காஷ்மீர் மாநிலத்தின், கிஷ்த்வார் மாவட்டத்தில், பொதுமக்கள், ராணுவ வீரர்களை போன்ற சீருடை அணிய வேண்டாம் என, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ராணுவ சீருடை வடிவிலான ஆடைகள் கடைகளில் விற்கப்படுவதால் அவற்றை அணிந்து பாதுகாப்பான இடங்களிலும் ஊடுருவி தாக்குதல் நடத்துவது எளிது என்பதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஜம்மு - காஷ்மீரில், குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள, கிஷ்த்வார் மாவட்டத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்
அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களை போல சீருடை அணிந்து,
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிஷ்த்வார் மாவட்டத்தை
சேர்ந்த இளைஞர்கள், ராணுவ வீரர்களை போன்ற சீருடை அணிய வேண்டாம்.
தீவிரவாதிகள், ராணுவ சீருடை போல் உடை அணிந்து, தாக்குதல் நடத்த
வாய்ப்புள்ளது.
எனவே, பாதுகாப்பு படையினருக்கு, தீவிரவாதிகளை அடையாளம் காண்பதில் குழப்பம்
ஏற்படும் என்பதால், பொதுமக்கள், ராணுவ சீருடை போன்ற உடைகளை அணிவதை தவிர்க்க
வேண்டும். அதேபோல், துணி கடைகளிலும், ராணுவ சீருடை போன்ற உடைகளை விற்க
வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய ராணுவத்தின் சீருடையை மாற்றுவதற்கான ஆய்வுகளை
பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவ வீரர்கள் அணிந்திருக்கும் சீருடையானது டெரிகாட் ஃபைபர்
(terrycot fibre) வகையை சார்ந்த துணியால் செய்யப்பட்டதாகும். இது வெயில்
காலங்களில் வீரர்களுக்கு அசவுரியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்
அனைத்து சீதோசன நிலைகளிலும் வீரர்கள் அணியும் வகையில் புதிய சீருடையை
உருவாக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சமுதாயத்தில் வெற்றி பெறுவதற்கு செல்வாக்குடன் திகழ்வதற்கும், நீங்கள்
நிறைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிலையான முயற்சி ஆகியவற்றைச்
செய்ய வேண்டும். வெறுப்பை உமிழும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ளும்
பக்குவம் இருக்க வேண்டும்.
இதுவும் அதுபோன்ற ஒரு வழக்கு தான். ஒரு திறமையான சிறுவன்,
இன்ஸ்டாகிராமில் பெண் போல் வேடமணிந்து பல பேர் பின்தொடரும் ஒரு பிரபலமாக
இருந்து வருகிறான். அவன் தன்னுடைய பணத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்கும்
நிலையை அடைந்து விட்டான். அவன் கதையை பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.
சிறுவன்
தாய்லாந்தை சேர்ந்த 12 வயது சிறுவன் நெஸ் ஹெயில்ஸ். இந்த சிறு வயதில் ஒரு
மிகப் பெரிய பிரபலமாக வலைத்தளங்களில் வலம் வரும் இவன், இன்று சமூகத்தில்
அதிக பணம் ஈட்டும் சிறுவனாகவும் இருக்கிறான். தன்னுடைய குடும்பத்திற்காக
ஒரு வீடு வாங்கும் அளவிற்கு அவனுடைய நிதி நிலைமை வளர்ந்துவிட்டதாக அவன்
கூறுகிறான்.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தனது சமூக ஊடகங்களில்
பெண் போல் மேக்கப் மற்றும் உடை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறான்
இந்தச் சிறுவன். அவன் சிறு வயதில் தன்னுடைய தாயின் மேக்கப் சாதனங்களை
எடுத்து விளையாடத் தொடங்கினான் என்று கூறப்படுகிறது.
அவனுடைய ஆர்வத்தை அவன்
பெற்றோர் ஊக்குவித்து மேலும் அவனுடைய பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ள சில
குறிப்புகளையும் வழங்கி வந்திருக்கின்றனர்.
தற்போது அந்தச் சிறுவனை பின்தொடரும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள்
280,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
அந்தச் சிறுவன் ஒரு பெண்ணாக ஆடைகளை
அணிந்தும், மேக்-அப் குறிப்புகளைக் கொடுத்தும், தன்னைப் பற்றிய
புகைப்படங்களையும் இடுகையிடுவதால், சமூக ஊடகங்களில் ஒரு
செல்வாக்குமிக்கவராக தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.
வைரலாகும் சிறுவன்...
