Run World Media: 06/28/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 28, 2019

இருசக்கர வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட கர்ப்பிணி- மயங்கிய நிலையில் அனுமதி

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கர்ப்பிணியான சாந்தி தேவி(30). இவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர்.ஆம்புலன்ஸ் சேவைக்கு லைன் கிடைக்கவில்லை. அதற்குள் சாந்தி, மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனைக்கு செல்ல 10 கிமீ பயணம் செய்ய வேண்டும். சாந்தியின் உடல்நிலை கருதி, அவரது கணவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் சாந்தியை ஏற்றினார்.

10கிமீ வாகனத்திலேயே சென்று சிஎச்சி எனும் மருத்துவமனையை அடைந்தனர். ஆனால், அங்கு சாந்தியை 27 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இதனையடுத்து சிஎம்சி நிர்வாகம் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது. பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சாந்தி தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து சாந்தி தேவியின் கணவர் கமல் கூறுகையில், ‘நாங்கள் ஆம்புலன்ஸ் சேவையைப் பெற துடித்தோம். ஆனால், முடியவில்லை.

108 எண்ணுக்கும் முயற்சித்தோம். எவ்வித பலனும் இல்லை. எனவேதான் வேறு வழி இன்றி இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றோம்’ என கூறினார்.

சாந்தி தேவி வசிக்கும் கிராமத்தினை அந்த தொகுதி  எம்பி மாதிரி கிராமமாக தத்தெடுத்தார். ஆனால், இங்கு ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்த ‘கவசம்’ எதுக்கு கண்டுபிடிச்சிருக்காங்கனே தெரியல.. ஆனாலும் மக்கள் வாங்கி யூஸ் பண்றாங்கப்பா!

முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் களையாமல், ஷவரில் குளிக்கும் வகையிலான குளியல் கவசம் ஒன்று பிரபலமாகி வருகிறது. நம்ம ஊரில் அடிக்கும் வெளியிலுக்கு ஷவரில் குளிப்பது ஒரு அலாதி சுகம். ஆனால் சென்னையில் உள்ள தண்ணீர் பஞ்சத்தில், ஷவரில் குளிப்பதெல்லாம் எட்டாக்கனியாக மாறி வருகிறது.

 ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு குடும்பமே குளிக்க வேண்டிய நிலை தான் இங்கு நிலவுகிறது. ஆனால் ஷவரில் குளிப்பதற்காக ஒரு பாதுகாப்பு கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு நிறுவனம். குளிப்பதற்கு எதற்கு பாதுகாப்பு கவசம் எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. அது எதற்கு என்றால் முகத்தில் போட்டிருக்கும் கேக்கப் களையாமல் பார்த்துக்கொள்கிறது இந்த கவசம்.

ஹெல்மெட் மாடல்: 
நம்ம ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ஹெல்மட் போல் தான் இருக்கிறது இந்த குளியல் கவசம். அதை லைட்டாக பட்டி டிங்கரிங் செய்து இதனை உருவாக்கியிருக்கிறார்கள். பிளாஸ்டிக்கினால் ஆன இந்த கவசத்தின் மேல் பகுதியில் ஒரு வில்க்ரோ டேப் இருக்கிறது. முகத்தில் கவசத்தை அணிந்து, அந்த டேப்பை இறுக்க ஒட்டிவிட்டால் முகல் நனையாமல் குளிக்கமால்.


நல்ல வரவேற்பு: 
ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த குளியல் கவசத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பொருளை அறிமுகப்படுத்திய நிறுவனத்தை சிலாகித்து வருகின்றனர் நெட்டிசன்கள். சிலர் எதற்கு இந்த குளியல் கவசம் எனப் புரியாமல் தலையைச் சொரிந்து வருகின்றனர்.

பெரிய சந்தேகம் பாஸ்: 
 மக்களே நமக்கும் கூட ஒரு சந்தேகம் இருக்கிறது. அது, ‘குளிக்கிறதே உடம்பில் உள்ள அழுக்கு போக வேண்டும் என்பதற்காக தான். பல நாட்கள் குளிக்காமல் இருப்பவர்கள் கூட தினமும் முகம் கழுவுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் முகத்தில் தண்ணீர் படாமல் குளிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.


