Run World Media: 07/20/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, July 20, 2019

பைக்கை நிறுத்தி விட்டு... இளம்பெண்ணை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்.. ஈரோட்டில் பரபரப்பு

இளம்பெண்ணை இழுத்து வைத்து கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர், பிறகு அவசர அவசரமாக தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு மின்னலென பறந்துவிட்டார்..

ஏன்? கவுந்தப்பாடி அருகே உள்ள பகுதி செந்தாம்பாளையம். இங்கு ஒரு இளம்பெண் தோட்டத்து பாதையில் கவுந்தப்பாடியை நோக்கி தன்னுடைய வீட்டுக்கு டூ வீலரில் போய் கொண்டிருந்தார். 


அப்போது பின்னாடியே ஒரு இளைஞர் பைக்கில் வந்தார். திடீரென அந்த பெண்ணின் டூவீலர் மீது பைக்கில் இடித்தார். இதில் நிலைகுலைந்து அந்த பெண் கீழே விழுந்துவிட்டார்.

பிறகு அவரது கன்னத்தில் பளார் பளார் என அறைவிட்டார். இதில் அந்த பெண் அலறினார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அந்த இளைஞர் பைக்கை எடுத்து கொண்டு திரும்பி பார்க்காமல் பறந்தார். 
நடந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசில் பெண் புகார் கொடுக்கவும், இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் விசாரணையில், அந்த இளைஞர் பெயர் வல்லரசு என்பதும் வயசு 20 என்பதும் தெரியவந்தது.

இவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறாராம்.. ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு வல்லரசுவை பிடிக்கவில்லை. பலமுறை காதலை சொல்லியும் அந்த பெண் வல்லரசுவை ஏற்று கொள்ளவில்லையாம். 
இதனால் டென்ஷன் ஆகிவிட்ட வல்லரசு, தன் காதலியை நாலு சாத்து சாத்தலாம் என்று முடிவு செய்துள்ளார். அதற்காக விரட்டி வந்து, பளார் பளார் என நாலு அறை விட்டு, அந்த பெண் கீழே விழுந்து எழுந்த பிறகுதான் அவர் காதலி இல்லை, வேறு ஒரு பெண் என தெரியவந்துள்ளது.

முகத்தை பார்த்ததும், பைக்கை எடுத்து கொண்டு எஸ்.ஆகி உள்ளார். இந்த விசாரணைக்கு பிறகு வல்லரசுவை கவுந்தப்பாடி போலீசார் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் ஜெயிலில் அடைத்தனர்.


வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்தது இதற்குதான்.. தப்பை சரியாக செய்யாததால் சிக்கி கொண்ட 20 வயது இளம்பெண்

வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த 20 வயது இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.


இன்றைய சூழலில் கார் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. ஒரு கார் இருந்தால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் ஒன்றாகவும், சௌகரியமாகவும் சென்று வர முடியும். 
இல்லாவிட்டால் ஆட்டோவிலோ அல்லது பஸ்ஸிலோ கூட்ட நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி பயணிக்க வேண்டியதிருக்கும்.

அதுவும் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு எல்லாம் சென்று வர முடியாது. இதுதவிர கார்கள் என்பவை ஒருவரின் அந்தஸ்தை வெளிக்காட்டும் விஷயமாகவும் பார்க்கப்படுகின்றன.
 இதுபோன்ற காரணங்களால்தான் கார்களுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கவே செய்கிறது.


ஆனால் ஒரு சிலரால் மட்டுமே சொந்த கார் கனவை நிறைவேற்ற முடிகிறது. மற்றவர்களுக்கு சொந்த கார் என்பது எட்டாக்கனியாகவே மாறி விடுகிறது. கார்கள் சற்று விலை உயர்ந்தவை என்பதே இதற்கு முக்கியமான காரணம். எனினும் தொடர்ந்து பலர் அந்த கனவை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து கொண்டுதான் உள்ளனர்.


ஆனால் இங்கே ஒரு பெண் கார் வாங்க வேண்டும் என்பதற்காக வினோதமான ஒரு முயற்சியை செய்து சிக்கலில் சிக்கி கொண்டிருக்கிறார். கார் வாங்க பணம் இல்லாததால், அவர் தனது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளார். அதுவும் கள்ள நோட்டுகளை அச்சடிக்க அவர் மிகவும் சாதாரணமான பிரிண்டர்களை பயன்படுத்தியுள்ளார்.

கள்ள நோட்டு பிரச்னை இன்று அனைத்து இடங்களிலுமே காணப்படுகிறது. கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்தால், பொருளாதார ரீதியிலான சவால்களையும் ஒரு நாடு எதிர்கொள்ள நேரிடும். 
எனவே கள்ள நோட்டுகளை அச்சடிப்பதும், புழக்கத்தில் விடுவதும் சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இருந்தபோதும் இவற்றை எல்லாம் கடந்து கள்ள நோட்டுகள் எப்படியாவது புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் சட்ட விரோத கும்பல் இதற்காக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். 

அவர்கள் அச்சடிக்கும் கள்ள நோட்டுக்கள் அச்சு அசலாக நல்ல நோட்டுகளை போலவே இருக்கும். இதற்கான நுணுக்கங்களையும் அவர்கள் கற்று கொள்கின்றனர்.

