினும், டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் அளவுக்கு வசதி படைத்த பெண்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் உண்மையிலேயே தேவைப்படும் பெண்களுக்கு இந்த
சலுகையை விட்டுக்கொடுக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த திட்டத்தால் டெல்லி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 14 டிரைவர்களை சஸ்பெண்டு செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனில் பேசுவதால் விபத்துக்கள்
ஏற்படுகின்றன.செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றம் என சுப்ரீம் கோர்ட்டு
அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம்
ஓட்டுபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பஸ் ஓட்டும்போது செல்போனில் பேசுவதால் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்பட
வாய்ப்பு உள்ளது. எனவே அரசு மற்றும் மாநகர பஸ்களில் டிரைவர்கள்,
கண்டக்டர்கள் போன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடங்களில் சென்னை மாநகர பஸ்களில் டிரைவர்கள் செல்போனில்
பேசிக்கொண்டே ஓட்டுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. 2014-ம் ஆண்டு முதல்
கடந்த ஆண்டு வரை 370 புகார்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் தற்போது புகார் உறுதி செய்யப்பட்ட 14 மாநகர பஸ் டிரைவர்கள், 3
கண்டக்டர்கள் மீது போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் நடந்த விபத்துக்களின் அடிப்படையில்
இந்த 17 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரி,
வேளச்சேரி சந்திப்பு ஆகிய இடங்களில் நடந்த மாநகர பஸ் விபத்துக்கள்
டிரைவர்கள் செல்போனில் பேசியதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவது தெரிய
வந்துள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி
வருகிறார்கள். பொதுமக்களும் புகார் செய்கிறார்கள்.
இதன் அடிப்படையில்
விசாரணை செய்து மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியின்போது செல்போன்
பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அதன் அடிப்படையில் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2019-2020-ம்
கல்வியாண்டிற்கு 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு
புதிய பாடத் புத்தகங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி தொடங்கி
வைத்தார்.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை
படிக்கும் மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு
அரசால் வழங்கப்பட்டு வருகிறது
. மாணவர்களது புத்தகச் சுமையினை குறைக்கும்
நோக்கத்தோடு 2012-2013 கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை தமிழ்நாடு அரசால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் பருவம் ஜுன் மாதத்திலும், இரண்டாம் பருவம் அக்டோபர் மாதத்திலும்,
மூன்றாம் பருவம் ஜனவரி மாதத்திலும் தொடங்குகிறது. பாடப் புத்தகங்கள்
ஒவ்வொரு பருவத்தின் தொடக்க நாளன்றே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ffff
மாணவர்களின் முழுமையான ஆளுமைத் திறனை வளர்த்திடவும், செயல் வழிகற்றல் முறை
மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை
வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய
அறிவியல் தொழில் நுட்ப மாற்றங்களுக்கேற்ப கல்வி மற்றும் வேலை
வாய்ப்புகளுக்கான சவால்களை மாணவ, மாணவிகள் உறுதியோடு எதிர்கொள்ளும்
வகையிலும், அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மிகச்சிறந்த
கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து, புதிய
பாடத் திட்டமும், பாட நூல்களும் உருவாக்கப்பட்டது.
2019-2020-ம் கல்வியாண்டிற்கு ரூ.195.25 கோடி செலவில் 2, 3, 4, 5, 7, 8, 10
மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி
தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி
வைக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை
படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு தான் இன்றே
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக
தீர்த்திடும் வகையில் உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து
தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்,
முழுமையாக பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இன்று பள்ளிகள்
திறக்கப்பட்டுள்ளன.
அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் இன்றே
வழங்கப்படும். மத்திய அரசால் நடத்தப்படும் எந்த போட்டித் தேர்வுகளையும்
எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுகின்ற வகையில் இந்த புதிய பாடத் திட்டம் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி
மாநிலமாக திகழ்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், மாற்றங்களையும்
இந்த அரசு மேற்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின்
தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்,
மேலாண்மை இயக்குநர் ஜெயந்தி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்
ராமேஸ்வரமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் லதீஷா அன்சாரி(24). இவர்
பிறக்கும்போதே மிகவும் அரிதான எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டவராவாஇவருக்கு ஷெஹின் என்பவருடன் திருமணம் ஆனது.
இருவரும் ஐஏஎஸ் அதிகாரியாக
வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளனர். ஷெஹினுக்கு இது மூன்றாவது
தேர்வு. லதீஷாவுக்கு இதுமுதல்தேர்வு.
சில தினங்களுக்கு முன் லதீஷாவின் நிலைமை குறித்து பல்வேறு
பத்திரிக்கைகளில் தகவல்கள் வலம் வந்தன. லதீஷா, சில காலங்களாக சரியான
சுவாசமின்றி சிரமப்பட்டு வந்தார். அவருக்கு
தடையற்ற ஆக்ஸிஜன் சப்ளே தேவைப்பட்டது.
