Run World Media: 07/09/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, July 9, 2019

மனைவியுடன் சண்டை.. 7 வயசு மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் அநியாயமாக 7 வயசு மகளை அடித்தே கொன்றுவிட்டார் கொடூர குடிகார தந்தை! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை பூத்தோட்டதெருவை சேர்ந்தவர் கைலாசம். இவருக்கு திருமணமாகி இவருக்கு மகள்கள் உள்ளனர்.


37 வயதாகிறது. பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீலாவதி. இவர்களுக்கு 13 வயதில் ஐஸ்வர்யா, 7 வயதில் சுகிர்தா என்ற மகள்கள் உள்ளன. சுகிர்தா சிங்கையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.


குடிபோதை
கைலாசத்திற்கு தினமும் குடிக்காவிட்டால் பொழுது போகாது. அதிலும் குடித்துவிட்டு மனைவியையும், 2 குழந்தைகளையும் வெளுத்து விட்டுதான் தூங்கவே போவார். இப்படியேதான் வழக்கமாக வைத்திருந்து இருக்கிறார்.சுருண்டு விழுந்தாள் 
 இப்படித்தான் நேற்று இரவும் தண்ணி அடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பா-அம்மா சண்டை போடுவதை பார்த்து மிரண்ட குழந்தை சுகிர்தா அவர்கள் நடுவே சென்றாள். இதில் மண்டை நிறைய போதையிலும், சண்டை போட்ட ஆத்திரத்திலும் இருந்த கைலாசம், சுகிர்தாவை பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டார். இதில் சுகிர்தா அங்கேயே சுருண்டு விழுந்து மயக்கமாகி விட்டாள்.
உயிர் பிரிந்தது 
இதனைகண்டு பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே சுகிர்தா இறந்துவிட்டாள். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்துவிட்டால், பிரச்சனை ஏற்படும் என்பதை அறிந்த தம்பதி கொலையை மறைக்க முடிவு செய்தனர்


பின்னர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடி அப்பகுதியினரை நம்ப வைத்தனர். மேலும் இறுதிச் சடங்கு செய்வதற்கும் முயற்சி செய்தனர்.கைது 
 ஆனால் சிவகங்கை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.
தனி ஒருவன் நினைத்து விட்டால்.. 100 ஏக்கர் பரப்பளவில் ஓங்கி உயர்ந்த காடு.. சபாஷ் சரவணன்!

புதுச்சேரி அருகே 100 ஏக்கர் பரப்பளவில் தனி ஒருவன் உருவாக்கிய காடு மக்களின் விழிகளை விரியச் செய்துள்ளது. தற்போது புதுச்சேரி மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும் அந்த தனி ஒருவன் உருவாக்கிய காடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. 
அது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையடிவார பகுதியில் வளையாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். 
இவர் இயற்கை மீது கொண்டிருந்த அதீத காதலாலும், மரங்கள் மற்றும் வனத்தை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1989 ஆம் ஆண்டு புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை இணைத்துகொண்டு சமூக சேவைகளையும், மரங்களை வளர்க்கும் பணிகளையும் செய்து வந்தார்.

இயற்கையின் மீது சரவணன் கொண்டிருந்த அளவுகடந்த காதலை பார்த்த ஆரோவில் நிர்வாகத்தினர் புதுச்சேரியின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஊசுட்டேரி அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் வெட்டாந்தரையாகவும், செம்மண் மேடாகவும், மரங்களற்றும் இருந்த 100 ஏக்கர் ஆரோவில் நிலத்தை சரவணனிடம் காடுகளை உருவாக்குவதற்காக ஒப்படைத்தனர். 

மேலும் மரங்களே இல்லாத வெட்டாந்தரையாக இருந்த அந்த நிலத்தில் சரவணனுக்கு ஒரு குடில் மட்டும் அமைத்து கொடுத்தனர் ஆரோவில் நிர்வாகத்தினர். பிறகு அந்த இடத்தில் உலர் வெப்ப மண்டல காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சரவணன்.

மண் வளம்
 முதலாவதாக அந்த நிலத்தில் மண் வளத்தை வளப்படுத்த மழைநீரை வீணாக்காமல் சேமிக்க முடிவு செய்த அவர், அங்கு வரப்புகள் அமைத்து மழைநீர் வெளியே செல்லாமல், மழைநீர் பூமிக்கடியில் செல்லும்படி செய்தார். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. மண்ணின் வளமும் சிறப்பானது.

