Run World Media: 06/17/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, June 17, 2019

20 வயசுதாங்க ஆகுது.. போலி ஆசாமியை நம்பி என் மகளை இழந்துட்டேனே.. கதறும் கோவை தந்தை

"மாதவிடாய் பிரச்சனைக்குதான் மகளை கூட்டிட்டு போனேன்.. இப்படி போலி ஆசாமியை நம்பி மகளையே இழந்துட்டேனே" என்று மாணவியின் தந்தை ஒருவர் கதறி கதறி அழுதது அனைவரையும் கலங்க செய்தது.

 கோவை புதூர் நேதாஜி நகரைச் சேர்ந்த தம்பதி கணேசன் - மல்லிகா. இவர்களது மகள்தான் சத்யப்பிரியா. வயசு 20 ஆகிறது. சத்யப்பிரியா கோவை ஆர்ட்ஸ் காலேஜில் 3-ம் வருட பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து வருகிறார். இவருக்கு கொஞ்ச நாளாகவே மாதவிடாய் பிரச்னை இருந்திருக்கிறது.


சித்த வைத்தியம் 
இதனால் அவஸ்தைப்பட்டு வந்த சத்யப்பிரியாவை, எத்தனையோ டாக்டர்களிடம் அழைத்து சென்றும், குணமாகவில்லை. அதனால், சொந்தக்காரர்கள் சொன்னபடி, செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலைக்கு மகளை கடந்த ஜனவரி மாதம் அழைத்து சென்றனர். 

 அந்த வைத்தியர் பெயர் குருநாதன். என்ன ஆச்சோ தெரியவில்லை... தவறான வைத்தியத்தால் சத்யப்பிரியா இன்று காலை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.


குருநாதர் 
இதை பற்றி அவரது பெற்றோர் சொல்லும்போது, "வைத்தியர்கிட்ட போன ஒரு மாசத்திலேயே மகளுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்து. கொஞ்ச நாளில் முகமெல்லாம் வீங்கிடுச்சு. இதை போய் குருநாதர்கிட்ட கேட்டதுக்கு, எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்லி திரும்பவும் அதே மருந்தைதான் தந்தார்.


உறுப்புகள் பாதிப்பு
போன ஏப்ரல் 22-ம் தேதி உடம்பு ரொம்ப மோசமாயிடுச்சு. அதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தோம். மே 1-ம் தேதி சித்த வைத்தியர் குருநாதன் மீது செல்வபுரம் ஸ்டேஷனில் புகார் தந்தோம். இதுவரைக்கும் ஒரு நடவடிக்கையும் இல்லை. அவர் தந்த தப்பான மருந்தால்தான், என் மகளின் சிறுநீரகம், நுரையீரல் பாதிக்கப்பட்டுவிட்டது.


சாலை மறியல் 
 மாதவிடாய் பிரச்சனைக்காக போய், கடைசியில் என் பொண்ணை இழந்துட்டேன்.. இதுக்கு காரணமான குருநாதனை கைது செய்ய வேண்டும்" என்று கதறினர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, சத்யப்பிரியாவின் உறவினர்களும் சேர்ந்து, அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.


உறுதி அளித்தனர்
விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குருநாதரிடம் விசாரணை நடத்தியிருப்பதாகவும், சத்யபிரியாவுக்கு அவர் அளித்த மருந்துகளை ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகவும் சொன்னார்கள்.

 மேலும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர்தான் சத்யபிரியாவின் உடலை வாங்கினர்.

30 ஆண்டு பகை... கணவனை அடித்து ஜோலியை முடித்த மனைவி- சாமி கும்பிட்டு சந்தோஷம்

கணவன் மனைவி இடையே சண்டை இப்போது கொலையில் முடிகிறது. 30 ஆண்டுகாலம் கணவன் மீது பகையோடு வாழ்ந்து பிள்ளைகளை பெற்று வளர்த்த பின்னரும் அந்த பகை தீராமல் கொலை செய்து அதை சந்தோசமாக கொண்டாடியுள்ளார் ஒரு பெண்.

 கொலை செய்து விட்டோமே என்ற கவலையோ குற்ற உணர்ச்சியோ கொஞ்சம் கூட இல்லாமல் கோவிலுக்கு வந்து சூடம் ஏற்றி சாமி கும்பிட்ட பெண்ணை அதிசயமாக பார்த்த மக்கள் போலீசில் பிடித்துக்கொடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 மனைவியால் கொல்லப்பட்ட நபரின் பெயர் ராமு என்பதாகும். 60 வயதாகும் ராமு அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழமாளிகை காலனி தெருவை சேர்ந்தவர். இவருக்கு அசலாம்பாள் என்ற மனைவியும் ராம்குமார்,30, அருள் 26 ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கீழமாளிகையில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கரகாட்டம் ஒயிலாட்டம் என திருவிழா களைகட்டியது. கரகாட்டம் பார்த்து விட்டு வந்து அசந்து தூங்கினார் ராமு. ஆனால் அசலாம்பாளுக்கு தூக்கம் வரவில்லை. எழுந்து நடந்தார் வீட்டில் இருந்த கனமான கட்டையை எடுத்ததார் ஒரே போடு அவ்வளவுதான் தூங்கிக்கொண்டிருந்த ராமு ரத்த வெள்ளத்தில் சுருண்டார்.

