Run World Media: 06/06/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 6, 2019

சற்றுமுன் | அச்சிறுப்பாக்கத்தில் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது சென்னை நோக்கி வந்த கார் பின்புறம் சக்கரம் வெடித்ததில் தலைகீழாக பல்டி அடித்தது.இதில் காரில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் இருவருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டது.


கார் இன்னும் சற்று வேகமாக வந்திருந்தால் தடுப்புச் சுவரின் மீது மோதி பாலத்தின் கீழே விழுந்து நொறுங்கி இருக்கும்.


இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.உஷார் நிபா வைரஸ் பரவிவருகிறது இப்போது கர்நாடகாவிலும்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த நோய்க்கான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதற்கு முன்பு 17 பேர் பலியானார்கள். இதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி என்பவரும் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவில் மீண்டும் பரவி வருகிறது.

இதனால் கேரள எல்லையையொட்டிய தமிழக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் வராமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. 

இதற்காக எல்லை பகுதிகளில் முகாம்கள் அமைத்து மருத்துவ சோதனைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தின் உள்ளே வரும் வாகனங்கள் மருத்துவ சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
இதேபோல், கர்நாடக மாநிலத்திலும்  தீவிர கண்காணிப்பு  நடைபெற்று வருகிறது. கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களில்  உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 மாவட்ட மருத்துவனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தினால் நினைவாற்றல் பாதிப்பு : ஆய்வில் தகவல்

அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு ஒன்றில் அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்துபவர்களின்  நினைவாற்றல் அதிக அளவு பாதிக்கப்படும்  என  கண்டறிந்து உள்ளனர்.
 அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்தும் 100க்கும் மேற்பட்டவர்களின்  நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. அவர்களது மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. 

 இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள்  உலக மனநல பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்தின் தலைவர் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோசப் பிர்த், இணைய வடிவமைப்பு எவ்வாறு மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் திறன்களை இரண்டாக மாற்றியது என்பதை  பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளார்.
"இன்டர்நெட்டிலிலுள்ள வரம்பற்ற ஸ்ட்ரீம் உங்களின்  கவனத்தை தொடர்ந்து  திசைதிருப்பி வைத்திருப்பதை ஊக்குவிக்கிறது. வேறு ஒரு பணியில்  கவனத்தை செலுத்தும் உங்கள் திறன் கணிசமாகக் குறையும்" என ஜோசப் பிர்த் கூறி உள்ளார்.
தேவையான தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. நமது மூளையில் சேர்த்து வைக்கவேண்டிய தேவை இல்லை.

 கூகுள் தேடலிலும் , விக்கிபிடியாவிலும் தகவல்கள் கிடைக்கின்றன் அதனால் விஷயங்களை மூளையில் சேமித்து வைக்கவேண்டிய தேவைகள் குறைகின்றன என கூறினார்.

100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடிய ஆண் நர்ஸ்

தமிழ் படமொன்றில் நடிகர் வடிவேலுவிடம், வாங்க.  செத்து செத்து விளையாடலாம் என நடிகர் முத்துக்காளை கூறுவது போன்று காட்சிகள் இருக்கும்.  ஆனால் ஜெர்மனியில் ஆண் நர்ஸ் ஒருவர் உண்மையில் நோயாளிகள் 100 பேரை சாகடித்து விளையாடியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.ஜெர்மனி நாட்டில் ஆண் நர்சாக பணிபுரிந்து வந்தவர் நீல்ஸ் ஹீகெல் (வயது 42).  கடந்த 2000 மற்றும் 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் கிளினிக் மற்றும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபொழுது, 100 நோயாளிகளை கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இவர், நோயாளிகளை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடுவார்.  எப்படி எனில், மாரடைப்பு ஏற்படுத்தும் வகையிலான மருந்துகளை கொண்டு ஊசி போட்டு விடுவார்.  இதற்காக அஜ்மலைன் என்ற மருந்தினை பயன்படுத்தி உள்ளார். 

 இது தெரியாமல் சிறிது நேரத்திற்கு பின் நோயாளி துடிக்க ஆரம்பித்து விடுவார்.  பின்னர் அவரை மரணத்தில் இருந்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியில் நீல்ஸ் ஈடுபடுவார்.