வடிவேலு டயலாக்:
என்ன விஞ்ஞானமோ, விநோதமோ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா. அதற்கும் மேல் அதனை வாங்கியும் சிலர் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்களை என்னவென்று சொல்வது. ‘நடுராத்திரி நாங்க ஏண்டா சுடுகாட்டுக்குப் போறோம்' என்ற வடிவேலுவின் டயலாக் மாதிரி, மேக்கப் போட்டுட்டு நாங்க ஏண்டா குளிக்கப் போறோம் என்கிறது நம்ம மைண்ட்வாய்ஸ்.

குடும்ப பிரச்னைக்கு தற்கொலை முயற்சி: வாலிபரை காப்பாற்றிய செல்பி.!

செல்பியால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை நாம் கேள்விபட்டியிருக்கின்றோம். செல்போன் வழியாக எமன் நுழைந்து பல உயிர்களை பாச கயிறு போல செல்பியை வீசி (எடுக்க வைத்து) பலரின் உயிரை பிரித்து விட்டதாக கூறியுள்ளனர்.


பலரின் வாழ்கையே ஒரு செல்பியால், அடுத்த நெடியே பரிதாமாக பறிபேனானதும் உண்டு. நாம் எதார்த்தமாக வாழ்கையில் புகைப்படங்களை நின்று ரசிக்கும் வகையில் எடுத்த போது, அடுத்த நெடியே கூற்றுவன் கூவி வந்து அவனையும் தூக்கி சென்றுள்ளான்.
 குடும்ப பிரச்னையால் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவதாக செல்பி எடுத்து அனுப்பினார். இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் இவர் காப்பாற்றப்பட்ட விசிஷயம் தான் தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.செல்பியால் பல உயிர்பறிபோனது: 
 பலர் செல்பி எடுக்க மலையேற்றங்களில் நின்று எடுத்தனர். அப்போது, எதிர்பாரதவிதமாக தடுக்க விழுந்து இறந்ததும் உண்டும். மேலும், சிலர் தண்டவாளத்தின் அருகேவும் ரயில் செல்லும் முன் செல்பி எடுக்க முயன்ற போது, அவர்களின் உயிர் அடுத்த நொடியே பஸ்பம் ஆனதும் பார்த்து இருப்போம். பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும், செல்பியால் குடும்ப உயிரிழந்து சோகத்தில் முழ்கியதையும் பார்த்து இருக்கின்றோம்.உயிரை காப்பாற்றிய செல்பி:
ஓரே ஒரு செல்பியால் பல்வேறு சம்பவங்களில் பலரின் உயிர்கள் பரிபோனதும் உண்டு என்பது இருக்கட்டும். தற்போது குடும் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள சென்ற ஒருவர் எடுத்த செல்பி உயிரை காப்பாற்றியும் உள்ளது. இது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்துள்ளது கேரளாவில் தான்.
கேரளாவை சேர்ந்த வாலிபர்:
கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த வாலிபர் மணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் இவர் மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வெறுத்து போன மணி, தன் வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தார். நேராக சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகே வந்தார்.


தற்கொலைக்கு முன் செல்பி: 
 யாருமற்ற இடத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு, வாழ்கையே ரொம்ப வெப்பா இருக்கு நண்பர்களே. வாழ்ந்தது போதும், அதனால் தற்கொலை பண்ணப்போறேன் என்று பேசியபடி செல்பி எடுத்தார். அதை தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்ட தண்டவாளத்தில் படுத்துவிட்டார்.
செல்பி வாட்ஸ் ஆப் குரூப்களில் சேரானது: 
 இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணி எங்கு தண்டவாளத்தில் படுத்து கிடக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயன்றனர். அதற்காக செல்பியை உடனடியாக பல வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட குரூப்களில் சேர் செய்தனர். அப்போது அவர் எடுத்த செல்பியில் ஒரு மைல் கல் காணப்பட்டது.82 என்ற தண்டவாள எண்:
அப்போது அவர் எடுத்த செல்பியில் 82 என்ற எண் தெரிந்தது. அதை வைத்து ரயில்வே அதிகாரிகளை கொண்டு விசாரித்தனர். அது சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகில் உள்ள இடம் என தெரியவந்தது. உடனடியாக அங்கியிருந்த கேட் கீப்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியை சேந்த சிலரை அழைத்துக் கொண்டு சிலர் சென்றனர்.
போலீசார் அறிவுரை:
ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக் கொண்டிருந்த மணியை போலீசார் மீட்டனர். குடும்ப பிரச்னைக்கு தற்கொலை தீர்வாக என்று போலீசார் நீண்ட நேரம் கவுன்சிலிங் கொடுத்து வழக்குபதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.

