Run World Media: 07/07/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, July 7, 2019

இலங்கையில் 25 வருடங்களாக பிச்சை எடுக்கும் 65 வயது பெண்ணொருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 3 ஆடம்பர வீடுகள்,வங்கியில் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் | Run World Media

இலங்கையில் 25 வருடங்களாக யாசகம் பெற்ற பெண்ணொருவரின் சொத்து மதிப்பு தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. கம்பஹா நகரிலுள்ள ரயில் நிலையங்களில் 25 வருடங்களாக யாசகம் பெற்று வந்த பெண்ணுக்கு பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

65 வயது பெண்ணுக்கு சொந்தமாக 3 வீடுகள் உள்ளதாகவும், அவரது வங்கிக் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த யாசகம் பெறும் பெண் ரயில்வே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளது.


யாசகம் பெறுவது தனது மகள்களுக்கும் தெரியும் என்றும், அவரது மருமகன்கள் நல்ல வேலைகளில் இருப்பதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். வயோதிப பெண் கைது செய்யப்பட்ட நிலையில் மகள்களில் ஒருவர் வந்து அவரை பார்த்துச் சென்றதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


கம்பஹா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் யாசம் பெறும் அவர், நாள் ஒன்றுக்கு சுமார் 4000 ரூபாவும் மாதத்திற்கு 150,000 ரூபா பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 25 வருடங்களாக யாசகம் பெற்ற பணத்தில் 3 வீடுகளையும் கட்டியதாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் 2 வீடுகளை அவரது மகள்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மூன்றாவது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ரூபா பணம் இருப்பதும், தெரியவந்துள்ளது.


23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங | Run World Media

ரஷ்யாவில் வடக்கு ஆஸ்டியா என்ற பகுதியில் எஸீட்டா கோபீவா என்ற பெண்ணுக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி வந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து அவர் மருத்துவர்களிடம் சிகி்ச்சை பெற்றார். முடிவில் என்ன நடந்தது தெரியுமா?

23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங்க... அந்த கொடுமையைப் பற்றித் தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.


23 ஆண்டுகள் வேதனை 
 எலீட்டா கோபீவாவுக்கு 1996 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அவ்வப்போது அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டது. வலி வரும்போதெல்லாம் எலீட்டா மருத்துவர்களிடம் செல்வார்.


அவர்களும் வலி நிவாரணி மருந்துகளை அளிப்பர். அப்போதைக்கு வலி குறையுமே தவிர முற்றிலும் நிற்காது. மீண்டும் வலி வரும். எலீட்டா மருத்துவமனைக்குச் செல்வார். அவர் வாழ்க்கையில் இது வாடிக்கையாகி விட்டது.ஈரலில் பிரச்னையா?
ஈரலில் நோய் ஏற்பட்டுள்ளதால் எலீட்டாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்திருக்கலாம் என்ற நோக்கிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தரும் மருந்துகள் வலியை மரத்துப்போகச் செய்கின்றன; குணப்படுத்தவில்லை என்று எலீட்டா தெரிவித்தார். இறுதியாக ஒரு மருத்துவர் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தார்.அதிர்ச்சியளித்த எக்ஸ்ரே 
 எலீட்டாவுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப இயலவில்லை. எலீட்டாவின் வயிற்றுக்குள் கத்தரி ஒன்று இருந்தது. எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் எலீட்டா கத்தரிகோலை தவறுதலாக எடுத்துச் சென்றிருக்கூடும் என்று நினைத்தார். ஆனால், உண்மையில் வயிற்றினுள்ளேதான் கத்தரி இருந்தது.
யார் வைத்தது?
வயிற்றினுள் கத்தரிகோல் எப்படி வந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கேட்டபோது எலீ்ட்டாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. தனக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறினார்.அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கத்தரியை மறந்துபோய் எலீட்டாவின் வயிற்றுக்குள் வைத்துவிட்டது தெரிய வந்தது. 23 ஆண்டுகள் தேவையில்லாமல் வேதனைப்பட்டதற்கு எலீட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் சம்மந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


மருத்துவர்களின் மறதி 
 இது குறித்து செய்யப்பட்ட ஓர் ஆய்வில் 30 அறுவை சிகிச்சைக்கு 1 என்ற விகிதத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை உபகரணத்தையோ, கையுறையையோ நோயாளியின் உடலினுள் தவறுதலாய் விட்டு விடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையெல்லாமா மறப்பீங்க டாக்டர்?
Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்