சீருடை அணிந்து, ஒவ்வொரு அறையாக சென்று, யாருக்கும் தெரியாமல் இந்த பணிகளை செய்த நீல்ஸ் தொடர் கொலைகாரராக இருந்துள்ளார்.  
இவரால் காப்பாற்றப்படும் சிலருக்கு இவர் கடவுளாக இருந்துள்ளார்.  ஆனால் இந்த முயற்சியில் பெருமளவிலான நோயாளிகளின் உயிரை நீல்சால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
  கடந்த 2005ம் ஆண்டு வரை இவரது இந்த சேவை தொடர்ந்துள்ளது.  இதன்பின்பே சக பணியாளர்கள் இவரை பற்றி அறிந்து அதிர்ந்துள்ளனர்.
இதுபற்றிய வழக்கு விசாரணையில் இதுவரை 97 பேரை நீல்ஸ் கொலை செய்துள்ளார் என வழக்கறிஞர்கள் தரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.  மற்ற 3 வழக்குகளில் போதிய சான்றுகள் இல்லை. 
 இவர்களில் 55 பேரை கொலை செய்தது பற்றி விசாரணையில் நீல்ஸ் ஒப்பு கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தின் முன் ஆஜரான அவர் கூறும்பொழுது, கடந்த காலங்களில் நான் செய்ததற்காக நோயாளி ஒவ்வொருவரிடமும் உண்மையில் மன்னிப்பு கோரி கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.  

இதற்கு முன் நடந்த விசாரணை ஒன்றில், நர்ஸ் பணியில் அலுப்பு தட்டியது.  வழக்கல்போல் பணியாற்றுவதில் சவால் எதுவும் இல்லை.  அதனால் பரவசம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள முயன்றேன் என நீல்ஸ் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விசாரணை முடிவில், நீங்கள் மட்டுமே வெற்றி பெறும் மற்றும் அனைத்து நபர்களும் தோல்வி மட்டுமே அடைய கூடிய விளையாட்டு ஒன்றில் நோயாளிகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என நீதிபதி பர்மன் கூறியுள்ளார்.


மகளின் திருமணத்திற்காக கேவலமான வேலய பார்த்த தந்தை....!!! விவரம் உள்ளே-->

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த தஷரதகுர்ஹதே. இவர் தனது மகளின் திருமண செலவிற்காக தனது சொந்த நிலத்தில் இருந்த 860 மரங்கவனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றதாக தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர்.
 இது குறித்து தஷரத் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.


இந்த விசாரணையில் தஷரத், மகளின் திருமண செலவிற்கு பணம் இல்லாததாலும், 40 ஆண்டுகளுக்கு பின் தஷரத் குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதாலும் இவ்வாறு செய்ததாக தெரிய வந்துள்ளது.
வனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றதாக தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர். இது குறித்து தஷரத் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து 860 மரங்களை வெட்டி காட்டை சேதப்படுத்தியதாக கூறி, வனத்துறை அதிகாரிகள் தஷரத்துக்கு தண்டனை வழங்கியுள்ளனர்.
அதன்படி, தஷரத் 4 மாதங்களுக்குள் வெட்டிய மரங்களை விட இரு மடங்கு மரங்களை நட வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் அதற்கான பணத்தை வனத்துறையிடம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர். 

இலவசமாக உங்கள் பிள்ளைகளை பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமா...??? ஒரு கிலோ பிளாஸ்டிக் (Plastic) பாட்டில் போதும்..! விவரம் உள்ளே -->>


இந்தியா, மக்கள் தொகையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு எனவே பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப, அனைவருக்கும் அரசே கல்வியை வழங்க முடியாத நிலை ஏற்பட்ட போது கல்வியில் தனியார் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாத காரணியாக உருவெடுத்தது.


 எனினும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் பள்ளிகளின் ராஜ்யம் தான் தற்போது நடந்து வருகிறது. அரசு என்னதான் குறிப்பிட்ட கட்டணங்களை மட்டுமே வகுத்திருந்தாலும், தனியார் பள்ளிகளை பொருத்த வரை அவர்களின் தனி சாம்ராஜ்யம் தான்.