எனவே எது நல்ல நோட்டு? எது கள்ள நோட்டு? என்ற வித்தியாசத்தையே உங்களால் கண்டறிய முடியாது. ஆனால் இந்த பெண் தனது வீட்டில் சாதாரண பிரிண்டரில் அச்சடித்த கள்ள நோட்டுகளை கார் டீலர்ஷிப்பில் கொடுத்துள்ளார். ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள Kaiserslautern என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உள்ளூரில் உள்ள டீலர்ஷிப் ஒன்றுக்கு சென்ற அந்த பெண், கார் வாங்குவது தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காருக்கு அவர் 'கேஷ்' கொடுக்கும் வரை அனைத்தும் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. 

அதன்பின்தான் சிக்கலே வந்தது. காருக்காக 15 ஆயிரம் யூரோ மதிப்பிலான கள்ள நோட்டுகளை அந்த பெண், ஊழியர்களிடம் வழங்கியுள்ளார்.


கார் டீலர்ஷிப் ஊழியர்கள் பார்த்த உடனேயே இதனை கள்ள நோட்டு என கண்டுபிடித்து விட்டனர். எனவே அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 இதன் பேரில் விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் அவரது வீட்டில் ரெய்டும் நடத்தினர். அங்கு சாதாரண பிரிண்டரும், மேலும் 13 ஆயிரம் யூரோ கள்ள நோட்டுக்களும் இருந்தன.


கள்ள நோட்டு அச்சடிப்பதற்கான உபகரணங்களோ அல்லது அதற்கான அடிப்படை அறிவோ அந்த பெண்ணிடம் இல்லை. இருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில், அவர் இதனை செய்து சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் அவருக்கு 20 வயது மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

சந்தையில் புழக்கத்தில் விடும் நோக்கத்துடன் கள்ள நோட்டுகளை அச்சடிப்பது என்பது ஜெர்மனியில் சட்ட விரோதம். 
இந்த குற்றத்திற்கு அங்கு குறைந்தபட்சம் ஒரு வருட சிறை தண்டனையாவது விதிக்கப்படும். கார் வாங்குவதற்கு மாத தவணை முறை உள்பட ஏராளமான எளிமையான வழிமுறைகள் இருக்கவே செய்கின்றன.


விலை சற்று அதிகம் என்பதால், புதிய காரை வாங்க முடியாவிட்டாலும் கூட, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் மிக குறைவான விலையில், நல்ல தரமான கார்களும் கிடைக்கின்றன.
 அவற்றில் ஒரு நல்ல காரை தேர்வு செய்தால், உங்கள் பர்சுக்கும் பங்கம் ஏற்படாது. எனவே கார் வாங்க இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான வழிகளை எல்லாம் தேர்வு செய்ய வேண்டாம்.


பணத்தை ஆட்டையை போட்ட கணவன்... கேள்வி கேட்ட மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கொடூரம்

வேலைக்கு போகாமல் வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்த கணவன் ஒருவன் குடும்ப சண்டையில் மனைவியின் மூக்கைக் கடித்து காயப்படுத்தியிருக்கிறான்.

பர்ஸ்சில் இருந்து பணத்தை எடுத்தியா என்று கேள்வி கேட்டதற்காக மனைவியின் மூக்கை காயப்படுத்தி 15 தையல் போட வைத்திருக்கிறான். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் கோடாசார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளனது.

 பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா குல்வானி. 40 வயதாகும் ரேஷ்மாவின் கணவர் பெயர் கைலாஷ் குமார்.வேலையில்லாத வெட்டி ஆபிசர். ரேஷ்மா கைலாஷ் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். பாவேஷ் கல்லூரியில் படிக்கிறார். பாவனா டியூசன் சென்டரில் வேலை செய்கிறார். தீபக் 12ஆம் வகுப்பு படிக்கிறார்.


வீட்டு வேலையும் செய்து கொண்டு, படிக்கும் பிள்ளைகளுக்கு அனைத்து வேலைகளை செய்து விட்டு வேலைக்கும் போய் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். 
சம்பளப்பணத்தில் செலவு செய்தது போக அவசிய தேவைக்காக ரூ. 3000 பர்சில் வைத்திருந்தார். செவ்வாய்கிழமை பர்ஸை பார்த்த ரேஷ்மாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. பர்சில் இருந்த பணத்தை காணவில்லை.

 யார் எடுத்திருப்பார்கள் என்ற யோசனையில் பிள்ளைகளிடம் கேட்டார். அவர்களும் பணத்தை பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர். தனது கணவன் கைலாஷ்குமாரிடம் 3000 பணத்தை எடுத்தியா என்று கேட்டார். அதற்கு முதலில் மறுத்த அவன், பின்னர் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டதாக கூறினான். 

அதற்கு கணவனை திட்டி சண்டை போட்டார் ரேஷ்மா. கைலாஷ் குமாரின் கோபம் அதிகரித்தது. மாறி மாறி சண்டை போட்டு திட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த கைலாஷ் குமார் ரேஷ்மாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச்சென்று கீழே வீசினார்.

 முகத்தின் அருகே வாயை கொண்டு போய் மூக்கை கடித்து துப்பினார். இதில் ரேஷ்மா அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரேஷ்மாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
ரேஷ்மா அளித்த புகாரின் பேரில் கைலாஷ் குமார் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். படுகாயமடைந்த ரேஷ்மாவின் மூக்கின் மேல் 15 தையல் போடப்பட்டுள்ளது. ஐசியுவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 
வெட்டியாக ஊரைச்சுற்றிய கணவன், பர்ஸில் இருந்து பணத்தை எடுத்ததோடு கேள்வி கேட்ட மனைவியை படுகாயப்படுத்திய சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்