அவரால் ஆக்ஸிஜன் சப்ளே
இன்றி சாப்பிடக்கூட முடியாத நிலையும் உருவானது. இதையடுத்து கோட்டயம்
கலெக்டரிடம் இது தொடர்பாக லதீஷாவின் தந்தை மனு அளித்திருந்தார்.
இதில் லதீஷா ஐஏஎஸ் தேர்வு எழுத உள்ளதாகவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படுவதால் அதனை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து
அரசு சார்பில் அவருக்கான உதவி, ஐஏஎஸ் தேர்வு எழுத தேர்வறைக்கு சென்றபோது
வழங்கப்பட்டது. லதீஷா திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் நேற்று தேர்வு
எழுதினார்.
அங்கு வந்த அரசு அதிகாரிகள், அவரது வீல் சேருக்கு பின்புறம்
ஆக்ஸிஜன் சிலிண்டரை பொருத்தினர்.
இது குறித்து லதீஷா கூறுகையில், 'இப்போது நான் நலமாக உணர்கிறேன். ஓராண்டாக
மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். எனது லட்சியத்தை நிச்சயம் எட்டுவேன்.
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' என புன்சிரிப்புடன் கூறினார்.
மேலும் லதீஷா தனது செல்போனில் இருந்த அவரது படைப்பில் உருவாக்கப்பட்ட
கண்ணாடி ஓவியங்கள், கீபோர்ட் வாசித்த வீடியோக்கள் என காண்பித்து அனைவரையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியும் இருக்கிறார்.
ராமநாதபுரத்தை அடுத்த இளமனூர் அருகே உள்ள புழுதி கண்மாய் பகுதியில் அரசு
உரிமம் பெற்ற மணல் குவாரி உள்ளது.
ஆனால் இங்கு அரசின் விதிமுறைகளுக்கு
புறம்பாக அதிக ஆழத்தில் மணல் தோண்டி எடுக்கப்படுவதாகவும், கண்மாய்
கரைகளையும் வெட்டி மணல் எடுப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மோகன் (வயது 42)
மற்றும் சிலர் நேற்று மாலை புழுதி கண்மாய் பகுதிக்கு சென்று அங்கு லாரி
மற்றும் டிராக்டர்களில் மணல் திருடிக் கொண்டிருந்தவர்களை கண்டித்து தட்டிக்
கேட்டனர்.
மேலும் அங்கு மணல் எடுக்கக் கூடாது என்று கூறினர். இதனால்
அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு மணல் திருடிக் கொண்டிருந்தவர்கள் செல்போனில் கொடுத்த தகவலின் பேரில்
அப்பகுதிக்கு ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்தது.
அந்த கும்பல் அரிவாள் மற்றும் இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களால் மோகன்
மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த மோகனை
கண்மாயின் ஒரு பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் மற்றும் சேற்றில் அமுக்கி
கொடூரமாக கொலை செய்தனர். மற்றவர்கள் காயத்துடன் தப்பியோடி உயிர்
பிழைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்களே மோகனின் உடலை ஒரு காரில்
ஏற்றி ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு
தப்பியோடி விட்டனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இளமனூர்
கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா(37), முருகேசன்(37), லட்சுமணன்(32),
செல்வம்(44) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி தகவலறிந்த இளமனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த
200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ராமநாதபுரம் அரசு
ஆஸ்பத்திரியில் திரண்டனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது
செய்ய வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து
மறியிலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன்,
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி
மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மறியலை
கைவிட்டனர்.
கொலை செய்யப்பட்ட மோகனுக்கு சாந்தி(34) என்ற மனைவியும், 2
மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி இளமனூர் கிராம நிர்வாக
அலுவலர் சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார்
வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் முறைப்படி தங்கள் அலுவலகம்
சென்று பொறுப்பேற்று வருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஹர்ஷவர்தன் மத்திய
சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லியில் உள்ள தனது
அலுவலகத்துக்கு சைக்கிளில் அவர் சென்றார்.
கோப்பில்
கையெழுத்திட்டு தனது பணியைத் தொடங்கிய ஹர்ஷவர்தனுக்கு, துறை சார்ந்த
அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அகமதாபாத் நகர நரோடா தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பால்ராம் தவாணி
ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம்
பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு வெளியே நடந்து உள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் தண்ணீர் பற்றாக்குறை பற்றி புகார் கூற வந்து
உள்ளார். அப்போது அந்த பெண்ணை எம்.எல்.ஏ. தாக்கி உதைத்தார்.
வீடியோவில்
கீழே தள்ளிவிடப்படும் பெண்னை ஒரு கும்பல் தாக்குகிறது. அந்த பெண்ணை
உதைக்கிறார்கள்.
எனினும் பின்னர், பால்ராம் தவாணி எம்.எல்.ஏ. அந்த
பெண்ணிடம் வருத்தம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ள பலராம் தவாணியின் சகோதரர் கிஷோர் தவாணி தாக்கியவர்கள் குறித்து குற்றம்சாட்டினார்.
Featured Post
பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...