அவர்கள் சொல்வது தான் கட்டணம். இந்த நிலையில் இதற்கெல்லாம் வெறும் பிளாஸ்டிக் (Plastics) குப்பைகளை கட்டணமாக வாங்கிக் கொண்டு பள்ளி அஸ்ஸாமில் உள்ளது.


ஆமாங்க.. நாம் தான் சரியாக படிக்கவில்லை. நம் குழந்தையாவது நன்றாக படிக்க வேண்டும். என்ற ஆதாங்கத்திலேயே குழந்தைகளை அதிக கட்டணமாக இருந்தாலும் கஷ்டப்பட்டேனும் படிக்க வைக்கின்றனர்.
 ஆனால் இது போன்ற சூழ்நிலைக்கு மாறானது அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் ஒரு தம்பதியால் நடத்தப்பட்டு வரும் அக்ஷர் பள்ளி. ஏன் மற்ற பள்ளிகளுக்கு ஒரு எடுத்துக் காட்டும் கூட.


இலவச கல்வி தான் நோக்கம்
 2013-ம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து இந்தியா வந்த மெஸின் முக்தர் (30 வயது ) என்பவர், ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்பதே இவரின் நோக்கமாம். இந்த நிலையில் முக்தரும், பர்மிதா சர்மா என்ற சமூக ஆர்வலருடன் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு தான் உருவெடுத்தது இந்த அக்சர் பள்ளி.


சமூக ஆர்வலர்கள் மெஸின் முக்தர் ஒரு விண்வெளி பொறியாளாராக அமெரிக்காவில் வேலை செய்து வந்தவர், அதே அவரது மனைவி பர்மிதா சமூக சேவை குறித்த மாஸ்டர் டிகிரியை முடித்தவர்.


 இதில் முக்தருக்கு நியூயார்க்கில் இருக்கும் போது இருந்தே இப்படியொரு ஆசையாம், இதே பர்மிதா ஏற்கனவே ஒரு பள்ளியில் தான் பணியாற்றியும் இருக்கிறார். ஆக இருவர் மனதிலும் ஒரே எண்ணம் தான் ஒரு நல்ல தரமான பள்ளியை உருவாக்க வேண்டும் என்பதே.


தனித்துவமான பள்ளி  
அக்சார் பள்ளி குறிப்பாக ஏழை மாணவர்கள், பள்ளியிலிருந்து பாதியில் வெளியேறியவர்கள் போன்ற பலரும் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். அதோடு இந்த தம்பதியர் இது குறித்து கூறும் போது அக்ஷர் பள்ளி சாதாரண ஒரு பள்ளியைப்போல் இல்லாமல் அனைத்து விதத்திலும் தனித்துவமாக திகழ்கிறது.

இங்கு சுமார் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனினும் பொருளாராத ரீதியில் உள்ள பிரச்சனையால் எளிய முறையில் மரத்தால் ஆன வகுப்பறையிலேயே மாணவர்கள் அமரவைக்கப்பட்டுள்ளனர்.


சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு முன்னுரிமை 
 அங்கு படிப்பைத் தாண்டிச் சுற்றுச்சூழல், நடனம், இசை, ஓவியம், கைவினைப் பொருள்கள், விளையாட்டு, புகைப்படம் எடுத்தல் மற்றும் சமூகம் மற்றும் கேளிக்கை பொருட்கள் உற்பத்தி செய்தல், எம்பிராய்டரி, வேளாண்மை, நடனம், தோட்டக்கலை, சோலார் பேனலிங்க் மற்றும் மறுசுழற்சி மற்றும் மின்னனுவியல் சார்ந்த பல விஷயங்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவெனில், வயதில் மூத்த மாணவர்கள்தான் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள்.


பள்ளிக் கட்டணம் பிளாஸ்டிக் கழிவுகளே


இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்தப் பள்ளியில் படிக்கக் கட்டணமாக, மக்கள் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பைகளே வாங்கப்படுகிறது. அட ஆமாங்க.. மாணவர்கள் அனைவரும் வாரம் ஒருமுறை அந்த பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வர வேண்டுமாம். இதுதான் பள்ளிக் கட்டணமாம். ஆமாங்க வாரம் 20 - 25 பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கொண்டு வந்து தருதலே கட்டணமாம்.