Read more at: https://tamil.gizbot.com/news/selfie-helps-thwart-kerala-youth-suicide-family-issue/articlecontent-pf160143-022367.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

பாத்ரூம் பக்கெட்டில் ஷன்மதி... 4 வயசு குழந்தையை நாசம் செய்த 60 வயசு தாத்தா!

முறுக்கு மீசையுடன், கம்பீரமாக நிற்கிறாரே.. இவர்தான் 4 வயசு குழந்தையை நாசம் செய்து பாத்ரூம் பக்கெட்டில் பிணமாக போட்டவர்.. பலியான குழந்தையின் பெரியப்பா..

அதிலும் இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பது வெட்கக்கேடு! சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் அந்தோணி நகரை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு கார்முகிலன் என்ற 7 வயது மகனும் ,ஷன்மதி என்ற 4 வயது மகளும் உள்ளனர். 
 கார்முகிலன் 2-ம் கிளாஸ் படிக்கிறான். அவனை டியூஷனில் விடுவதற்காக செந்தமிழ்ச்செல்வி நேற்று கிளம்பி சென்றுள்ளார். வீட்டில் ஷன்மதியை தனியாக இருந்தாள். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து பார்த்தால் ஷன்மதியை காணவில்லை.


பாத்ரூம் பக்கெட்  
 பதறியடித்து கொண்டு எல்லா இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதனால் திருமுல்லைவாயில் போலீசில் புகார் கொடுக்க ஓடினார். திரும்பவும் வந்து அக்கம்பக்கம் வீடுகளில் நுழைந்து தேடினார். அவருடன் பொதுமக்களும் சேர்ந்து தேடினார்கள். 
ஒருசிலர் செந்தமிழ்செல்வி வீட்டுக்கே இன்னொரு முறை வந்து தேடி பார்க்கலாம் என்று பார்த்தபோதுதான, ஷன்மதி, வீட்டின் பாத்ரூமில் உள்ள பக்கெட்டில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாள்.


பிறப்பு உறுப்பு தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்தனர். அப்போது குழந்தைக்கு பிறப்பு உறுப்பில் காயம் இருந்தது. முதல் சந்தேகமே பக்கத்து வீட்டுக்காரர் மீதுதான் விழுந்தது. அவர் செந்தமிழ்செல்வியின் சொந்தக்காரர்தானாம். பெயர் மீனாட்சி சுந்தரம், ஓய்வுபெற்ற ராணுவ வீரர். வயசு 60!


கம்மல், தலைமுடி
முதலில் சந்தேகத்தின்பேரில்தான் அவரது வீட்டுக்குள் சென்று போலீசார் சோதனையிட்டனர். அப்போது படுக்கை அறையில் குழந்தையின் உடைந்த கம்மல், தலைமுடி கிடந்தது. அதேபோல மீனாட்சி சுந்தரத்தின் உடையிலும் ரத்தக்கறை இருந்தது. 

அவரது வீட்டின் பாத்ரூமில் பினாயில் வாடையும் வந்தது. இப்போது போலீசார் தங்கள் பாணியில் வேலையை காட்டினர். கடைசியில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டார்.

வா.. விளையாடலாம்
போலீசாரிடம் சொல்லும்போது, "வீட்டில் குழந்தை தனியாக இருந்தது. வா.. விளையாடலாம் என்று என் வீட்டிற்கு கூட்டி சென்றேன். என் படுக்கை அறையில் வைத்து மூர்க்கத்தனமாக பலாத்காரம் செய்தேன். இதில் குழந்தை இறந்துவிட்டாள். பயந்து போன நான், குழந்தையின் சடலத்தை பாத்ரூமுக்கு எடுத்துச்சென்று கோணிப்பையில் கட்டி வைத்தேன்" என்றார்.


தாத்தா.. தாத்தா 
இதனை அடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட கொடுமை, இந்த மீனாட்சி சுந்தரம் பெரியப்பா முறை என்றாலும், எப்பவுமே தாத்தா, தாத்தா என்றுதான் கூப்பிட்டு கொண்டு ஆசை ஆசையாக ஓடிவருவாளாம் குழந்தை!


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்