 தூக்கத்தில் இருந்து கண் விழிக்காமலேயே செத்துப்போனார். கணவன் துடிதுடித்து இறந்ததைப் பார்த்த அசலாம்பாள், கொஞ்சம் கூட அழவில்லை, மெதுவாக கதவைப் பூட்டிக்கொண்டு வெளியேறினார். கோவிலில் நள்ளிரவு நேரத்திலும் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கிருந்த சாமி முன்பாக சூடம் ஏற்றி கும்பிட்டார். கையெடுத்து கும்பிட்டவாறே... சாமி என்னோட 30 வருட பகையை முடிச்சிட்டேன் என்று கூறி கண்ணீர் விட்டார்.

 அசலாம்பாளின் நடவடிக்கை அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அருகில் இருந்த அசலாம்பாள் வீட்டிற்குப் போய் பார்த்தனர். அங்கே ரத்த வெள்ளத்தில் இருந்த ராமுவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கொலை குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

 சம்பவ இடத்திற்கு போலீசார் ராமுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அசலாம்பாளை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி மகளிர் சிறையில் அடைத்தனர். 
கடந்த சில நாட்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டது போலவே நடந்து கொண்ட அசலாம்பாள் கடைசியில் கணவனையே கொன்று தனது பகையை முடித்துள்ளார். அப்படி என்னதான் பகை என்று கடைசி வரைக்கும் அவர் சொல்லவேயில்லை,


இப்ப முதலிரவா முக்கியம்... மொய்க்கணக்கை தந்துட்டு.. மகனை தடுத்து நிறுத்திய தந்தைக்கு விபரீதம்!

"முதலிரவு ரொம்ப முக்கியமா.. முதல்ல மொய்க்கணக்கை குடுத்துட்டு போ" என்று முதலிரவுக்கு செல்ல இருந்த மகனை பெற்ற தந்தை தடுத்து நிறுத்திவிட்டார். அறையில் புதுப்பொண்டாட்டி காத்திருக்க.. அப்பாவை கட்டையால் அடித்து கொன்றே விட்டார் மகன்! அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் ஆதிச்சனூர் என்ற கிராமம் உள்ளது. 

இங்கு வசித்து வந்தவர் சண்முகம். இவரது மகன் இளமதிக்கு 2 நாளைக்கு முன்னாடி அதாவது 14-ம் தேதி தடபுடலாக கல்யாணம் ஆனது. 

இளமதிக்கு வயசு 23. அன்றைய தினமே யார் யார், எவ்வளவு மொய் செய்திருக்கிறார்கள் என்று அப்பாவும், மகனும் உட்கார்ந்து ஒரு நோட்டு எடுத்து குறித்து கொண்டு வந்தனர். ஆனால் கணக்கு இடித்தது.

மாப்பிள்ளை இளமதி 
 ஒவ்வொரு முறை கணக்கு சரியா என்று இருவருமே மாறி மாறி பார்த்தனர். அப்போதும் ஒருத்தருக்கும் போட்ட கணக்கு வேறாகவும், வந்த பணம் வேறாகவும் இருந்தது. இப்படியே நேரமாகிவிட்டது... முதலிரவுக்கு மாப்பிள்ளைக்கு டைம் ஆகிவிட்டது.

முக்கியமா இப்போ?  
அதனால் அப்பாவிடம், காலைல இந்த கணக்கை பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு, ரூமுக்குள் போக முயன்றார். உடனே அப்பாவுக்கு கோபமாகிவிட்டது. "இன்னும் இங்க கணக்கு முடியல.. முதலிரவு ரொம்ப முக்கியமா இப்போ.. கணக்கு சரிபண்ணி தந்துட்டு, அப்பறமா ரூமுக்குள்ள போ" என்றார் அப்பா.

கட்டையால் அடித்தார்
இது வாக்குவாதமாக மாறி.. தகராறாக உருவெடுத்து.. கடைசியில் கட்டையை தூக்கி அடிக்கும் அளவுக்கு போய்விட்டனர். முதலில் கட்டையை எடுத்து மகனை அடிக்க போனது அப்பாதான்.

 இதனால் மகனுக்கு இன்னும் கோபம் அதிகமாகி, அதே கட்டையை வாங்கி அப்பாவின் தலையில் மடார் என்று ஒரு போடு போட்டுள்ளார்.