படிக்க வசதியில்லாத குழந்தைகள்
 இது பற்றி முக்தர் கூறுகையில், இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள், படிக்க வசதியில்லாத சின்னஞ்சிறு பிள்ளைகள் மற்றும் பலரும் குவாரிகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வந்தவர்கள்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய இந்த மாணவர்களுக்கு இலவசமாகத் தரமான கல்வி தர வேண்டும் என நாங்கள் முடிவு செய்து உருவாக்கியதுதான் இந்த அக்ஷர் மன்றம். இங்கு 4 முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த குழந்தைகள் அனைவரும் கவுஹாத்திக்கு அருகில் உள்ள பாமோஹி, போரகோன், கோர்ச்ஹுக் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்கிறார் முக்தர்.


அன்பான விதிமுறைகள்
எங்கள் பள்ளியில் கட்டணமாக வாரம் ஒருமுறை பிளாஸ்டிக் பைகளைப் பெறுகிறோம். இதன் மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அவற்றை எரிக்கக் கூடாது மறுசுழற்சி செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை எளிதில் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியும்.

 அதோடு எங்களுக்குக் கிடைக்கும் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்வோம். மீதமுள்ளவற்றைப் பள்ளியினுள்ளே அழகு பொருட்கள் செய்ய பயன்படுத்துவோம். மாணவர்களையும் அவர்களை வைத்துப் பெற்றோர்களையும் இனி பிளாஸ்டிக்கை எரிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைத்துள்ளோம்.

 மாணவர்கள் தங்களின் வீடுகளில் குறைவான அளவில் பிளாஸ்டிக்கை உபயோகிக்க வலியுறுத்தியுள்ளோம் என்கிறது இந்த பள்ளி. இது தான் இந்த பள்ளியின் அன்பான விதிமுறையும் கூடவாம்...


பள்ளியில் செயல் முறை பாடங்களே

அதிகம் பள்ளியில் செயல் முறை பாடங்களே அதிகம் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தினமும் ரூ.100 முதல் 150 வரை கல்குவாரிகள் வேலைக்கு சென்றவர்கள்.

 இவர்கள் பள்ளிக்கு வந்து விட்டால், குடும்பம் வறுமை அதிகரிக்கும், இதனால் இவர்களின் இந்த பள்ளிப் படிப்புக்கு இது முற்றுப்புள்ளியாகி விடக்கூடாது என்பதற்காகவே, வறுமையைத் தடுக்கும் வகையிலும் அதை எதிர்த்துப் போராடும் வகையிலும் எங்கள் பள்ளியில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக செய்முறை பாடங்கள் அதிகம் கற்பிக்கப்படும். வாரம் ஒருமுறை மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவோம். செய்முறை தேர்வின் மூலம் மாணவர்கள் தங்கள் பாடங்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். இப்படியொரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளோம் என்கிறார் பர்மிதா.


ஆரம்பத்தில் 20 மாணவர்கள்


தான் இந்த பள்ளி ஆரம்பத்தில் வெறும் 20 மாணவர்களுடன் ஆரம்பித்தோம். ஆனால் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். அதோடு இங்கு 8 மூங்கில் குடிசைகள் தான் பள்ளிகளாக உள்ளன. தற்போது உள்ள டிஜிட்டல் வகுப்பிற்காக சிலவற்றை மற்ற சமூக ஆர்வலர்கள் மூலம் வாங்கியுள்ளதாகவும் இந்த பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. எப்படியோங்க.. இந்த பள்ளி மற்ற பள்ளிகளுக்கு ஒரு நல்ல முன் உதாரணம் என்பதில் தவறில்லை.

தொடர்ந்து உயிரைக்குடிக்கும் நீட் தேர்வால் தமிழகமே சோகம்....!!

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் ரிதுஸ்ரீயை தொடர்ந்து மற்றொரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பட்டுகோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இரு தற்கொலை நிகழ்வுகளும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரிதுஸ்ரீ 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் இந்த துயர முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.மேலும்  நீட் தேர்வினால்  அடுத்தடுத்து தற்கொலை  நடைபெறுவதால்    அதிர்ச்சியில் தமிழக மக்கள் உள்ளார்கள்.!


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்