நெஸ் தன்னுடைய குடும்பத்திற்காக கட்டிய புதிய வீடு குறித்த புகைப்படங்களை
வெளியிட்டவுடன் ஆசியாவின் தலைப்பு செய்தியாக மாறி இருந்தான்.
நெஸ்
அலங்காரம் செய்யும் போது, ஆடம்பரமான ஆடைகளில் போஸ் கொடுப்பதன் மூலமாகவோ
அல்லது ஈர்க்கக்கூடிய விக் அணிவதன் மூலமாகவோ, போலி கண் இமைகள் அணிவதன்
மூலமாகவோ தன்னை ஒரு பெண்ணாக தோற்றமளிக்க தனது திறமைகளைப் பயன்படுத்துவதன்
காரணமாக பலரும் அவனைப் பின்தொடரும் நிலைக்கு வந்திருக்கிறான்.
நெஸ்ஸின்
அலங்காரம் மற்றும் பாணி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, இது சில
தொழில்முறை ஒப்பனை கலைஞர்களை வெட்கப்பட வைக்கும் அளவிற்கு உள்ளது என்பது
மிகை அல்ல.
புகைப்படங்கள்
நெஸ்ஸின் இந்த பொழுபோக்கு காரணமாக அவனுடைய நண்பர்கள் சில முறை அவனை கிண்டல்
செய்ததாகவும் அவன் கூறுகிறான். ஆனால் அவன் பொழுதுபோக்கில் அவனுக்கு உள்ள
ஆர்வம் காரணமாக அவற்றை அலட்சியம் செய்து விடுகிறான். இதில் தான் அவனுடைய
சந்தோசம் உள்ளது என்று அவன் நம்புகிறான்.
விளம்பர ஒப்பந்தங்கள்
நெஸ் மிகவும் இலாபகரமான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு
நிகழ்வுகளுக்கான அழைப்புகளைப் பெற்று வருகிறான். தாய்லாந்தில் மட்டும் இவன்
நட்சத்திர அந்தஸ்தைப் பெறவில்லை, சீனா போன்ற அயல்நாடுகளில் இருந்தும்
அவனுக்கு பல அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
"முதல்ல மூடு கிரியேட் பண்ணனும்" என்று டயலாக் சொல்லி டிக்டாக்
ஆப்பில் நந்தினி என்ற இளம்தாய் பாடுவதும், நடிப்பதும் இணையத்தில் வைரலாகி
வருகின்றன.
திருச்சியை சேர்ந்த தம்பதி மகேஷ் - திவ்யா. இவர்கள் தங்கள் வீட்டை
எதிர்த்து கடந்த 2008-ம் ஆண்டு காதல் கல்யாணம் செய்து கொண்டார்கள். கடந்த
2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் கருத் வேறுபாடு
காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
திவ்யாவுடன் குழந்தை வளர்கிறான். இந்நிலையில், திவ்யாவுக்கு வேறு ஒரு
நபருடன் தகாத உறவு இருப்பதாகவும், அந்த நபர் தன் மகனை அடித்து
கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யாவின் கணவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
வீடியோ ஆதாரம்
அந்த மனுவில், "மனைவி என்னை விட்டு பிரிய காரணம், Smule, Facebook மற்றும்
டிக்டாக் போன்றவைதான்" என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான
ஆதாரங்களையும் வெளியிட்டார். அதில் மனைவி திவ்யா டிக்டாக் ஆப்பில் பாடி,
ஆடி, நடித்திருக்கும் 2 வீடியோக்கள் உள்ளன.
பனி ராத்திரி
அதில், "இதுக்கெல்லாம் முதல்ல மூடு கிரியேட் பண்ணணும்.. இப்ப பாரு..
சிவராத்திரி.. தூக்கம் ஏது ஹோய்.. முதல் ராத்திரி தொடங்கும்போது.. பனி
ராத்திரி.. பட்டு பாய் விரி.. சுப ராத்திரி ஹோய்.. புது மாதிரி விடிய
விடிய" என்று டூயட் பாடுகிறார்.
டயலாக்
இன்னொரு வீடியோ இது: "தளபதி.. நீங்க தியேட்டர்ல நின்னு படம் ஓட்டுனது..
பஞ்சாயத்துல நின்னு பவுசு காட்டினது.. ஆல் டீடெயில் ஐ நோ.. ஆசையை பாரு..
அதெல்லாம் ஒன்னுமில்லை.. உங்க புல்லட்டு பார்த்துதான் உங்களை லவ் பண்ணேன்"
என்று லவ் டயலாக் பேசி ஒரு வீடியோவில் நடித்துள்ளார்.