இளமதி கைது 
இதில் அப்பா கீழே விழுந்தவர்தான்.. எழவே இல்லை. பதறி போன குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு போன் பண்ணி வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். 

ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள். இது சம்பந்தமாக குடும்பத்தார் உடையார்பாளையம் போலீசில் புகார் தரவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு மகன் இளமதியை கைது செய்து அழைத்து சென்றனர்! கடைசில கணக்கும் டேலி ஆகலை.. முதலிரவும் போச்சு.. அப்பாவும் செத்துப் போய்ட்டாரு.. இளமதிக்கு இது தேவையா!


பக்கா பிளான்.. மெல்ல மெல்ல லவட்டி.. அதிர வைத்த சுதா.. ஷாக்கில் ஐசரி வேலன் குடும்பம்

ஐசரி கணேஷ் தங்கை வீட்டில் வைரநகை திருட்டு சென்னை
 பலநாள் திருடி ஒருநாள் மாட்டிக்கிட்டார்.. மொத்தமா திருடினால் சந்தேகம் வரும் என்று.. பிளான் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டைய போட்டுள்ளார் வேலைக்காரி சுதா! காஸ்ட்லி வேலைக்காரி போல... அதான் வைரநகையாகவே திருடி இருக்கிறார்!

 பிரபல நடிகர் ஐசரி வேலனின் மகன்.. நடிகர், அரசியல்வாதி.. கல்வி நிறுவன ஓனர், நடிகர் சங்கத்தில் சம்பந்தப்பட்டவர், திரைப்பட தயாரிப்பாளர்.. என இத்தனை புகழுக்கும் சொந்தக்காரர்தான் ஐசரி கணேஷ்.

 இவரது சகோதரி மயிலாப்பூர் ரங்கா தெருவில் வசித்து வருகிறார். இவர் பெயர் மகாலட்சுமி கமலக்கண்ணன். இவர் வீட்டில் வேலை செய்து வந்தவர் பெயர் சுதா. வயசு 28 ஆகிறது.

சொகுசு வாழ்க்கை
கிட்டத்தட்ட 15 வருஷமாக, அதாவது 2003-ம் வருடம் முதல் இந்த வீட்டில்தான் வேலை பார்த்து வருகிறார். வீட்டு வேலையை பார்த்தாரோ இல்லையோ, வந்த கொஞ்ச நாளிலேயே நகைகளை திருட ஆரம்பித்தார்.

 மொத்தமாக திருடினால் டவுட் வந்துவிடும் என்பதால், இன்ஸ்ட்டால்மென்ட்டில் திருடி இருக்கிறார். திருடியதை கொண்டு போய் புருஷனிடம் தந்துவிடுவார். அந்த புருஷன் அதை அடகு வெச்சு, குடும்பமே சொகுசாக வாழ ஆரம்பித்துள்ளது.

15 வருட திருட்டு
 15 வருஷமாகவே இப்படி நடப்பதை வீட்டில் உள்ளவர்கள் சரியாக கவனிக்கவில்லை போல தெரிகிறது. சில நாட்களுக்கு முன்புதான் கவனித்திருக்கிறார்கள். சுதாவின் நடவடிக்கையில் ஒரு தினுசு மாற்றம் இருக்கிறதே என்று சந்தேகப்பட்டிருக்கிறார்கள். அதுக்கப்புறம்தான் அவரை நோட்டீஸ் பண்ண ஆரம்பித்தனர்.

நகைகள் காணவில்லை
 இப்படித்தான் கடந்த 12-ம் தேதி வழக்கம்போல வேலைக்கு வந்த சுதா, வழக்கம்போல அபேஸில் ஈடுபட்டார். நேராக பீரோவை திறந்து சில நகைகளை கொண்டு போய்விட்டார். அவர் போனபிறகு, பீரோவை திறந்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்தபோதுதான், ஏகப்பட்ட நகைகள் மிஸ்ஸிங்.

விசாரணை
 ஷாக் ஆன மகாலட்சுமி, சுதாவை கூப்பிட்டு இதைப்பற்றி கேட்டும், சுதா அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நடித்தார். உடனே மகாலட்சுமி அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததன்பேரில் விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் சுதா எல்லா விஷயத்தையும் புட்டு புட்டு வைத்தார்.

பறிமுதல்
இதுவரைக்கும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி உள்ளாராம். இதில் பெரும்பாலும் வைரம்தான். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இந்த காரியத்தில் இறங்கி விட்டாராம். 

கணவர் பெயர் அன்பு. இவரிடம் நகையை விற்று, விற்ற பணத்தை வட்டிக்கு விட்டு.. இந்த ஜோடி சொகுசாக வாழ்ந்து வந்திருக்கிறது. இதையடுத்து சுதாவை போலீசார் கைது செய்ததுடன், 18 சவரன் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்