Run World Media: 06/29/19

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 29, 2019

உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. கொந்தளித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

"ம்மா.. என் சாப்பாட்டுல வண்டி இருந்துச்சு.. புழு நெளிந்துச்சும்மா" என்று பிள்ளைகள் சொன்னதை கேட்டு பெற்றோர்கள் கொதித்து போய்விட்டனர். "உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா..

அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு எளக்காரமா?" என்று பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்ட கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பஜாரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.


இங்கு சுற்றுவட்டார பகுதிகளான சிவசக்தி நகர், பாரதியார் புதூர், குந்தா கோத்தகிரி, முள்ளிகூர், ஆடா உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவார்கள். இங்கு படி
க்கும் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஆவேசம்
 உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு எளக்காரமா?" என்றனர். இதையடுத்து அதிகாரிகள் இதில் தலையிட்டு சமரசம் பேசி, இது சம்பந்தமான கண்டிப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்கள்.


4-வது மாடியிலிருந்து தவறிய குழந்தை: பின்பு என்ன நடந்தது, நீங்களே பாருங்கள்.!

நான்கவது மாடியிலிருந்து தவறி விழ இருந்த குழந்தையை மிகவும் சமயோசிதமாக காப்பாற்றிய தாயக்கு இணையதளத்தில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அதன்படி கொலம்பியா மாகணத்தில் மெடலின் என்ற பகுதியில் லிப்டில் இருந்து அம்மாவும் சிறுவனும் வந்தனர், நான்கவது மாடிக்கு வந்த சில நொடிகளில் சிறுவன் பால்கனியில் உள்ள கம்பியின் பக்கம் சென்று விடுகிறான்.


பின்பு கம்பியை பிடித்தபடி பார்த்த சிறுவனம் தவறி விழ தாய் உடனடியாக சுதாரித்து சிறுவனின் கால்களை பிடித்து கொள்ள குழந்தை காயம் ஏதுமின்றி தப்பித்து விட்டான். மேலும் தாய் மெதுவாக அந்த குழந்தையை இழுத்து காப்பிற்றி விட்டார்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்தி சிசிடிவி காட்சியினை பலரும் பகிர்ந்து தாயின் சமயோசிதமான செயலை பாரட்டியுள்ளனர். சிலர் அம்மாவினால் மட்டும் தான் நொடியில் செயல்படமுடியும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தாய் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது தான் துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிய குழந்தை விளையாட்டாக பால்கனியை எட்டிப்பார்த்தது.


 பின்பு யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென குழந்தை தவறி கீழே விழுச் சென்ற நொடியில், சிறிதும் தாமதிக்காமல் தாய் பாய்ந்து குழந்தையின் காலைப்பிடித்து காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.உலகையே கிடுகிடுக்க வைத்த சிறுவன்: வைரஸ் ஏவி ஸ்மார்ட் டிவி, மோடம் பாதிப்பு,!

14 வயதான சிறுவன் ஒருவன் தற்போது ஒரு வைரஸ்வை
உருவாக்கியுள்ளான். இதன் தற்போது இந்த உருவாக்கியுள்ள வைரஸ்சை ஏவியுள்ளதால், தற்போது உலகம் முழுக்கவும் பரவியுள்ளது.

இதனால் உலகம் முழுக்க உள்ள ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மோடம்கள் கடும்பாதிப்பில் சிக்கியுள்ளன. இணையம் மூலம் செயல்படும் பொருட்களில் வேகமாக பரவி தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றது.


கணினி வைரஸ் என்றால்: 
 கணினி வைரஸ்கள் என்பன, சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணினி செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணினியின் செயற்பாட்டையோ முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கக்கூடிய கணினி ப்ரோக்ராம் ஆகும்.


இவற்றிக்கு இருக்கும் ஒரு முக்கிய பண்பு இவற்றால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணினிகளுக்கு பரவிச்செல்ல முடியும்.ஸ்மார்டிவி, மோடம்களுக்கு பரவும்: 
 ப்ரோக்ராம்கள், கோப்புகளில் தன்னையும் இணைத்துக்கொள்ளும், இப்படி வைரஸ் இணைந்துகொண்ட ப்ரோக்ராம்கள், கோப்புக்களை இன்னுமொரு கணனிக்கு எடுத்துச் செல்லும்போது அந்தக் கணணியிலும் உள்ள கோப்புக்களில் மீண்டும் மீண்டும் பதிந்துகொள்ளும்.


இவை கணனிக்கு வந்தபின், அதில் இருக்கும் கோப்புகளை அழிப்பது, செயல்முறைமையின் சில பகுதிகளை செயல்படாமல் தடுப்பது. ஹர்ட்டிஸ்க்களை செயலிழக்க, கணணிகளை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது என்று பல தலையிடிகளை உருவாகலாம். தற்போது, ஸ்மார்டிவி, மோடம் உள்ளிட்டவைகளுக்கும் பரவும்.
இணையம் மூலம் செயல்படும் வைரஸ்:
இந்த வைரஸ், இணையம் மூலம் செயல்படும் பொருட்களின் ஸ்டோரேஜ் மற்றும் அதன் நெட்வோர்க் கட்டமைப்பை முற்றிலுமாக அழித்து அதனை செயல் இழக்க செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை 14 வயதாகும் சிறுவன் உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைட் லீபன் என்னும் சிறுவன்: 
 லைட் லீஃபன் (Light Leafon) என்று அறிப்படும் அந்த சிறுவன், பிரிக்கர்போட்டை மையமாக வைத்து தான் சிலெக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை இன்னும் பலம் வாய்ந்ததாக மாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.

பிஎஸ்என்எல் மோடம்கள் பாதிப்பு:  
2017ஆம் ஆண்டு பிரிக்கர்போட் (BrickerBot) என்ற வைரசால், கிட்டத்தட்ட 60 ஆயிரம் பிஎஸ்என்எல் மோடம்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பிரிக்கர்போட்டை போன்றே சிலெக்ஸ் (Silex) என்ற வைரஸ், சர்வதேச அளவில் இணையம் மூலம் செயல்படும் பொருட்களில் வேகமாக பரவி வருகிறது.


சிலெக்ஸ் வைரஸ்: 
இந்த தாக்குதல் வேகமாக பரவி வருவதால், நமது வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவி மற்றும் மோடம்களை எவ்வாறு பாதுகாப்பது என்று பொது மக்களும் சிந்திக்க துவங்கியுள்ளனர். மேலும், இந்தியாவுக்குள் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்