 பிறகு உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் 100 ஏக்கர் நிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் சரவணனுக்கு நல்ல பலன் கிடைத்தது. சரவணனின் 25 ஆண்டு கால கடின உழைப்பால் தற்போது மரம், செடி, கொடிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்ந்து, பச்சை போர்வை போர்த்திய போல பரந்து விரிந்து காட்சியளிக்கிறது ஆரண்யா வனம்.

ஆரண்யா காடு
பரபரப்பான நகர வாழ்க்கைக்கு விடை கொடுத்து சற்று இயற்கையோடு உறவாடிவிட்டு வரவேண்டும் என்று நினைப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக தற்போது இந்த ஆரண்யா காடு இருந்து வருகிறது. ஆரண்யாவிற்குள் நுழையும் போதே அங்கு துள்ளி விளையாடும் மயில்கள் நம்மை வரவேற்கின்றனர்.

 வனத்திற்கு உள்ளே போக போக அறிதாகவிட்ட குயில்களின் ஓசைகளும், பறவைகளின் இனிமையான சத்தங்களும் நம் செவிகளுக்கு விருந்து படைக்கின்றன. மேலும் அங்குள்ள பல ஆயிரக்கணக்கான மூலிகை செடிகளின் வாசம் நம் உடலை புத்துணர்ச்சி அடைய செய்கிறது.

சரவணன் உருவாக்கிய வனம் 
 தற்போது சரவணன் உருவாக்கிய இந்த ஆரண்யா வனத்தில், செம்மரம், தேக்கு, மா, பலா, கருங்காலி, வேங்கை உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட மர வகைகளும், மாங்குயில், மயில், பச்சப்புறா, கொண்டாலத்தி, அமட்டகத்தி உள்ளிட்ட 240 பறவை வகைகளும் உள்ளன. 


அதுமட்டுமல்லாமல் மான், முல்லம்பன்றி, காட்டுப்பன்றி, தேவாங்கு, உடும்பு, எறும்புதிண்ணி, நட்சத்திர ஆமை உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட வன விலங்குகள் மற்றும் பல்வேறு வகையான பாம்பு இனங்களும் இங்கு வசித்து வருகின்றன.


இலவச அனுமதி
ஆரண்யாவிற்கு செல்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. நீங்கள் இயற்கை நேசிப்பராகவும், இயற்கையைப் பற்றியும், வனத்தை பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் ஆரண்யா உங்களுக்கும் சொந்த என்கிறார் சரணவனன். சரவணன் உருவாக்கிய ஆரண்யா வனத்தை காண்பதற்காகவும், ஆரண்யாவில் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கும் பெருமளவில் பலரும் வருகின்றனர்.

வெளி மாநிலங்களிலிருந்து 
 இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தாவரவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், பறவை ஆர்வலர்கள், வன உயிரின ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 

அவர்களுக்கு மரம் மற்றும் காடுகள் வளர்ப்பது குறித்த பயிற்சியையும், சூழல் கல்வி, பல்லுயிர் பெருக்கம் குறித்த பயிற்சியை அளித்து வருகிறார் சரவணன். சிலர் ஆரண்யாவிலேயே பல நாட்கள் தங்கியிருந்து காடுகள் குறித்த ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


சாதனை 
 மேலும் தனி ஒருவனாக ஆரண்யாவை உருவாக்கிய சரவணன் தன் பணி நிறைவடைந்ததாக கருதி காட்டைவிட்டு வெளியேறிவிடவில்லை. தன் மனைவி மற்றும் மகளுடன் அந்த காட்டிலேயே ஒரு வீட்டை கட்டி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்.

மேலும் சரவணனின் இத்தகைய சேவைகளை பாரட்டி தமிழக அரசு சார்பில் விழுப்புரம் மாவட்ட கௌரவ வன உயிரியல் பதவியை கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்ட வளர்ப்பு யானைகளின் பராமரிப்பு குழுவின் உறுப்பினராகவும் சரவணன் இருந்து வருகிறார். 

தூய்மையான காற்று 
தற்போது புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக பகுதி மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது என்றால் அதற்கு சரவணன் உருவாக்கியுள்ள இந்த ஆரண்யா வனம் ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். மேலும் ஆரண்யா வனத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டமும் பெருமளவு பாதுகாக்கப்படுகிறது.