மகன் விளையாட்டு
இந்த சமயத்தில் திவ்யாவின் மகன் சட்டை கூட இல்லாமல் வெற்று உடம்போடு,
தன்னத்தனியாக உட்கார்ந்து விளையாடி கொண்டிருக்கிறான். அவனுக்கு அங்கு
என்னநடக்கிறது என்று கூட தெரியவில்லை. அம்மா செல்போன் வைத்துகொண்டு யாருடன்
என்ன பேசுகிறார் என்றுகூட தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடியே விளையாடி
கொண்டிருக்கிறான்
விபரீதம்
இளம் தலைமுறைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த, ஸ்மியூல், டிக்டாக் போன்ற
ஆப்புகள் உதவியாக இருக்கின்றன என்பது சந்தேகம் இல்லை. நீதிமன்ற தடையையே
எதிர்த்து வாதிட்டு, பிறகு அனுமதி பெற்று இந்த ஆப்புகள் தொடர்ந்து
நடைமுறையில் இப்போது உள்ளன. ஆனால் ஒரு குடும்பத்தை சீரழிக்கும் அளவுக்கும்,
கொலை வரை முடியும் வீபரீதத்துக்கும் ஒரு வரைமுறை இல்லையா.. அளவுக்கு
மிஞ்சினால் அவ்வளவும் கேடுதான்!
தாலி கட்டும் நேரம் நெருங்கிவிட்டது.. அந்த சமயத்தில் கல்யாண பொண்ணு
இப்படி அதிரடியான காரியத்தை செய்துவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு
இளைஞருக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று கல்யாணம்
ஏற்பாடு செய்யப்பட்டது.
பாகோடு பகுதியில் உள்ள ஒரு சிஎஸ்ஐ சர்ச்சில்தான் கல்யாணம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இரு வீட்டு தரப்பிலும் உறவினர்கள், நண்பர்கள்
குவிந்து வர ஆரம்பித்துவிட்டனர்.
தாலி
மணமகனின் கையில், மணமகளின் கையை பிடித்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு பிறகுதான் தாலி கட்டும் நிகழ்வு நடக்கும். அதற்கு முன்பு சபை போதகர்
வாக்குறுதிகளை வாசிப்பதும், அந்த வாக்குறுதிகளை மணமக்கள் ஏற்றுக் கொள்வதாக
பதிலுரைப்பதும் வழக்கம். அதன்படியே போதகரும் வாக்குறுதிகளை வாசிக்க
ஆரம்பித்தார்.
மயங்கினார்
ஆனால் மணப்பெண்ணிடம் இருந்து பதிலே வரவில்லை. திடீரென மயங்கி கீழே
விழுந்தார். இதை பார்த்து சர்ச்சில் இருந்த எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மணப்பெண் வீட்டுக்காரர்கள் அவரை தூக்கி சர்ச்சின் உள்பகுதியில்
உள்ள ரூமுக்கு தூக்கி சென்றனர்.
உடனடியாக ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டார்.
மணப்பெண்ணை செக் செய்து பார்த்துவிட்டு, "நல்லாதானே இருக்காங்க.. ஒரு
பிரச்சனையும் இல்லையே.. கல்யாணத்தை நடத்துங்க" என்றார்.
கெஞ்சினார்
அப்போது கல்யாண பெண் திடீரென அந்த டாக்டரின் கையை பிடித்து கொண்டு, "என்னை
காப்பாத்துங்க டாக்டர். எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல. இதை எப்படியாவது
நிறுத்திடுங்க" என்று கெஞ்சினார். வருங்கால மனைவியான கல்யாண பொண்ணுக்கு
என்ன ஆச்சோ என்று பதறி தவித்து நின்று கொண்டிருந்த மாப்பிள்ளை இந்த
வார்த்தைகளை கேட்டுவிட்டார்.
பேச்சுவார்த்தை
இருந்தாலும் மணப்பெண்ணை தனியாக கூப்பிட்டு பேசி பார்த்தார். உங்களை எனக்கு
பிடிக்கல என்று அந்த பெண் சொல்லிவிட்டார். மாப்பிள்ளையை தொடர்ந்து இரு
வீட்டு நபர்களும் பெண்ணிடம் பேசியும் ஒன்றும் வேலைக்காகவில்லை.
இதுக்குமேல
கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணினால் சிக்கல்தான் ஏற்படும் என்பதால்
உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறு போதகர் சொல்லிவிட்டார். உடனே பெண் வீடு,
மாப்பிள்ளை வீடு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டு கொள்ள
ஆரம்பித்தனர். பிறகு அங்கிருந்தவர்கள் அவர்களை சர்ச்சை விட்டு ஒருவழியாக
வெளியேற்றினர்.