Run World Media: 08/14/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, August 14, 2019

பச்சைக் குழந்தைம்மா.. வெறும் 1000 ரூபாய்தான்.. வாங்கிங்கய்யா..

தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாததால் அதை ரூ 1000-த்துக்கு விற்பனை செய்ய முயன்ற தாயை போலீஸார் கைது செய்தனர். 
 
வாராங்கல்லில் ஜாங்கான் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜையா. இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. ராஜையா எந்த வேலைக்கும் செல்லாததால் கைக் குழந்தையை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் சுஜாதா கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சுஜாதாவுக்கும் ராஜையாவுக்கும் நேற்று தகராறு நடந்தது.

கூவி ஏலம் 
இதையடுத்து சுஜாதா கணவரிடம் கோபித்து கொண்டு வாராங்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து விடுவதாக கூவி கூவி ஏலமிட்டார்.

விசாரணை  
விசாரணை இதனால் சுஜாதாவின் ஊர்காரர்களும் ஜாங்கான் மாவட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

வாராங்கல்  
அப்போது தனது கணவர் சரியில்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இதனால் குழந்தையை விற்க முயற்சித்தேன் என்றார். பின்னர் மேலும் விசாரணையில் நான் வாராங்கல் பஸ் நிலையத்திலிருந்து ஊருக்கு திரும்ப சிலரிடம் பணம் கேட்டேன்.


போலீஸ் கைது 

அதற்கு அவர்கள் குழந்தை கொடுத்துவிட்டு போ என்றனர் என சுஜாதா தெரிவித்தார். மேலும் குழந்தைக்கு 20 நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளித்த நிலையில் மருத்துவரை மீண்டும் சந்திக்க செல்வதாகவும் சுஜாதா தெரிவத்தார். இதுபோல் மாற்றி மாற்றி பேசுவதால் சுஜாதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

காப்பகத்தில் 
குழந்தைகள் நல குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தாய் மனநிலை சரியில்லாதவர் போல் பேசுவதால் குழந்தையை அதற்கான காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

1½ வருடம் சினிமாவுக்கு முடக்கு; நடிகை சமந்தா கர்ப்பம்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. இரண்டு மொழி படங்களிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்த படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன.
மெர்சல், தெறி, அஞ்சான், இரும்புத்திரை, யூடர்ன், நடிகையர் திலகம், தங்க மகன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்டவை சமந்தா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.

தெலுங்கில் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஓ பேபி’ படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெற்றி பெற்ற ‘96’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் திரிஷா வேடத்தில் நடித்து வருகிறார்.


சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் அவரது மார்க்கெட் குறையவில்லை. இந்தநிலையில் சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்க முடிவு செய்துள்ளார்.

1½ வருடங்கள் புதிய படங்கள் எதிலும் நடிக்க மாட்டேன் என்று தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவர் கூறிவிட்டாராம். கைவசம் உள்ள 96 படத்தை விரைவாக முடித்து விட்டு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.

சன்னி லியோனோனுக்கும் மோடிக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னனு தெரியுமா?

கூகுள் தேடுதல் பட்டியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர் பிரபலம் நடிகை சன்னி லியோன் தான் என கூகுள் அறிவித்துள்ளது.பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு இந்தியாமுழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக சன்னி லியோன் நீடித்து வருகிறார்.

 இந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் சன்னி லியோன் தான் டாப்பில் இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான்,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விடவும் சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகம் பேர் சன்னி லியோனைத்தான் தேடி இருக்காங்களாம். பெரும்பாலானோர் சன்னி லியோன் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத்தான் விரும்பி பார்த்துள்ளார்களாம். மேலும் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட தொடரையும் கூகுளில் விரும்பி பார்த் உள்ளார்களாம்மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சன்னிலியோனை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகம் தேடியிருக்காங்க என்று கூகுள் சொல்லியிருக்கிறது.

 அதிலும் . குறிப்பாக மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் சன்னி லியோனை கூகுளில் தேடியதாகவும் கூகுள் கூறியுள்ளது. இதுபற்றி அறிந்து நடிகை சன்னி லியோன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்த பெருமைக்கு தன்னுடைய ரசிகர்கள்தான் காரணம் என்கிறார்.Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்