சென்னைக்கும் தேவை 
 சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் இச்சூழலில், சரவணனை போன்று 100 ஏக்கரில் காட்டை வளர்க்க முடியாவிட்டாலும், ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை ஒரு மரக்கன்றையாவது நட்டு பராமரித்து வந்தால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுவது மட்டுமின்றி, தண்ணீர் பஞ்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதில் எவ்வித மாற்றுகருத்தில்லை.

 சரவணன் போன்ற இயற்கை பாதுகாவலர்களை பாராட்டுவதோடு மட்டுமின்றி, இனி வரும் காலங்களில் நாமும் மரம் வளர்ப்போமென உறுதியேற்போம். இயற்கையை பாதுகாப்போம்.


குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்த பெற்றோர்... காரணத்த கேட்டா கொஞ்சம் ஷாக் ஆகிடுவீங்க...

குழந்தைக்குப் பெயரிடுவது பெரிய விஷயமாங்க? நிச்சயமாக! அதிலும் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே விதமான பெயர் ரசனை இல்லையென்றால் பிறந்த குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுப்பது பெரிய சவாலாக மாறி விடும்.அதிலும் தனித்துவமான பெயராக இருக்கவேண்டும்; பொதுவான பெயர் வேண்டாம் என்றெல்லாம் தேட ஆரம்பித்தால் அவ்வளவுதான்! குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்த பெற்றோர்... காரணத்த கேட்டா கொஞ்சம் ஷாக் ஆகிடுவீங்க...

 தலைப்புச் செய்தியான தம்பதி

 இந்தோனேஷியாவில் எல்லா கரின் (வயது 27), ஆன்டி சாஹ்யா சாபுத்ரா (வயது 31) என்ற தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.பையனுக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவாகாததால் 'குழந்தை பையன்' (பேபி பாய்) என்றே அழைத்து வந்துள்ளனர். அவனுக்கு அவன் தந்தை ஆன்டி சாஹ்யா பெயர் ஒன்று வைத்தார் பாருங்கள்! உலகமே அவர்களை திரும்பி பார்க்கும்படியான பெயர் அது.


ஆன்டி சாஹ்யா, எல்லா கரின் தம்பதியர் பரபரப்பாக செய்திகளில் இடம் பிடித்தனர். தொழில் நுட்ப பெயர் மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலிருந்தே ஆன்டி சாஹ்யா தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தார்.


தொழில்நுட்பம் சார்ந்த பெயராக இருக்கவேண்டும்

 என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. விண்டோஸ், ஐபோன், மைக்ரோசாஃப்ட், ஐஓஎஸ் என்ற பெயர்களெல்லாம் கூட பரிசீலனையில் இருந்தது. அவர்களது பாரம்பரியத்தை ஒட்டிய பெயராக அல்பர் டிர்கந்தார புத்ரா என்ற பெயரைக் கூட யோசித்துப் பார்த்தார் ஆன்டி சாஹ்யா. ஆனால், அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. மூன்று மாத காத்திருப்பு கடைசியாக ஆன்டி சாஹ்யா, தங்கள் மகனுக்கு பெயர் ஒன்றை தெரிவு செய்தார். அவர் தேர்ந்தெடுத்த பெயர் குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. ஆன்டியின் மனைவி எல்லா கரினுக்கும் அப்பெயர் பிடிக்கவில்லை.

ஆனால், ஆன்டி பொறுமையாக மூன்று மாதங்கள் அப்பெயரின் தனித்துவத்தை விளக்கினார். அதன்பின்னர் அவர் மனைவி தங்கள் பையனுக்கு அப்பெயரை வைப்பதற்கு ஒத்துக்கொண்டார். உதவியின் மறுபெயர் ஆன்டி, தங்கள் மகனுக்கு 'கூகுள்' என்று பெயரிட்டுள்ளார்.


 கூகுளை போல தங்கள் மகனும் எல்லோருக்கும் உதவியாக இருக்கவேண்டும்

என்று பெற்றோர் விரும்பி அப்பெயரை வைத்துள்ளனராம். மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக தங்கள் மகன் வாழவேண்டும் என்றும் அதற்காகவே இப்பெயரிட்டோம் என்றும் பெற்றோர் கூறுகின்றனர். ஆகவே, அப்பையனின் பெயர் 'கூகுள்' என்பது மட்டுமே. பின்னால் எந்தப் பெயரை சேர்த்தாலும் இப்பெயரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடும் என்பதால், துணை பெயர் எதையும் சேர்க்கவில்லை என்று ஆன்டி தெரிவித்துள்ளார்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்